For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022 நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்குமான நிறம் என்னென்ன தெரியுமா?

துர்கையின் ஒன்பது அவதாரங்கள் ஒன்பது நாட்களும் வணங்கப்படுவதால், ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நிறம் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பஞ்சாங்கத்தின் படி, 2022 நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்கான 9 நிறங்கள் இதோ!

|

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் சக்தியின் வடிவமான துர்கையின் ஒன்பது வடிவங்களும் ஒன்பது நாட்களும் சிறப்பாக வழிபடும் காலமே நவராத்திரி காலமாகும். இது இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இது ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விரதமானது செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 05 ஆம் தேதி விஜயதசமியுடன் முடிவடைகிறது.

Navratri Colours 2022: The Nine Colours Of Navratri And Their Meaning In Tamil

துர்கையின் ஒன்பது அவதாரங்கள் ஒன்பது நாட்களும் வணங்கப்படுவதால், ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நிறம் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் பஞ்சாங்கத்தின் படி, 2022 நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்கான 9 நிறங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் என்னவென்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நவராத்திரி நாள் 1

நவராத்திரி நாள் 1

2022 செப்டம்பர் 26 ஆம் தேதி நவராத்திரியின் முதள் நாளாகும். இந்நாளில் சைலபுத்ரி தேவி வழிபடப்படுகிறது. நவராத்திரியின் முதன் நாளின் நிறம் வெள்ளை. இந்நிறம் மன அமைதி, தூய்மை மற்றும் பாதுகாப்பு உணர்வை குறிக்கிறது. எனவே முதல் நாளில் வெள்ளை நிற ஆடையை உடுத்தி சைலபுத்ரி தேவியை வழிபடுவது மிகவும் நல்லது.

நவராத்திரி நாள் 2

நவராத்திரி நாள் 2

2022 செப்டம்பர் 27 ஆம் தேதி நவராத்திரியின் இரண்டாவது நாளகும். இந்நாளில் பிரம்மச்சாரிணி தேவி வழிபடப்படுகிறது. இரண்டாம் நாளின் நிறம் சிவப்பு. இந்த சிவப்பு காதல் மற்றும் ஆர்வத்தின் நிறம். மேலும் சிவப்பு ஒருவரை வீரியம் மற்றும் உயிர்சக்தியுடன் நிரப்புகிறது. எனவே இரண்டாம் நாளில் சிவப்பு நிற ஆடையை அணிந்து பிரம்மச்சாரிணியை வழிபடுங்கள்.

நவராத்திரி நாள் 3

நவராத்திரி நாள் 3

2022 செப்டம்பர் 28 ஆம் தேதி நவராத்திரியின் மூன்றாவது நாளாகும். இந்நாளில் சந்திரகாண்டா தேவி வழிப்படப்படுகிறது. நவராத்திரியின் மூன்றாவது நாளுக்குரிய நிறம் ராயல் ப்ளூ. நீல நிறத்தின் சாயல் செழுமையையும், அமைதியையும் குறிக்கிறது. ஆகவே இந்நாளில் நீல நிற ஆடைகளை அணிந்து சந்திரகாண்டா தேவியை வழிபடுங்கள்.

நவராத்திரி நாள் 4

நவராத்திரி நாள் 4

2022 செப்டம்பர் 29 ஆம் தேதி நவராத்திரியின் 4 ஆவது நாளாகும். இந்நாளில் கூஷ்மாண்டா தேவி வழிபடப்படுகிறது. நவராத்திரியின் நான்காவது நாளுக்குரிய நிறம் மஞ்சள். இந்த நிறம் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் குறிக்கிறது. ஆகவே நான்காவது நாளில் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கூஷ்மாண்டா தேவியை வணங்கினால், அவரின் அருளால் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

நவராத்திரி நாள் 5

நவராத்திரி நாள் 5

2022 செப்டம்பர் 30 ஆம் தேதி நவராத்திரியின் 5 ஆவது நாளாகும். இந்நாளில் ஸ்கந்தமாதா தேவி வழிபடப்படுகிறது. இந்த நாளுக்குரிய நிறம் பச்சை. பச்சை நிறமானது வாழ்வின் புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. எனவே இந்நாளில் பச்சை நிற ஆடைகளை அணிந்து தேவியை வழிபடுவது நல்லது.

நவராத்திரி நாள் 6

நவராத்திரி நாள் 6

2022 அக்டோபர் 01 ஆம் தேதி நவராத்திரியின் 6 ஆவது நாளாகும். இந்நாளில் காத்யாயினி தேவி வழிபடப்படுவார். மேலும் இந்நாளுக்குரிய நிறம் சாம்பல். இந்நிறம் சமநிலையான உணர்வுகளைக் குறிக்கிறது. எனவே உங்களின் எண்ணங்கள் நிறைவேற விரும்பினால், இந்நாளில் சாம்பல் நிற ஆடையை அணிந்து காத்யாயினி தேவியை வழிபடுங்கள்.

நவராத்திரி நாள் 7

நவராத்திரி நாள் 7

2022 அக்டோபர் 02 ஆம் தேதி நவராத்திரியின் 7 ஆவது நாளாகும். இந்நாளில் களராத்திரி தேவி வழிபடப்படுகிறார். இந்நாளுக்குரிய நிறம் ஆரஞ்சு. இந்த நிறமானது நேர்மறை ஆற்றல் நிறைந்தது மற்றும் ஒருவரை மிகவும் உற்சாகமாக வைத்திருக்கும். எனவே நவராத்திரியின் 7 ஆவது நாளில் ஆரஞ்சு நிற உடையை அணிந்து களராத்திரி தேவியை வழிபட்டு, அவரின் பரிபூர்ண ஆசியைப் பெறுங்கள்.

நவராத்திரி நாள் 8

நவராத்திரி நாள் 8

2022 அக்டோபர் 03 ஆம் தேதி நவராத்திரியின் 8 ஆவது நாளாகும். இந்நாளில் மகாகௌரி வழிபடப்படுவார். இந்நாளுக்குரிய நிறம் மயில் பச்சையாகும். இந்த நிறம் கருணை மற்றும் புத்துணர்ச்சியைக் குறிக்கிறது. எனவே நவராத்திரியின் 8 ஆவது நாளில் மயில் பச்சை நிற ஆடையை அணிந்து தேவியை வழிபடுவது நல்லது.

நவராத்திரி நாள் 9

நவராத்திரி நாள் 9

2022 அக்டோபர் 04 ஆம் தேதி நவராத்திரியின் 9 ஆவது நாளாகும். இந்நாளில் சித்திதாத்ரி தேவி வழிபடப்படுகிறது. இந்நாளுக்குரிய நிறம் பிங்க். இந்த பிங்க் நிறமானது அன்பு, பாசம் மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கிறது. எனவே 9 ஆவது நாளில் பிங்க் நிற ஆடையை அணிந்து துர்கையின் சித்திதாத்ரி வடிவத்தை வணங்கி, அவரின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri Colours 2022: The Nine Colours Of Navratri And Their Meaning In Tamil

In this article, we shared about colours for nine days of navratri festival and their significance or meaning in tamil. Read on...
Desktop Bottom Promotion