For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரி 2022: துர்கா தேவிக்கு பிடித்த பூக்கள், இனிப்புகள், பழங்கள் மற்றும் நிறங்கள்...

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒன்பது வெவ்வேறு வண்ணங்களுடன் தொடர்புடையது. வண்ணங்களைப் போலவே ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிட்ட வகையான பூக்கள், உணவுகள் மற்றும் பழங்களுடன் தொடர்புண்டு.

|

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை துர்கா தேவியின் அவதாரங்களை போற்றி கொண்டாடும் பண்டிகையாகும். துர்கா தேவி மிகவும் வீரம் மிக்க அசுரர்களை எதிர்த்து போரிட்ட போது, இந்த குறிப்பிட்ட ஒன்பது நாட்களில் போரில் வென்றதாக கூறப்படுகிறது. எனவே, நவராத்திரியின் இந்த ஒன்பது நாட்கள், தேவியை நினைத்து மனதார பூஜை செய்து வந்தால், தேவியின் ஆசீர்வாதத்தால் உங்களின் ஆசைகள் மற்றும் கனவுகள் அனைத்தும் நனவாகும் என்பது நம்பிக்கை.

Navratri 2022: Goddess Durgas Favourite Flowers, Sweets, Fruits, And Colours In Tamil

நவராத்திரியாக கொண்டாடப்படும் ஒன்பது நாட்களும், துர்கா தேவியின் ஒன்பது வெவ்வேறு அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாள் கொண்டாட்டங்கள் உங்கள் உணர்வை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவது மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நல்ல நினைவுகளையும் நல்ல செய்திகளையும் கொண்டு வந்து சேர்க்கும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒன்பது வெவ்வேறு வண்ணங்களுடன் தொடர்புடையது. வண்ணங்களைப் போலவே ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிட்ட வகையான பூக்கள், உணவுகள் மற்றும் பழங்களுடன் தொடர்புண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நவராத்திரி நாள் 1

நவராத்திரி நாள் 1

இந்த நாள் ஷைல்புத்ரி தேவியைப் போற்றி வழிபடும் நாள். இது துர்கா தேவியின் அவதாரமாகும். அவர் சாம்பல் நிறத்தில் ஜொலிப்பவர். எனவே, பக்தர்கள் நவராத்திரியின் முதல் நாள் அன்று சாம்பல் ஆடைகள், அணிகலன்கள் ஆகியவற்றை அணிந்து வழிபாட்டில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறது. பக்வீட் மாவினால் செய்யப்பட்ட குட்டு கி பூரியை இந்த நாளில் நைவேத்தியம் செய்ய வேண்டும். வெள்ளை அரளி மற்றும் செம்பருத்திகளை ஷைல்புத்ரி தேவிக்கு அர்ப்பணிக்க வேண்டும். அதே நேரத்தில், பசும்பாலில் தயாரிக்கப்படும் வீட்டில் தயாரித்த நெய்யையும் தேவிக்கு சமர்பிக்க வேண்டும்.

நவராத்திரி நாள் 2

நவராத்திரி நாள் 2

நவராத்திரியின் இரண்டாம் நாள் பிரம்மச்சாரிணி தேவிக்கானது. தேவி அமைதியான ஆற்றலுடன் ஆட்சி செய்பவள். அவருக்கு உகந்த நிறம் ஆரஞ்சு. எனவே, நவராத்திரியின் 2வது நாளில் ஆரஞ்சு நிற ஆடைகள் அணிந்து வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. ஆரஞ்சு நிறமானது பெயர், புகழ் மற்றும் பணத்தைப் பிரதிபலிக்கிறது. 2வது நாளில், நிறத்துக்கும் மனநிலைக்கும் ஏற்றபடி மோத்திச்சூர் லட்டு தயார் செய்து நைவேத்தியம் செய்வது சிறந்தது. பிரம்மச்சாரிணி தேவிக்கு ஆலம்பூமற்றும் சாமந்தி பூக்களை சமர்பிப்பது நல்லது.

நவராத்திரி நாள் 3

நவராத்திரி நாள் 3

பொதுவாக அமைதி மற்றும் செழிப்புக்காக வழிபடப்படும் சந்திரகாண்டா தேவிக்கு உகந்த நாள் தான் நவராத்திரியின் 3வது நாள். இந்த நாளுக்கு ஏற்ற நிறம் வெள்ளை. பால் பாயாசம் இன்றைய தினம் சந்திரகாண்டா தேவிக்கு நைவேத்தியமாக படைக்கப்பட வேண்டியது. நவராத்திரியின் மூன்றாம் நாளில் துர்கா தேவிக்கு சங்குப்பூ அர்ப்பணிக்க வேண்டும். இந்த நாளில், சந்திரகாண்டா தேவிக்கு பால் அல்லது பாலில் தயாரிக்கப்படும் பொருட்களையும் படைக்கலாம். அம்மனுக்கு வெல்லம் மற்றும் சிவப்பு ஆப்பிளை சமர்ப்பிப்பது, உங்களை சூழ்ந்திருக்கும் தீய சக்திகளை அழிக்கும்.

நவராத்திரி நாள் 4

நவராத்திரி நாள் 4

நான்காவது நாள், கூஷ்மாண்டா தேவியின் நாள். இந்த நாளுக்கான நிறம் சிவப்பு. உங்கள் தாகத்தைத் தணிக்கவும், உங்கள் அமைதியின்மையை போக்கவும் பீட்ரூட் மற்றும் கேரட் சாறு தயாரிக்கலாம். இந்த நாளில் கூஷ்மாண்டா தேவியை வழிபடுபவர்கள், மனஅமைதியை பெற்று நிம்மதியுடன் திகழ்வாறார்கள். மேலும், எவரொருவர் கூஷ்மாண்டா தேவிக்கு பிடித்த பிரசாதத்தை தேவிக்கு படைப்பதன் மூலம் சிக்கலான நோய்களிலிருந்து விடுதலை பெற்றிடலாம். எனவே, இந்த நாளில் அம்மனுக்கு மிகவும் பிடித்த இனிப்பான மால்புவாவை படைக்க வேண்டும்.

நவராத்திரி நாள் 5

நவராத்திரி நாள் 5

நவராத்திரியின் 5 ஆம் நாள் கார்த்திகேயனின் தாயாகவும், துர்கா தேவியின் ஐந்தாவது அவதாரமாகவும் இருக்கும் ஸ்கந்த மாதா தேவியின் நாள். ஸ்கந்த மாதாவின் மகனான கார்த்திகேயன் கொடூரமான அரக்கர்களின் படைக்கு எதிராக தேவர்களின் படைக்கு தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த நாளுக்கான நிறம் ஸ்கை ப்ளூ. எனவே, இந்த நாளில் உலர்ந்த புளூபெர்ரி மற்றும் முந்திரி போன்றவற்றை நைவேத்தியம் செய்திடலாம். இது ஸ்கந்த மாதாவை மிகவும் மகிழ்விக்கும். ஐந்தாம் நாளன்று, அம்மனுக்கு மஞ்சள் நிற பூக்களும், பழங்களும் அர்ச்சனை செய்து தானம் செய்ய நல்லது. ஆறு ஏலக்காயை அம்மனுக்கு சமர்ப்பணம் செய்தால் புத்தி மேம்படும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி நாள் 6

நவராத்திரி நாள் 6

நவராத்திரியின் 6வது நாளில் வழிபடப்படும் துர்கா தேவியின் 6வது அவதாரம் காத்யாயனி. இவர் தீமையை அழிப்பதோடு, நல்லதை வெற்றி பெறச் செய்பவர். இவருக்கு உகந்த நிறம் இளஞ்சிவப்பு, அதாவது பிங்க் நிறம். இந்த நிறம் புதியதொரு நம்பிக்கையைத் தருவதோடு, புதிய தொடக்கத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். ரோஜா இதழ் குல்ஃபி இந்த நாளில் தேவிக்கு பிரசாதமாக கொடுப்பதற்கான சிறந்த தேர்வு. அம்மனுக்கு ப்ளம் மரத்தின் பூக்களை அர்ப்பணிப்பது சிறந்தது. காத்யாயனி தேவியின் வழிபாடு, வாழ்க்கையின் நான்கு மடங்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். அதாவது தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம். இனிப்பு வெற்றிலையை காத்யாயனி தேவிக்கு பிரசாதமாக வழங்கலாம்.

நவராத்திரி நாள் 7

நவராத்திரி நாள் 7

துர்கா தேவியின் உக்கிரமான வடிவமான காலராத்திரி, நவராத்திரியின் 7வது நாளில் வழிபடுகிறார். இவர் தன்னை நம்பி வந்த பக்தர்களை அமைதியுடனும், மிகுந்த பலத்துடனும் ஆசீர்வதிக்கிறாள். ராயல் ப்ளூ இந்த நாளுக்கான நிறமாகும். எனவே, நரியல் கி பர்ஃபி இன்றைய தினத்திற்கு பொருத்தமான பிரசாதமாக இருக்கும். இந்த நாளில் நீல நிற கிருஷ்ணர் தாமரையை தேவிக்கு அர்ப்பணிப்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. காலராத்திரி தேவியை வழிபாட்டால் பேய், ஆவிகளின் பயத்தில் இருந்து விடுதலை பெறுவது உறுதி என்றும், துக்கங்கள் அனைத்தும் நீங்கும் என்பதும் நம்பிக்கை. வெல்லம் மற்றும் உலர் பழங்களார் தயாரிக்கப்பட்ட லட்டுவை பிரசாதமாக வழங்குவது தேவியை சாந்தப்படுத்தும்.

நவராத்திரி நாள் 8

நவராத்திரி நாள் 8

நவராத்திரியின் எட்டாவது நாளில் வழிபடப்படும் தேவி மஹாகௌரி, வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நேர்மறையையும் குறிக்கும் மஞ்சள் நிறத்திற்கு உரியவர். துர்காஷ்டமி என்பது இந்த நாளை அறியப்படும் மற்றொரு பெயர். இன்றைய தினம் மஹாகௌரியை மனம் குளிரசெய்திட கேசர் கீர் சமைக்கலாம். மஹாகௌரி மல்லிகைப் பூக்களை மிகவும் விரும்புபவள். எனவே, மல்லிகை பூக்களால் தேவியை அலங்கரிப்பது உகந்தது. இந்த நாளில் மஹாகௌரி தேவிக்கு வீட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் லட்டு நைவேத்தியமாக படைப்பது மிகவும் உகந்ததாக இருக்கும்.

நவராத்திரி நாள் 9

நவராத்திரி நாள் 9

நவராத்திரியின் 9 மற்றும் இறுதி நாளில் வழிபடப்படுபவர் சித்திதாத்ரி. இந்த நாளில் தேவி பக்தர்களுக்கு 26 குறிப்பிட்ட வரங்களை வழங்கக்கூடியவர். இந்த நாளுக்கான நிறம் பச்சை. இது செழிப்பைக் குறிக்கிறது. இந்த நாளின் சாராம்சத்தைக் கொண்டாட சுரைக்காயால் தயாரிக்கப்பட்ட இனிப்பை தேவிக்கு படைக்கலாம். இந்த நாளில் சித்திதாத்திரிக்கு செம்பருத்திப் பூவை அர்ப்பணிக்க வேண்டும் என்பது நம்பிக்கை. சித்திதாத்ரி உலகை ஆளும் தெய்வம். எனவே, அவளுக்கு எள் உருண்டையை பிரசாதமாக படைத்து தானம் செய்வது சிறந்த தேர்வாகும்.

விஜய தசமி

விஜய தசமி

விஜய தசமி நாளானது, துர்கா தேவியானவள் விஜயா தேவியாக அவதரிக்கிறாள். மல்லிகை மற்றும் ரோஜா பூக்களால் தேவி அலங்கரித்து இந்த நாளில் சிறப்பு பூஜையை நடத்தலாம், அதே நேரத்தில் இனிப்பு பொங்கல் மற்றும் பிற வகையான இனிப்புகளையும் பிரசாதமாக இந்த நாளில் வழங்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2022: Goddess Durga's Favourite Flowers, Sweets, Fruits, And Colours In Tamil

Navratri 2022: Here we listed Goddess Durga's Favourite Flowers, Sweets, Fruits, And Colours In Tamil. Read on to know more...
Desktop Bottom Promotion