For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரி நான்காம் நாள்: குஷ்மந்தா தேவிக்கான மந்திரம் மற்றும் பூஜை விதிகள்!

|

Navratri 2023: இந்தியாவில் துர்கை அம்மனுக்காக கொண்டாடப்படும் ஓர் திருவிழா தான் நவராத்திரி. ஒன்பது நாட்கள் துர்கை அம்மனின் வெவ்வேறு வடிவங்கள் வழிபடப்படுகிறது. அந்த வகையின் நவராத்திரியின் நான்காம் நான் துர்கை அம்மனின் குஷ்மந்தா வடிவம் போற்றப்படுகிறது.

துர்கை அம்மனை குஷ்மந்தா வடிவத்தில் பக்தர்கள் வணங்குவார்கள். குஷ்மந்தா என்றால் உலகைப் படைத்தவள் என்ற பொருள் அதாவது ஆதி சக்தியான துர்கை அம்மனின் படைத்தல் உருவம் தான் குஷ்மந்தா ஆகும். இப்போது நவராத்திரி நான்காம் நாள் வழிபடப்படும் குஷ்மந்தா தேவிக்கான பூஜை விதிகள், மந்திரங்கள் மற்றும் முக்கியத்துவத்தைக் காண்போம்.

Navratri 2023 Day 4, Colour, Kushmunda Puja Vidhi, Timings, Mantra, Muhurat, Vrat Katha, significance In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குஷ்மந்தா தேவி

குஷ்மந்தா தேவி

துர்கை அம்மனின் இந்த அவதாரம் இருளை நீக்கி ஒளியைப் பெற்றெடுப்பதாக நம்பப்படுகிறது. மேலும் தேவி குஷ்மந்தா தனது தெய்வீக புன்னகையால் நம்பமுடியாத ஆற்றலைப் பரப்பி உலகைப் படைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அண்டத்தை உருவாக்கியவராக அவர் வழிப்படப்படுகிறார். அவள் சூரியனின் மையத்தில் வசிப்பதால், அவள் ஒளி மற்றும் ஆற்றலைக் குறிக்கிறாள்.

தேவி குஷ்மந்தா எட்டு கைகளைக் கொண்டவள். இவரது வாகனம் சிங்கம். இந்த சிங்கமானது தர்மத்தின் வடிவம் ஆகும். குஷ்மந்தா தேவி எட்டு கரங்களில் முறையே தாமரை, வில், அம்பு, கமண்டலம், சக்கரம், தண்டாயுதம், ஜபமாலை இருக்கும். தேவியின் எட்டாவது கரத்தில் கலசம் உண்டு. இக்கலசம் அஷ்ட சித்தியையும் பக்தர்களுக்கு தர வல்லது. நோய்வாய்ப்பட்டவர்கள் தேவி குஷ்மந்தாவை வணங்குவதால் நோயில் இருந்து விடுபடுவர்.

குஷ்மந்தா பூஜை விதி

குஷ்மந்தா பூஜை விதி

குஷ்மந்தா தேவிக்கு முதலில் விநாயகரை வணங்கி பூஜையைத் தொடங்குங்கள். இதனால் உங்கள் பூஜை தடையின்றி நடைபெற விநாயகர் அருள் கிடைக்கும். மேலும் குஷ்மந்தா தேவிக்கு சிவப்பு நிற பூக்கள் மிகவும் பிடிக்கும். எனவே இவருக்கு பூஜை செய்யும் போது சிவப்பு நிற பூக்களைக் கொண்டு பூஜையை செய்யுங்கள்.

குஷ்மந்தா தேவிக்கான மந்திரம்

குஷ்மந்தா தேவிக்கான மந்திரம்

ஓம் தேவி குஷ்மண்டயாய் நம॥

சூரசம்பூர்ண கலசம் ருதிராப்ளுதமேவா சா

ததான ஹஸ்தபத்மாபியம் குஷ்மந்தா சுபதஸ்து மீ

யா தேவி சர்வபுதேஷு மா குஷ்மந்த ரூபேனா சம்ஷ்திதா

நமஸ்தஸ்ஸாய் நமஸ்தஸ்ஸாய் நமஸ்தஸ்ஸாய் நமோ நமஹ

குஷ்மந்தா தேவிக்கான பிரசாதம்

குஷ்மந்தா தேவிக்கான பிரசாதம்

குஷ்மந்தா தேவிக்கான மந்திரத்தைக் கூறி, பின் பஞ்சோபச்சார பூஜை செய்யுங்கள். முக்கியமாக குஷ்மந்தா தேவியை வழிபடும் போது அவருக்கு பிடித்த அல்வா, மல்புவா அல்லது தயிரை பிரசாதமாக படையுங்கள். இறுதியில் ஆரத்தி பாடலைப் பாடி, கற்பூரத்தை ஏற்றி தேவியை வழிபடுங்கள். பூஜைக்கு பின் பிரசாதத்தை பரிமாறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2023 Day 4, Colour, Kushmunda Puja Vidhi, Timings, Mantra, Muhurat, Vrat Katha, significance In Tamil

Navratri 2023 Day 4, Colour, Kushmunda Puja Vidhi, Timings, Mantra, Muhurat, Vrat Katha, significance in tamil, Read on...
Desktop Bottom Promotion