For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Navratri 2022: ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த வடிவ துர்கா தேவியை வழிபட வேண்டும் தெரியுமா?

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்காரரும் ராசிக்கேற்ற துர்கா தேவியின் வடிவத்தை வழிபடுவதால் நற்பலன்கள் கிடைக்கும். இப்போது துர்கா தேவியின் அருளைப் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த துர்கா தேவியை வழிபட வேண்டும் என்பதை காண்போம்.

|

சக்தியின் வடிவமாக கருதப்படுபவள் துர்கா தேவி. ஒவ்வொரு ஆண்டும் நாம் நவராத்திரியை கொண்டாடி வருகிறோம். ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில் துர்கையின் ஒன்பது வடிவங்களும் சிறப்பாக வழிபடப்படுகின்றன. சொல்லப்போனால் துர்கையை வழிபட ஒரு சிறந்த தருணமாக நவராத்திரியைக் கூறலாம். இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 05 வரை கொண்டாடப்படுகிறது.

Navratri 2022: Different Forms Of Goddess Durga To Worship According To Zodiac Signs In Tamil

நவராத்திரி நாட்களில் துர்கா தேவியை நல்ல உள்ளத்துடன் சரியான முறையில் வழிபட்டு வந்தால், துர்கா தேவி பக்தர்களின் துக்கங்களையும் துன்பங்களையும் போக்குவார். ஜோதிடத்திலும் நவராத்திரியின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்காரரும் ராசிக்கேற்ற துர்கா தேவியின் வடிவத்தை வழிபடுவதால் நற்பலன்கள் கிடைக்கும். இப்போது நவராத்திரியில் துர்கா தேவியின் அருளைப் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த துர்கா தேவியை வழிபட வேண்டும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் ஸ்கந்தமாதாவை வணங்க வேண்டும் மற்றும் இந்த ராசிக்காரர்கள் துர்கா சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும். ஸ்கந்தமாதா தேவி கருணை உள்ளம் கொண்டவர் என்பதால், அவரின் அருளைப் பெற்றிருந்தால், அவர் இரட்சிப்பு, சக்தி மற்றும் செழிப்பை வழங்குவார்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் மகாகௌரியை வழிபட வேண்டும். அதுவும் நவராத்திரி நாட்களில் ரிஷப ராசிக்காரர்கள் மகாகௌரியை வழிபடுவதன் மூலம், அவரின் அருள் அருள் கிடைக்கும். அதுவும் திருமணமாகாத பெண்கள் லலிதா சாஸ்திரத்தை பாராயம் செய்தால், விரைவில் திருமணம் நடக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் பிரம்மச்சாரிணி தேவியை வழிபட வேண்டும். மேலும் இவர்கள் தினமும் தேதி யந்திரம் மற்றும் தாரா கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். பிரம்மச்சாரிணி தேவியை வழிபடுவதால், ஒழுக்கம், அமைதி, மகிழ்ச்சி, விடுதலை கிடைக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் சைலபுத்திரி தேவியை வழிபடுவது நல்லது. இந்த ராசிக்காரர்கள் தினமும் லட்சுமி சஹஸ்ரநாமத்தை சொல்வதன் மூலம், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, நற்பலன்களைப் பெறலாம்

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் துர்கா தேவியின் மந்திரத்தைச் சொல்லி, குஷ்மந்தா தேவியை வழிபட வேண்டும். இதனால் இந்த தேவி நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் வலிமையை தனது பக்தர்களுக்கு தருவார்.

கன்னி

கன்னி

கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் லட்சுமி மந்திரத்தை சொல்லி, பிரம்மச்சாரிணியை வழிபட வேண்டும். இதனால் அபரிமிதமான ஞானத்தால், வாழ்க்கையில் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சனையை புத்திசாலித்தனமாக போக்க முடியும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் துர்கா சப்தசதி அல்லது காளி சாலிசாவின் முதல் சரித்திரத்தைப் படித்து மகாகௌரியை வழிபட வேண்டும். இது திருமணமாகாத பெண்களின் வழியில் வரும் தடைகளை நீக்கி, விரைவில் திருமண வரன் கிடைக்க அருள் புரிவார்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் துர்கா சப்தசதியை பாராயம் செய்து, ஸ்கந்தமாதாவை வழிபட வேண்டும். இதனால் ஸ்கந்தமாதா பக்தர்களின் அனைத்து பிரச்சனைகள் மற்றும் தடைகளை நீக்க உதவுவார்.

தனுசு

தனுசு

தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் சந்திரகாந்தா தேவியை வழிபட வேண்டும். இதனால் இந்த தேவி தனது பக்தர்களுக்கு தைரியத்தை வழங்குவார். மேலும் தேவியின் அருளால் பக்தர்களின் பாவங்கள், துன்ங்கள், மனக் கஷ்டங்கள் மற்றும் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் நவர்ண மந்திரத்தைச் சொல்லி, களராத்திரி தேவியை வழிபடுவது நல்லது. இதனால் ஒருவரின் அறியாமை அழிக்கப்படுவதோடு, இருளை அகற்றி எதிர்மறை ஆற்றல்களை போக்க உதவும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் தேவி கசவத்தை பாராயணம் செய்து, களராத்திரி தேவியை வழிபட வேண்டும். இதனால் களராத்திரி தேவி வாழ்வில் உள்ள கவலையைப் போக்கி, சந்தோஷத்தை வாரி வழங்குவார்.

மீனம்

மீனம்

மீன ராசியைச் சேர்ந்தவர்கள் மஞ்சள் ஜெபமாலையைக் கொண்டு பக்லாமுகி மந்திரத்தைச் சொல்லி, சந்திரகந்தா தேவியை வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், தேவியின் அருளால் வாழ்வில் உள்ள தடைகள் மற்றும் அனைத்துவிதமான பயம் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2022: Different Forms Of Goddess Durga To Worship According To Zodiac Signs In Tamil

Navratri 2022: Different Forms Of Goddess Durga To Worship According To Zodiac Signs In Tamil. Read on...
Story first published: Saturday, September 24, 2022, 16:22 [IST]
Desktop Bottom Promotion