For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரியில் உங்கள் வீட்டில் துர்கையும், லட்சுமி தேவியும் குடியேற வேண்டுமா? இதோ அதற்கான சில வாஸ்து டிப்ஸ்...

நவராத்திரி நாட்களில் வாஸ்துப்படி சில விஷயங்களை செய்வதன் மூலம், வீட்டில் துர்கா தேவி வாசம் செய்வதோடு, இந்நாட்களில் லட்சுமி தேவியின் சிறப்பான அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

|

நவராத்திரி இந்து மதத்தில் மிகவும் முக்கியமான பண்டிகை. 2022 ஆம் ஆண்டின் சாரதா நவராத்திரி செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 05 ஆம் தேதி வரை நடைபெறும். நவராத்திரியின் போது துர்கா தேவியின் 9 வடிவங்களும் முறையாக வழிபடப்படுகின்றன. துர்கா தேவியின் அருளைப் பெற பலர் விரதம் இருந்து, வழிபாடு செய்வார்கள். நவராத்திரியில் துர்கா தேவியை வழிபடுவதால் வாழ்வில் உள்ள பயம், தடைகள், எதிரிகள் அழிந்து, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கும்.

Navratri 2022: Vastu Tips To Do In Navratri To Bring Happiness And Prosperity In Tamil

நவராத்திரி நாட்களில் வாஸ்துப்படி சில விஷயங்களை செய்வதன் மூலம், வீட்டில் துர்கா தேவி வாசம் செய்வதோடு, இந்நாட்களில் லட்சுமி தேவியின் சிறப்பான அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்போது வாஸ்துப்படி நவராத்திரியில் செய்ய வேண்டியவைகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசி செடிக்கு நீர்

துளசி செடிக்கு நீர்

நவராத்திரி நாளன்று ஒவ்வொரு நாளும் துளசி செடிக்கு தண்ணீரை தவறாமல் ஊற்ற வேண்டும். அதோடு துளசி செடிக்கு முன் நெய் தீபம் ஏற்றுவதும் மங்களகரமானது. இப்படி செய்வதன் மூலம், வீட்டில் சண்டைகள் எதுவும் ஏற்படாது மற்றும் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

சிவப்பு திரியில் விளக்கேற்றவும்

சிவப்பு திரியில் விளக்கேற்றவும்

நவராத்திரியின் 9 ஆவது நாளில் பூஜையின் போதோ அல்லது கோவிலிலோ, சிவப்பு நிற திரியைக் கொண்டு விளக்கேற்றி துர்கா தேவியை வழிபடுவது நல்லது. ஏனெனில் துர்கா தேவிக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும்.

பூக்கள்

பூக்கள்

நவராத்திரி நாட்களில் துர்கா தேவிக்கு பூஜை செய்யும் போது ரோஜா, செம்பருத்தி மற்றும் தாமரை மலர்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதனால் துர்கா தேவி மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறப்படுகிறது. துர்கா தேவியை மகிழ்வித்தால், அவர் அனைத்துவிதமான துன்பங்களில் இருந்தும் விடுவிப்பாள்.

துடைப்பத்தை மாற்றக்கூடாது

துடைப்பத்தை மாற்றக்கூடாது

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பயன்படுத்தும் துடைப்பத்தை நவராத்திரி நாட்களில் மாற்றக்கூடாது. நவராத்திரிக்கு பிறகு வேண்டுமானால் மாற்றலாம். துடைப்பமானது லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே இந்நாட்களில் துடைப்பத்தை தூக்கி எறிந்தால், லட்சுமி தேவியை வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு சமம்.

பெண்களை அவமதிக்கக்கூடாது

பெண்களை அவமதிக்கக்கூடாது

நவராத்திரி நாட்களில் துர்கா தேவியை வழிபடும் போது, தினமும் ஒரு பெண்ணுக்கு உணவளிக்க வேண்டும். இது மட்டுமின்றி, இந்நாட்களில் வீட்டில் உள்ள பெண்களையும், திருமணமாகாத பெண்களையும் அவமரியாதை செய்யாதீர்கள். ஏனெனில் பெண்கள் துர்கா தேவியின் வடிவமாக கருதப்படுகிறார்கள். இக்காலத்தில் பெண்களை அவமதிப்பது துர்கா தேவியை அவமதிப்பதற்கு சமம்.

ஸ்வஸ்திகா சின்னம்

ஸ்வஸ்திகா சின்னம்

வாஸ்து சாஸ்திரத்தில் ஸ்வஸ்திகா சின்னம் மங்களகரமானதாக கருதப்படுகிறது. எனவே நவராத்திரியின் முதல் நாளில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தைக் கொண்ட ஸ்வஸ்திகா சின்னத்தை வீட்டின் பிரதான கதவின் இருபுறமும் ஒட்ட வேண்டும். இதனால் வீட்டுச்சூழல் மகிழ்ச்சியாக இருக்கும் மற்றும் வீட்டில் உள்ளோரும் சந்தோஷமாக இருப்பார்கள்.

7 கற்பூரம்

7 கற்பூரம்

நவராத்திரி நாட்களில் சூரிய அஸ்தமனத்தின் போது 7 கற்பூரங்களைக் கொண்டு துர்கா தேவிக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை அழிப்பதாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக வீட்டுச்சூழல் சந்தோஷம் நிறைந்து இருக்கும்.

சந்தனம்

சந்தனம்

நவராத்திரியின் போது துர்கா தேவியின் சிலை அல்லது கலசத்தை அமைக்க சந்தனத்தை பயன்படுத்துவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. கலசத்தையும் சிலையையும் சந்தனத்தின் கீழ் வைக்கலாம். இவ்வாறு செய்வதால் வாஸ்து தோஷம் நீங்கி சந்தனத்தின் தாக்கத்தால் வீடு நேர்மறை ஆற்றலின் மையமாக மாறும்.

சிவப்பு நிறத்தை பயன்படுத்தவும்

சிவப்பு நிறத்தை பயன்படுத்தவும்

நவராத்திரியில் துர்கா தேவியை வழிபடும் போது சிவப்பு நிற மலர்களைப் பயன்படுத்த வேண்டும். வாஸ்துவில் சிவப்பு நிறம் வலிமையின் அடையாளமாக கருதப்படுகிறது. துர்கா தேவிக்கு சிவப்பு நிற மலர்களை சமர்பிப்பதோடு, அம்மனுக்கு சிவப்பு நிற ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2022: Vastu Tips To Do In Navratri To Bring Happiness And Prosperity In Tamil

Navratri 2022: Here are some vastu tips to do in navratri to bring happiness and prosperity. Read on to know more...
Story first published: Wednesday, September 21, 2022, 17:35 [IST]
Desktop Bottom Promotion