For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான சில துர்கை அம்மன் கோயில்கள்!

வராத்திரி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாக நவராத்திரி நாட்களில் பக்தர்கள் துர்கை அம்மன் மற்றும் அம்மனின் பிற வடிவங்களை தரிசிப்பதற்கு, துர்கையின் கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருவார்கள்.

|

இந்தியா பல்வேறு நம்பிக்கைகள், கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் மொழிகள் நிறைந்த நாடு. நமது நாடு அதன் கட்டிடக்கலை பாரம்பரியத்திற்கும், பண்டைய நினைவுச் சின்னங்களுக்கும் பெயர் பெற்றது. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் வெவ்வேறு கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. மேலும் இந்தியாவில் கோயில்கள் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன. ஒவ்வொரு கோயிலின் பின்னணியிலும் ஒவ்வொரு விதமான சுவாரஸ்யமான கதைகள் உள்ளன.

Navratri 2020: Famous Durga Temples In India In Tamil

நவராத்திரி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாக நவராத்திரி நாட்களில் பக்தர்கள் துர்கை அம்மன் மற்றும் அம்மனின் பிற வடிவங்களை தரிசிப்பதற்கு, துர்கையின் கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருவார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால், எங்கும் நிம்மதியாக பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். அதனால் இந்த வருடம் துர்கை அம்மனின் பல அம்சங்களைக் காண முடியாவிட்டாலும், நேரம் கிடைக்கும் போது நம் நாட்டில் உள்ள பிரபலமான துர்கை அம்மன் கோயில்களுக்கு சென்று வாருங்கள். இப்போது துர்கை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான 10 கோயில்களைப் பற்றி காண்போம்.

MOST READ: செல்வம், கல்வி, வீரம் பெருக சொல்ல வேண்டிய நவதுர்கை மந்திரங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைஷ்ணவ தேவி கோயில் (வடக்கு)

வைஷ்ணவ தேவி கோயில் (வடக்கு)

உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் திரண்டு வரும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்று வைஷ்ணவ தேவி. வட இந்தியாவில் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தில் இருக்கும் கத்ராவில் உள்ள திரிகுட்டா மலையில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோயில், மகா சரஸ்வதி, மகா காளி மற்றும் மஹாலட்சுமியின் ஒற்றுமையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

காமாக்யா தேவி கோயில் (கிழக்கு)

காமாக்யா தேவி கோயில் (கிழக்கு)

அஸ்ஸாமின் குவஹாத்தியில் உள்ள காமாக்யா தேவி, 51 சக்தி பீடங்களில் ஒன்று. இது தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் சிலை இல்லை. இங்கே ஒரு யோனி வடிவத்தில் உருவான ஒரு தட்டையான பாறை மட்டுமே வணங்கப்படுகிறது, அதனால்தான் காமக்கியா தேவியும் இரத்தப்போக்கு தேவி என்று போற்றப்படுகிறார். நகரின் மேற்கு பிராந்தியத்தில் நிலாச்சல் மலைகளில் அமைந்துள்ள காமக்கியா தேவி கோயில் நாட்டில் அதிகம் பார்வையிடப்படும் ஆலயங்களில் ஒன்றாகும்.

தட்சினேஷ்வர் கோயில் (கிழக்கு)

தட்சினேஷ்வர் கோயில் (கிழக்கு)

1855 ஆம் ஆண்டில் காளி தேவியின் பக்தரான ராணி ராஷ்மோனி என்பவரால் கட்டப்பட்ட ஹூக்லி ஆற்றின் கரையில் உள்ள தட்சினேஷ்வர் கோயில் கொல்கத்தா நகருக்கு அருகில் உள்ளது. இங்குள்ள வடிவம் காளி தேவியின் ஒரு வடிவமான பாவதரினி.

காளிகாட் கோயில் (கிழக்கு)

காளிகாட் கோயில் (கிழக்கு)

ஆண்டு முழுவதும் கொல்கத்தாவின் காளிகாட் பகுதியில் உள்ள காளி கோயிலுக்கு பக்தர்கள் வருகிறார்கள். தேவி சதியின் வலது கால் இங்கே விழுந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள சிலை தனித்துவமானது, ஏனென்றால் தெய்வம் மிக நீளமான நாக்குடன் சித்தரிக்கப்படுகிறது.

கோலாப்பூர் மகாலட்சுமி கோயில் (மேற்கு)

கோலாப்பூர் மகாலட்சுமி கோயில் (மேற்கு)

மகாராஷ்டிராவின் மிகவும் பிரபலமான நகரங்களில் ஒன்றான கோலாப்பூரில் அமைந்துள்ள மகாலட்சுமி கோயில் அம்பாபாய் தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் சாளுக்கியர்களின் காலத்தில் கட்டப்பட்டது மற்றும் அதன் கட்டமைப்பு தனித்துவத்திற்கு புகழ் பெற்றது. மேற்கு சுவரில் ஒரு சிறிய திறப்பு உள்ளது, இதன் மூலம் சூரிய அஸ்தமனத்தின் போது சூரியனின் கதிர்கள் கால்களிலும், மார்பிலும், முழு தெய்வத்திலும் ஆண்டுக்கு இரண்டு முறை விழும். ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 ஆகிய தேதிகளில் சூரிய கதிர்கள் காலில் விழுகின்றன; பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் சூரியனின் கதிர்கள் மார்பில் விழுகின்றன; பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் கதிர்கள் முழு தெய்வத்தின் மீதும் விழுகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (தெற்கு)

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (தெற்கு)

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமான மதுரை, தமிழ்நாட்டில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள மீனாட்சி அம்மன் கோயில், பார்வதியின் ஒரு வடிவத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது அன்னை தேவியின் மிக புனிதமான ஆலயங்களில் ஒன்றாகும். இங்குள்ள தெய்வம் அவரது வலது கையில் அமர்ந்திருக்கும் ஒரு கிளியுடன் தொடர்புடையது. மேலும் அவரது பளபளப்பான வைர மூக்குத்தி பக்தர்களை மயக்கமடையச் செய்கிறது.

சோட்டனிகார பகவதி அம்மன் கோயில் (தெற்கு)

சோட்டனிகார பகவதி அம்மன் கோயில் (தெற்கு)

லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் கேரளாவின் கடலோர நகரமான கொச்சியின் புறநகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள தெய்வம், அன்னை தேவியின் மூன்று வெவ்வேறு வடிவங்களைக் குறிக்கிறது - காலையில் மகா சரஸ்வதி, மதியம் மகாலட்சுமி மற்றும் மாலை மகா காளி. அதோடு இங்குள்ள தெய்வத்தை வணங்கிய பின்னர் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

அம்பாஜி கோயில் (மேற்கு)

அம்பாஜி கோயில் (மேற்கு)

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றான அம்பாஜி கோயில் நாட்டில் அதிகம் பார்வையிடப்படும் கோயில்களில் ஒன்றாகும். தேவி சதியின் இதயம் இங்கே விழுந்தது என்று நம்பப்படுகிறது. இக்கோயிலில் தேவியின் சிலையோ, சுயம்போ இல்லை. இங்கு தேவியின் யந்திர வடிவம் மட்டுமே வணங்கப்படுகிறது.

நைனா தேவி (வடக்கு)

நைனா தேவி (வடக்கு)

இந்தியாவில் தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் பிரபலமான கோயில்களில் நைனா தேவியும் ஒன்றாகும். ஹிமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த கோயிலானது மகிஷாசுரனை தோற்கடித்த இடம் என்று நம்பப்படுவதால் மஹீஷ்பீத் என்றும் அழைக்கப்படுகிறது.

ஜுவாலா தேவி (வடக்கு)

ஜுவாலா தேவி (வடக்கு)

இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜுவாலா தேவி கோயில் நித்திய சுடரைக் குறிக்கிறது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும் மற்றும் இது சதி தேவியின் நாக்கு விழுந்த இடம் என்று நம்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2020: Famous Durga Temples In India In Tamil

Here are the list of famous durga temples in india. Read on to know the history and interesting things about the temples.
Desktop Bottom Promotion