For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022 நவராத்திரி எப்போது தொடங்குகிறது? 9 நாள் நவராத்திரி கொண்டாட்டம் மற்றும் சிறப்பம்சம் இதோ...!

இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. துர்கா தேவியை வழிப்படும் இந்த நவராத்திரி பண்டிகையானது 10 நாட்கள் கொண்டாடப்படக்கூடிய ஓர் பண்டிகை.

|

இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. துர்கா தேவியை வழிப்படும் இந்த நவராத்திரி பண்டிகையானது 10 நாட்கள் கொண்டாடப்படக்கூடிய ஓர் பண்டிகை. துர்கா தேவியானவள் சக்தி சொரூபமாக கருதப்படுபவள். அத்தகைய துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை இந்த நவராத்திரி நாட்களில் வழிபடுகின்றனர்.

Navratri 2022 Start And End Date, History, Celebration And Significance Of Nine Days Of Navratri

அதாவது, சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி ஆகிய 9 தேவிகளையும் நவராத்திரியின் 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளில் பூஜித்து வழிபடுவர். நவராத்திரியின் நிறைவு நாளாக விஜயதசமி அன்று தசரா கொண்டாடப்படும். இந்த ஆண்டு நவராத்திரி திருவிழாவானது, செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 04 மற்றும் 05 ஆம் தேதி சரஸ்வதி பூஜை, விஜயதசமியுடன் நிறைவடைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நவராத்திரி 2022: தேதிகள், திதிகள் மற்றும் நவதுர்கை அம்சம்

நவராத்திரி 2022: தேதிகள், திதிகள் மற்றும் நவதுர்கை அம்சம்

முதல் நாள்

இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா செப்டம்பர் 26ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்குகிறது. அன்றைய தினம், நவதுர்கையின் முதல் அம்சமான சைலபுத்ரி தேவிக்கு பூஜை செய்யப்படும்.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள்

இரண்டாம் நாளான செப்டம்பர் 27 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று நவதுர்கையின் இரண்டாவது அம்சமான பிரம்மச்சாரிணி தேவிக்கு பூஜை செய்ய வேண்டும்.

மூன்றாம் நாள்

மூன்றாம் நாள்

மூன்றாம் நாள் செப்டம்பர் 28 ஆம் தேதி புதன்கிழமை. அன்றைய தினம், கூஷ்மாண்ட தேவியை வணங்கி பூஜிக்க வேண்டும்.

நான்காம் நாள்

நான்காம் நாள்

நான்காம் நாள் செப்டம்பர் 29 ஆம் தேதி வியாழக்கிழமை. நவராத்திரியின் 4வது நாள் அன்று ஸ்கந்தமாதாவிற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட வேண்டும்.

ஐந்தாம் நாள்

ஐந்தாம் நாள்

ஐந்தாம் நாள் செப்டம்பர் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை. 5ம் நாளில் சஷ்டி திதியில் நவதுர்கையில் 5வது தேவியான காத்யாயணியை பூஜிக்க வேண்டும்.

 ஆறாம் நாள்

ஆறாம் நாள்

ஆறாம் நாள் அக்டோபர் 01 ஆம் தேதி சனிக்கிழமை. அன்றைய தினம் சப்தமி திதி வேளையில், காளராத்திரி தேவிக்கு பூஜை செய்யுங்கள்.

ஏழாம் நாள்

ஏழாம் நாள்

ஏழாம் நாள் அக்டோபர் 02 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. அன்று, அஷ்டமி திதியின் போது மகா கௌரிக்கு பூஜை செய்ய வேண்டும்.

எட்டாம் நாள்

எட்டாம் நாள்

எட்டாம் நாள் அக்டோபர் 03 ஆம் தேதி திங்கட்கிழமை. அன்றைய தினம், நவமி திதியில் சித்திதாத்திரி தேவிக்கு பூஜை செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒன்பதாம் நாள்

ஒன்பதாம் நாள்

நவராத்திரியின் இறுதி நாள் அக்டோபர் 04 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை. அன்றைய தினம், தசமி திதியின் போது நவராத்திரியின் நிறைவு நாளில் துர்கா தேவிக்கு தசரா பண்டிகை வெகு விமர்சையாக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

நவராத்திரியின் முக்கியத்துவம்:

நவராத்திரியின் முக்கியத்துவம்:

சிவபெருமான் தனது மனைவி துர்கா தேவிக்கு தனது தாயை சென்று பார்த்து வருவதற்கு ஒன்பது நாட்கள் அனுமதி அளித்ததாக நம்பப்படுகிறது. அந்த நேரத்தில், துர்கா தேவி மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்ற அசுரனை வதம் செய்கிறாள். பிரம்மனிடம் வரம் பெற்ற ஆணவத்தில் சுற்றி திரிந்த அசுரனை வதம் செய்ய கடும் தவம் இருந்து, முப்பெரும் தேவிகளான பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி ஒன்றிணைந்து மகா காளியாக உருவெடுத்து மகிஷாசுரனை அழித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் துர்கா தேவி சக்தியின் ரூபமாக, ஆற்றல் நிறைந்தவராக இந்த உலகிற்கு காட்சியளித்தார். அதன் நினைவாகவே ஒவ்வொரு வருடமும் நவராத்திரி தினத்தன்று துர்கா தேவியின் 9 வடிவங்களுக்கும் பூஜை செய்து பிரார்த்திக்கின்றோம்.

நவராத்திரியின் சிறப்பம்சம்:

நவராத்திரியின் சிறப்பம்சம்:

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், அம்மனின் ஒன்பது வடிவங்களும் மிகவும் விஷேசமாக பூஜிக்கின்றனர். இந்த ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் இறுதி நாளில் விஜயதசமி அன்று ராவணன், மேகநாதர் மற்றும் கும்பகர்ணனின் பெரிய உருவ பொம்மைகளை உருவாக்கி அதனை தீ வைத்து எரித்து மக்கள் கொண்டாடுகின்றனர். இதனால், நவராத்திரி திருவிழாவானது தீமைக்கு எதிரான வெற்றியை அடையாளப்படுத்துவதாக கொண்டாடப்படுகிறது.

வழிபடும் முறை:

வழிபடும் முறை:

நவராத்திரி விரதமிருப்பவர்கள் ஒன்பது நாளும் ஒரு வேளை மட்டும் உணவருந்தி விரதமிருக்க வேண்டும். நவராத்திரி விரதமிருப்பவர்கள் சுமங்கலிப் பெண்களை தங்களது இல்லத்திற்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் போன்வற்றை வழங்கலாம்.

நவராத்திரியின் மற்றொரு பிரதான பூஜை குமாரி பூஜை என்றழைக்கப்படும் கன்னி பூஜை. அதாவது, நவராத்திரியின் 8 வது நாளில் 2 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து அவர்களை அம்மனின் அம்சமாக கருதி பொட்டு, வளையல், உணவு, இனிப்பு மற்றும் ஆடை கொடுத்து மகிழ்விக்கலாம். இப்படி செய்வதன்மூலம் முப்பெரும் தேவியின் பரிபூரண அருள் கிடைக்கப் பெறலாம். தசராவின் போது நாடு முழுவதும் தாண்டியா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2022 Start And End Date, History, Celebration And Significance Of Nine Days Of Navratri In Tamil

In this article, we discussed about Navratri 2022 start and end date, history, celebration and significance of nine days of navratri. Read on...
Desktop Bottom Promotion