For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரி 2023 இரண்டாம் நாள்: பிரம்மச்சாரினி தேவியை வழிபடும் முறைகளும், மந்திரங்களும்...

|

Navratri 2023: இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, துர்கா தேவியின் 9 அவதாரங்களை போற்றி வழிபடக்கூடிய பண்டிகையாகும். நவராத்திரியின் முதல் நாள், சைலபுத்ரி தேவியை போற்றி வழிப்படும். அந்த வகையில், நவராத்திரியின் இரண்டாம் நாள், துர்கா தேவியின் 2 ஆவது அவதாரமான பிரம்மச்சாரினியை போற்றி வணங்கும் நாள்.

Navratri 2023 Day 2: Know Significance, Puja Vidhi and Mantra of worshipping Maa Brahmacharini

MOST READ: செல்வம், கல்வி, வீரம் பெருக சொல்ல வேண்டிய நவதுர்கை மந்திரங்கள்!

துர்கா தேவியின் அவதாரங்களில், திருமணமாகாத அவதாரம் என்றால் அது பிரம்மசாரினி அவதாரம் தான். புராணங்களின்படி, தேவி பிரம்மச்சாரினி செவ்வாய் கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக நம்பப்படுகிறார். மேலும், ஒரு கையில் ஜெபமாலையும், மறுகையில் கமண்டலும் வைத்திருப்பவராக காட்சியளிக்கிறார். யார் ஒருவர் இந்த மந்திரத்தை உச்சரித்து, பிரம்மச்சாரினி தேவியை வழிபடுகிறாரோ, அவர்களுக்கு அகல சௌபாக்கியமும் கிடைக்கப் பெறுவர்.

"ஓம் தேவி பிரம்மச்சாரின்யை நமஹ"

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நவராத்திரி 2023 இரண்டாம் நாள்: தேவி பிரம்மச்சாரினியின் முக்கியத்துவம்

நவராத்திரி 2023 இரண்டாம் நாள்: தேவி பிரம்மச்சாரினியின் முக்கியத்துவம்

துர்கா தேவியின் இரண்டாவது அவதாரமாக திகழும் பிரம்மச்சாரினி தேவி, அன்பு, ஞானம், விசுவாசம் மற்றும் அறிவை ஆகியவற்றிற்கு அடையாளமாக திகழ்கிறார். தேவி குறித்து பரவலாக பேசப்படும் நாட்டுப்புறக் கதைகளின் படி, தேவி பிரம்மச்சாரினி இமயமலையில் பிறந்தவர். அவரது எண்ணங்கள் தேவ்ரிஷி நாரதரின் பேச்சால் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக, தவத்தில் ஈடுபட தொடங்கினார். இந்த தவத்தின் நோக்கம், சிவ பெருமானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே. நூற்றாண்டுகளுக்கு மேலாக தேவி தவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பிரம்மச்சாரினி என்ற பெயரில் உள்ள 'பிரம்' என்ற படைப்புக்கு தவம் என்று பொருள்.

நவராத்திரி 2023 இரண்டாம் நாள்: பூஜை விதிமுறைகள்

நவராத்திரி 2023 இரண்டாம் நாள்: பூஜை விதிமுறைகள்

முதலில் தேவி பிரம்மச்சாரினி சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதுவும், பஞ்சாமிர்தம் கொண்டு தான் முதலில் அபிஷேகம் செய்ய வேண்டும். பஞ்சாமிர்தம் என்பது தேன், சர்க்கரை, பால், தயிர் மற்றும் நெய் கலந்த கலவையாகும். பின்னர் தேவிக்கு வெற்றிலை மற்றும் பாக்கு வைக்க வேண்டும். தேவி பிரம்மச்சாரினிக்கு பூஜை செய்ய, உங்களுக்கு பூக்கள், அக்ஷதை மற்றும் சந்தனம் ஆகியவை கொண்டு அலங்கரிக்க வேண்டும். பின்னர், கைகளில் பூக்களை ஏந்தியபடி, நவகிரகங்கள், இஷ்ட தெய்வங்களை வேண்டிய பின்னர், தேவி பிரம்மச்சாரினிக்கு உரிய மந்திரத்தை உச்சரித்து வழிபடவும்.

தேவி பிரம்மச்சாரினிக்கு பிடித்த பூ

தேவி பிரம்மச்சாரினிக்கு பிடித்த பூ

தேவி பிரம்மச்சாரினிக்கு செம்பருத்தி பூ மற்றும் தாமரை பூ பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இந்த மலர்களால் ஆன மாலையை கொண்டு தேவியை அலங்கரித்தால் சிறப்பாக இருக்கும். பின்னர், இறுதியாக தீப ஆராதனை காட்டி வழிபடவும்.

நவராத்திரி 2023 இரண்டாம் நாள்: தேவி பிரம்மச்சாரினி மந்திரம்

நவராத்திரி 2023 இரண்டாம் நாள்: தேவி பிரம்மச்சாரினி மந்திரம்

தேவியின் ஆசீர்வாதம் பெற பின்வரும் மந்திரத்தை உச்சரிக்கவும்.

யா தேவி சர்வபூதேசு மாம் பிரம்மச்சாரினி ரூபேன சன்ஷிதா |

நமஸ்தஸ்ஸாய் நமஸ்தஸ்ஸாய் நமஸ்தஸ்ஸாய் நம நாம: ||

ததாந கர பத்மபியாம அக்ஷமாலா காமண்டலு |

தேவி ப்ரசிதட்டு மயி பிரம்மச்சாரின்யனுதம்மா ||

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2023 Day 2: Know Significance, Puja Vidhi and Mantra of worshipping Maa Brahmacharini

Navratri 2023 Day 2: Know Significance, Puja Vidhi and Mantra of worshipping Maa Brahmacharini. Read on...
Desktop Bottom Promotion