For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்வி ஞானம் அருளும் சரஸ்வதி தேவி - என்னென்ன படைக்கணும் தெரியுமா?

சாரதா நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இன்று முதல் மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரிய நாள். இன்று அன்னை சரஸ்வதியை வணங்குவோர்க்கு கல்வி, ஞானம் ஆகியன கிடைப்பத

|

சாரதா நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இன்று முதல் மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரிய நாள். இன்று அன்னை சரஸ்வதியை வணங்குவோர்க்கு கல்வி, ஞானம் ஆகியன கிடைப்பதோடு செல்வச் செழிப்பும் காரிய வெற்றியும் வாய்க்கும் என்பது ஐதிகம்.

நவராத்திரி ஒன்பது நாள்களும் கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். முதல் மூன்று நாள்கள் அன்னையை துர்கை வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமி வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் சரஸ்வதி வடிவிலும் வணங்குவது மரபு. நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியன. இந்த நாட்களில் தமிழகத்திலுள்ள எல்லா சரஸ்வதி தேவி கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நவராத்திரி பண்டிகை நாளில் ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள்.

Saraswati Puja

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நாளாகும். இன்று முதல் சரஸ்வதிக்கு வழிபாடு தொடங்கியுள்ளது. கூத்தனூர் சரஸ்வதி கோயில்,வேதாரண்யத்தில் வீணையில்லாத சரஸ்வதி, கண்டியூர், உத்திர மேரூர், காஞ்சிபுரம் காமாட்சி, மதுரை மீனாட்சி, லால்குடி, தஞ்சை பெரிய கோயில் கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூந்துருத்தி, போளூர், நாகூர், சோமநாதபுரம் கேசவர், ஹளபேடு ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி தேவியை கல்வி, செல்வம், வெற்றிகள் ஆகியவற்றை அள்ளித் தரும் தேவியாகப் பூஜை செய்யும் நாள்களே சரஸ்வதி பூஜையும் விஜயதசமியும் மூலத்தில் பிடித்து அவிட்டத்தில் விடு' என்பது சாஸ்திர மொழி. அதாவது, நவராத்திரியில் வரும் மூல நட்சத்திர நாளில் சரஸ்வதி பூஜையைத் தொடங்க வேண்டும். பூஜையைத் தொடங்க முதலில் அன்னையை ஆவாஹனம் செய்ய வேண்டும். சரஸ்வதியை விக்ரகங்களில் படங்களில் ஆவாஹனம் செய்யலாம். நாம் சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை அடுக்கி அவற்றின்மேல் சரஸ்வதி படத்தையோ விக்ரகத்தையோ வைத்து வழிபடுகிறோம்.

MOST READ: நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ்னு ஒரு நோயா?... இது யாருக்கெல்லாம் வரும்னு தெரியுமா?

ஞானத்தை வழங்கும் தேவி

ஞானத்தை வழங்கும் தேவி

நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி தான். சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். கல்வியை வற்றாத உற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது, வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாய் ஐதீகம்.

சரஸ்வதியின் உருவம்

சரஸ்வதியின் உருவம்

சரஸ்வதி வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை. ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். சரஸ்வதியை ஆற்றங்கரைச் சொற்கிழத்தி என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. அறிவே ஞானமே மனிதனின் ஆயுதம். ஞானம், அறிவு இவற்றின் பொது வடிவம் சரஸ்வதி. அறிவும், ஞானமும் உறுதியானது. நம்முடனே வருவதும் அன்னத்தினை வாகனமாகக் கொண்டும் சரஸ்வதியினை நாம் பார்க்கின்றோம். அன்னம் பாலினையும், நீரினையும் பிரித்து பாலினை மட்டும் எடுத்துக் கொள்வது போல் நாம் ஞானத்தினை எடுத்துக் கொண்டு அக ஞானத்தினை நீக்க வேண்டும் என்பது பொருள்.

சரஸ்வதிக்கு படையல்

சரஸ்வதிக்கு படையல்

இன்று மூல நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் நல்ல நேரம் பார்த்து சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்யலாம். சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து நூல்களை வைத்துவிட்டால் நான்குநாள்கள் கழித்து அவிட்ட நட்சத்திரத்தன்றுதான் எடுக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை நாளில்தான் நோட்டு புத்தகங்களை வைத்து வழிபட்டு மறுநாள் விஜயதசமி நாளில் எடுத்து படிக்கத் தொடங்குகின்றனர். சரஸ்வதி தேவியை தாழம்பூ, ரோஜா, தாமரை ஆகிய மலர்கள் கொண்டு துதிக்கலாம். பேரிச்சை, திராட்சை, நாவல் ஆகிய பழங்களையும் எலுமிச்சை சாதம், பால் சாதம், அக்கார வடிசல் ஆகிய நைவேத்தியங்களையும் சமர்ப்பிக்கலாம்.

MOST READ: மகாலட்சுமி அருள் எந்த ராசிக்கு இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?... இத படிங்களேன்...

பூஜை செய்ய நல்ல நேரம்

பூஜை செய்ய நல்ல நேரம்

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அஷ்டமி முடிந்து நவமி திதி அக்டோபர் 6ஆம் தேதி 10.54 மணிக்கு தொடங்குகிறது. அக்டோபர் 7ஆம் தேதி 12.38 மணிக்கு நவமி திதி முடிவடைகிறது. ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணிவரை காலை 9 மணி முதல் 9.30 வரை பகல் 12.10 மணிவரை 12.35 மணிவரை பூஜை செய்யலாம். விஜயதசமி அக்டோபர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முதல்நாள் சாமி கும்பிட்டவர்கள் மறு பூஜை செய்ய நல்ல நேரம் காலை 5 மணி முதல் 6 மணிவரை காலை 10.30 மணி முதல் 11 மணிவரை நல்ல நேரம் உள்ளது இந்த நேரத்தில் பூஜை செய்து வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும்.

சரஸ்வதி யோகங்கள்

சரஸ்வதி யோகங்கள்

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருந்தால் வித்யா யோகம். வித்தை, கல்வி, புகழ் கிடைக்கும். ஜாதகத்தில் 1, 2, 4, 5, 9 ஆகிய வீடுகள், அவற்றின் அதிபதிகள் பலம் பெறுவது முதல்தர கல்வி யோகமாகும். தனகாரகன் குரு களத்திரகாரகன் சுக்ரன் வித்யாகாரகன் புதன் ஆகிய மூவரும் லக்ன கேந்திரம், திரிகோணம் அல்லது இரண்டாமிடம் 1,2,4,5,7,9,10 ஆகிய இடங்களில் இருந்தால் சரஸ்வதி யோகம் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன. இந்த யோகம் பெற்றவர்கள் ஆயகலைகள் 64ல் குறைந்தது 6,7 கலைகளிலாவது பாண்டித்தியம் பெற்று இருப்பார்கள்.

புத்திசாலிகள்

புத்திசாலிகள்

புத்திசாலி பிள்ளைகள் வேண்டும் என்பதே பலரது ஆசை. வித்யாகாரகன், கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். கல்வி அறிவு மிகச் சிறப்பாக இருக்கும், வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அமையும்.

MOST READ: சித்தர்கள் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த வாழை இலை துவையல்... எப்படி செய்வது?...

சரஸ்வதியை வணங்குவோம்

சரஸ்வதியை வணங்குவோம்

ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து அமையப் பெறுவது புதாத்திய யோகமாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் கல்வி கடவுளான சரஸ்வதியை வணங்கி சரஸ்வதி யோகத்தை பெற்று சிறப்பாக வாழ்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: pooja
English summary

Navratri 2019: The Many Benefits Of Saraswati Puja

Devi Saraswati above all represents the feminine principle of creation, as the consort of Lord Brahma as the creator. Read on.
Story first published: Saturday, October 5, 2019, 16:21 [IST]
Desktop Bottom Promotion