For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரி புராண கதை: ஒன்பது நாட்கள் அசுரர்களை போரிட்டு அளித்த அம்பிகை!

நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள் இன்னும் சில நாட்களில் தொடங்கப்போகிறது. எந்த ஒரு காரியமும் காரணமின்றி நடக்காது. நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவது பற்றி புராணகதைகள் சொல்லப்படுகின்றன. அரக்கனை அளிக்க அ

|

நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள் நாடெடுங்கும் தொடங்க உள்ளன. அசுரனுடன் போரிட்டு அளிக்க அம்பிகை அவதாரம் செய்திருக்கிறாள். மகிஷாசூரனை அளித்து மகிஷாசூரமர்த்தினியாய் வெற்றிவாகை சூடிய அம்பிகையை கொண்டாடுவதற்காகவே புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அம்பிகை அவதாரம் ஏன் நிகழ்ந்து. எதற்காக இந்த போர் என்றும் நவராத்திரி பற்றியும் தேவி மகாத்மியம் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அசுரர்கள் மொத்தம் எத்தனைபேர் தெரியுமா, மதுகைடபர், மகிஷாசூரன், தூம்ரலோசனன், சண்டமுண்டன், சும்பநிசும்பர், ரக்தபீஜன் என பல அசுரர்கள் இந்த மூவுலகத்தையும் ஆட்டிப்படைத்தனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என முப்பத்து முக்கோடி தேவர்களும் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர்.

Navratri Puja

மும்மூர்த்திகளும் தங்களின் சக்தியைக் கொண்டு புதிய சக்தியை படைத்தனர். மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்த அன்னை துர்க்கையாக அவதாரம் செய்தார். அனைத்துத் தேவர்களின் ஒட்டுமொத்த வடிவமே துர்க்கை என்ற தகவலை தேவி மகாத்மியம் புராணம் விவரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரக்கர்களை அளித்த அன்னை

அரக்கர்களை அளித்த அன்னை

மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள் சண்டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.

MOST READ: நவராத்திரி 2019: முப்பெரும் தேவியரை போற்றும் வழிபாடு - என்ன தானம் தரலாம்

அன்னையின் சபதம்

அன்னையின் சபதம்

தேவியானவள் அப்போது, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன் என்றாள். அதற்கு சண்டனும், முண்டனும் தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை. பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா என்றனர். அதற்கு தேவி, தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் ராஜாவிடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும் என்றாள்.

ரக்த பீஜன்

ரக்த பீஜன்

இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும் இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி. அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான். அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றி, உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது.

MOST READ: பிறவியிலேயே இந்த ரெண்டு ராசிக்காரங்களும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸா இருப்பாங்களாம்...

மகிஷாசூரவதம்

மகிஷாசூரவதம்

உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள். சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து இறந்து விடுகிறான். மும்மூர்த்திகளின் சக்தியோடும் அவர்களின் ஆயுதங்களுடனுடனும் ஒன்பது பேராக அவதரித்த அன்னை ஒன்பது நாட்கள் போரிட்டு இறுதியில் மகிஷாசூரனை வீழ்த்தி வெற்றித்திருமகளாக திகழ்ந்தாள். சும்பன், நிசும்பன்களையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டுகிறாள்.

கொலுவாக நின்ற தேவர்கள்

கொலுவாக நின்ற தேவர்கள்

மகிசாசூரனை அழிப்பதற்கு அம்பிகை அவதரித்தபோது தேவர்கள் தங்கள் சக்திகளை ஸ்ரீதேவியிடம் கொடுத்துவிட்டு பொம்மைப்போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைத்து வழிபாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆதிசக்தியானவள் இந்த அகிலத்தில் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். அவளின்றி அணுவும் அசையாது என்பதை உணர்த்துவதே கொலு தத்துவம். அதனால்தான் ஓரறிவு உயிர்கள் முதல் அனைத்துக்கும் ஆதாரமான அம்பிகை வரையிலுமான பொம்மைகள் நவராத்திரி கொலுவில் இடம்பெறும்.

கெட்ட எண்ணங்கள்

கெட்ட எண்ணங்கள்

அரக்கர்கள் போல நம் ஒவ்வொருவர் மனதிலும் தீய எண்ணங்கள் வடிவத்தில் அரக்கர்கள் இருக்கின்றனர். அந்த அரக்கர்களை அதாவது கெட்ட எண்ணங்களை அழிக்க அம்பிகை இச்சா சக்தியாக தூர்க்கையாக மூன்று நாட்கள் அவதரிக்கிறார். அந்த கெட்ட எண்ணங்கள் அழிந்த பின்னர் மூன்று நாட்கள் மகாலட்சுமியாக நமக்கு கிரியா சக்தியை அதாவது செல்வங்களை தருகிறாள் அன்னை.

MOST READ: இந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா? இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...

ஞானத்தை தரும் தேவி

ஞானத்தை தரும் தேவி

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி நமக்கு ஞான சக்தியை அளிக்கிறாள் அன்னை. பத்தாம் நாள் தசமியன்று வெற்றி திருமகளாக நமக்கு மோட்சத்தை அடைய வழிகாட்டுகிறாள். பத்து நாட்களும் பூஜைகள் செய்து அன்னையை வழிபட்டால் நம்முள் இருக்கும் தீய எண்ணங்கள் அழிந்து நன்மைகள் நடைபெறும் என்பது நம்பிக்கை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri Puja history: What Do These Nine Days Of Festivities Mean

Navratri 2020 The prominent story associated with Navratri is the battle that took place between goddess Durga and the demon Mahishasura, who represents egotism. All the nine days of the festival are dedicated to each distinct avatar of the goddess.
Desktop Bottom Promotion