Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
2023 புத்தாண்டின் போது இந்த விஷயங்களை மறந்தும் செஞ்சுடாதீங்க.. இல்லன்னா துரதிர்ஷ்டம் துரத்தும்..
பெரும்பாலானோர் புத்தாண்டு தினத்தில் அந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென்று கோவிலுக்கு செல்வார்கள். அப்படி சென்றால் மட்டும் போதாது, புத்தாண்டு நாளில் ஒருசில விஷயங்களை செய்யக்கூடாது.
New Year 2023: 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். அனைவரும் வரக்கூடிய புத்தாண்டில் என்ன செய்யலாம், எந்த மாதிரியான உறுதிமொழிகளை எடுக்கலாம், எம்மாதிரி புத்தாண்டை கொண்டாடலாம் என்றெல்லாம் இந்நேரம் திட்டம் போட்டுக் கொண்டிருப்போம். மேலும் ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம்.

அதற்காக பெரும்பாலானோர் புத்தாண்டு தினத்தில் அந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென்று கோவிலுக்கு செல்வார்கள். அப்படி சென்றால் மட்டும் போதாது, புத்தாண்டு நாளில் ஒருசில விஷயங்களை செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது அந்த ஆண்டில் பல பிரச்சனைகளை சந்திக்க வைப்பதோடு, துரதிர்ஷ்டம் துரத்துவதாக கூறுப்படுகிறது. இப்போது புத்தாண்டு நாளில் எந்த விஷயங்களை ஒருவர் செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

சண்டைகள் கூடாது
புத்தாண்டு நாளில் உங்கள் வீட்டில் சண்டைகள் போடுவதைத் தவிர்த்திடுங்கள் மற்றும் பெரியவர்களை அவமரியாதை செய்வதைத் தவிர்த்திடுங்கள். முடிந்த வரை ஆண்டின் முதல் நாளில் யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகள் கூடாது
2023 புத்தாண்டு தினத்தின் போது கருப்பு நிற ஆடைகளை அணியாதீர்கள். அதேப் போல் திருமணமான பெண்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும். ஆண்டின் முதல் நாளில் இந்த வண்ணங்களைப் பயன்படுத்துவதால், அது ஆண்டு முழுவதும் சிக்கலைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்
2023 புத்தாண்டின் முதல் நாளில் அசைவ உணவுகள் உண்பதை மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்வாறு செய்வது குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

கடனை தவிர்க்கவும்
புத்தாண்டின் முதல் நாளில் யாரிடமும் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒரு நன்னாளில் இச்செயலை செய்யும் போது, அது லட்சுமி தேவியை அதிருப்தி அடையச் செய்து, ஆண்டு முழுவதும் பணப்பிரச்சனையை சந்திக்க வைக்கும்.

காலியாக எதுவும் இருக்கக்கூடாது
2023 புத்தாண்டின் முதல் நாளில் உங்களின் பர்ஸ் காலியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவ்வாறு ஒருவரது பர்ஸ் காலியாக இருந்தால், அது அந்த ஆண்டு முழுவதும் நிதி சிக்கல்களை சந்திக்க வைப்பதாக நம்பப்படுகிறது. அதேப் போல் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 01 ஆம் தேதி வீட்டில் உள்ள எந்த ஒரு அலமாரியையும் அல்லது பெட்டகத்தையும் காலியாக வைக்காதீர்கள், ஏனெனில் அது வீட்டினுள் எதிர்மறை சக்தியை வரவழைக்கும்.

இருட்டான வீடு கூடாது
புத்தாண்டின் முதல் நாளில் வீடானது பிரகாசமாக இருக்க வேண்டும். பிரகாசமான வீட்டில் தான் லட்சுமி குடிபுகுவாள். அதை விட்டு வீட்டை இருட்டாக வைத்திருந்தால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழைந்து, அந்த வீட்டினுள் பிரச்சனையை வரவழைக்கும் என்று நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications