Just In
- 5 hrs ago
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- 6 hrs ago
நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா? அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன?
- 8 hrs ago
பெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
- 9 hrs ago
நீங்க உங்க குழந்தைங்கள சரியாத்தான் வளர்க்குறீங்களா? இத படிச்சு தெரிஞ்சிக்கோங்க...
Don't Miss
- News
தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நவராத்திரி ஏழாம் நாள் காளராத்திரி தேவியின் அருளைப் பெற பூஜை செய்வது எப்படி?
நவராத்திரி என்பது துர்கா தேவியைப் போற்றும் விதமாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஒரு பெரிய திருவிழாவாகும். இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் போற்றி வணங்கப்படுகிறது. அந்த வகையில் ஏழாவது நாளாக துர்கையின் காளராத்திரி வடிவம் வழிபடப்படுகிறது. துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் மிகவும் பயங்கரமான ரூபம் காளராத்திரி. இதில் காள என்றால் நேரம், மரணம் மற்றும் ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள்படும்.
துர்கை அம்மனின் இந்த வடிவம் தீய சக்திகள், பேய்கள், பிசாசுகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த வடிவத்தில் உள்ள துர்கை அம்மனை தைரியம் அதிகரிக்கவும், அச்சத்தைப் போக்கவும் மக்கள் வணங்குகின்றனர். இப்போது நவராத்திரியின் ஏழாவது நாள் வழிபடப்படும் காளராத்திரி தேவியை வழிபடும் நேரம், பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் என்னவென்று காண்போம்.
MOST READ: செல்வம், கல்வி, வீரம் பெருக சொல்ல வேண்டிய நவதுர்கை மந்திரங்கள்!

காளராத்திரி தேவியின் வடிவம்
காளராத்திரி தேவி அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆக்ரோஷமான ரூபத்தில் இருப்பவர். மேலும் இவரது தேகம் கருமை நிறத்தில் இருக்கும். இவர் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு, நான்கு கரங்களைக் கொண்டிருப்பார். இவரது ஒரு கரத்தில் வஜ்ராயுதமும், மற்றொரு கரத்தில் வாளும் இருக்கும். எஞ்சிய இரண்டு கரங்கள் பக்தர்களுக்கு அபயத்தை வழங்கும். காளராத்திரி தேவியின் வாகனம் கழுதை. இவரது பார்வை பட்டாலே பாவம் நீங்குவதுடன், கெட்ட சக்திகள் அஞ்சி ஓடும் என்று மக்கள் நம்புகின்றனர்.

பூஜை முறைகள்
* அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, சுத்தமான ஆடையை அணிய வேண்டும்.
* பூஜை அறையில் காளராத்திரி தேவியை வைக்கவும்.
* தேவியை பூக்களால் அலங்கரித்து, ஊதுபத்தியை ஏற்ற வேண்டும்.
* பின் ஒரு கலசத்தை எடுத்து, அதை அரிசியால் நிரப்பி, சுற்றி மாவிலைகளை வைத்து, மேலே தேங்காயை வைக்க வேண்டும்.
* அடுத்து விளக்கை ஏற்றி, தேவிக்கான மந்திரத்தைக் கூறி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

காளராத்திரி தேவிக்கான மந்திரம்
"வாம படொள்ள சல்லோஹலட கந்தக பூஷணா,
வர்தான முர்தா திவ்ய கிருஷ்ண காளராத்திரி பயங்கரி"

காளராத்திரி தேவிக்கான பிரசாதம்
நவராத்திரி திருவிழாவில் ஏழாம் நாள் வழிபடப்படும் காளராத்திரி தேவியைப் பிரியப்படுத்த, அவருக்கு விருப்பமான வெல்லம் அல்லது வெல்லத்தால் செய்த பலகாரங்களைப் படையுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தேவி காளராத்திரி உங்களின் வறுமையை நீக்கி, வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருவார்.