For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரியின் 8 ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா?

|

இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானது நவராத்திரி விழா. ஒன்பது பெண்களின் ரூபங்களில் தன்னை வெளிக் காட்டி அருள் புரிகிறாள் துர்கா தேவி. மஹேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பல வகை ரூபங்கள் உள்ளன.

தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரிகளில் அஷ்டமி மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். இன்றைய நாளில் பலர் இளம்பெண்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்து வந்து ஹல்வா, பூரி மற்றும் சனாவை வழங்குவது வழக்கமாகும்.

Navratri 2023 Day 8, Colour, Mahagauri Puja Vidhi, Timings, Mantra, Vrat Katha, significance In Tamil

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் மா துர்காவின் ஒன்பது அவதாரங்களில் ஒன்றுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஷைலாபுத்ரி, பிரம்மச்சாரினி, சந்திரகாந்தா, குஷ்மந்தா, ஸ்கந்தமாதா, கத்யாயினி, கல்ராத்திரி, மகா கவுரி மற்றும் சித்திதத்ரி ஆகிய ஒன்பது வெவ்வேறு வடிவங்கள் ஆகும். இன்றைய எட்டாம் நாளில் காளை மீதமர்ந்து பக்தர்களின் அனைத்து விதமான தடைகளையும் அகற்ற கவுரி அவதாரத்தில் வரும் துர்கையை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோற்றமும் அழகும்

தோற்றமும் அழகும்

துர்கா தேவியின் அவதாரங்களில் மகா கவுரி அவதாரம் அழகான வசீகரிக்கும் தோற்றமாகும். நான்கு கைகளைக் கொண்ட மகா கவுரியின் வலதுபுற ஒரு கையில் திரிசூலமும், மற்றொரு கையில் அபயமுத்திரையும், இடது கை ஒன்றில் தாமரை மலரும், மற்றொரு கையில் உடுக்கை மேளமும் கொண்டுள்ளாள். வெள்ளை ஆடைகளை அணிந்து ஒரு காளையின் மீது அமர்ந்து வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் மகா கவுரி.

புராணங்களில் கூறப்படுவது

புராணங்களில் கூறப்படுவது

மா கல்ராத்திரி எனப்படும் மூர்க்கமான தனது சாமுண்டி அவதாரத்தில் பேய்களை அழித்தபின், மிகவும் கருப்பாகவும், உடலெங்கும் ரத்தக்கறையாகவும் இருந்த அவளது நிறத்தை பார்த்து அவள் ‘கிண்டல் செய்யப்பட்டாள்' என்று புராணம் கூறுகிறது. எனவே அவள் தனது அழகிய நிறத்தை திரும்பக் கோரி பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தாள்.

பிரம்மா இமயமலையில் மானசரோவர் ஆற்றில் குளிக்கச் சொன்னார். அவளும் அவ்வாறு செய்ய அவள் மீண்டும் தனது முந்தைய நிறத்தையும், அழகையும் பெற்றதாகவும், அந்த அழகிய வடிவத்தில்தான் மஹா கவுரி என அழைக்கப்பட்டதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

நிறம்

நிறம்

மஹா கவுரி தேவி தனது பக்தர்களை ஞானத்துடன் ஆசீர்வதித்து, எல்லா துன்பங்களிலிருந்தும் விடுவிப்பார் என்று நம்பப்படுகிறது. இந்த நாளின் மயில் பச்சை நிறம் அணிந்து மகா கவுரிக்கு பூஜை செய்து வழிப்பட்டால் ஆசைகள் நிறைவேறும்.

மகா கவுரி பூஜை விதி

மகா கவுரி பூஜை விதி

அஷ்டமியில் பக்தர்கள் காலையில் குளித்துவிட்டு பூஜைக்கு அமர்ந்திருப்பார்கள். மா மகா கவுரியின் பூஜைக்கு பக்தர்கள் பச்சை நிற ஆடைகளை அணிய வேண்டும். விளக்கு ஏற்றி ஜெபம் செய்வதன் மூலம் பூஜையை தொடங்க வேண்டும்.

அதன் பிறகு, மந்திரங்களையும் ஆர்த்திகளையும் உச்சரிக்கும் போது, பக்தர்கள் மஹா மஹா கவுரிக்கு மஞ்சள் மற்றும் வெள்ளை பூக்களை தூவி வணங்க வேண்டும். பக்தர்கள் இளம்பெண்களை அழைத்து வீட்டிலேயே உணவளிக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் அந்த சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்க வேண்டும்.

மகா கவுரி பூஜை

மகா கவுரி பூஜை

பக்தர்கள் ஒன்பது மண் பானைகளை நிறுவி அதில் தேவி உருவத்தை அழைக்கிறார்கள். மகா அஷ்டமி பூஜையின் போது துர்காவின் ஒன்பது வடிவங்கள் வணங்கப்படுகின்றன. மேலும் திருமணமாகாத சில இளம் பெண்கள் தெய்வம் போல நடத்தப்படுகிறார்கள்.

இந்த சடங்கு கன்யா பூஜை என்று அழைக்கப்படுகிறது மற்றும் துர்கா பூஜையின் போது ஒரே நாளில் இந்த சடங்கை செய்வது மகா அஷ்டமியில் விரும்பப்படுகிறது. துர்கா பூஜையின் போது நவாமி ஹோமா மிக முக்கியமான சடங்கு மற்றும் பக்தர்கள் நவாமி பூஜையின் முடிவில் ஹோமா செய்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2023 Day 8, Colour, Mahagauri Puja Vidhi, Timings, Mantra, Vrat Katha, significance In Tamil

Navratri 2023 Day 8, Colour, Mahagauri Puja Vidhi, Timings, Mantra, Vrat Katha, significance In Tamil. Read on.
Desktop Bottom Promotion