For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரியின் முதல் நாள் வழிபாட்டு முறைகளும், சொல்ல வேண்டிய மந்திரங்களும்…

|

Navratri 2023: நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்டாடப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த 9 நாட்களும் துர்கா தேவியின் 9 அவதாரங்களை போற்றி வழிபடப்படும். அந்த வகையில் நவராத்திரியின் முதல் நாளில், நவதுர்கைகளில் ஒருவரான சைலபுத்ரி தேவியை தான் தொழுது வழிபட வேண்டும்.

MOST READ: செல்வம், கல்வி, வீரம் பெருக சொல்ல வேண்டிய நவதுர்கை மந்திரங்கள்!

சைலபுத்ரி என்பவர் மலைகளின் மகளாக கருதப்படுபவர். 'சைல' என்றால் பாறைகள் அல்லது மலையை குறிக்கும். 'புத்ரி' என்றால் மகள் என்று பொருள். இயற்கை அன்னையின் முழுமையான வடிவம் என்றும் சைலபுத்ரி தேவியை கூறலாம்.

Navratri 2023 Day 1, Maa Shailputri Colour, Puja Vidhi, Timings, Aaarti, Mantra, Muhurat, Vrat Katha And Significance In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அன்னையின் தோற்றம்

அன்னையின் தோற்றம்

சைலபுத்ரி தேவி என்பவர் நெற்றியில் பிறை நிலவை கொண்டிருப்பவர். அவரது வலது கைகளில் திரிசூலமும், இடது கையில் தாமரை மலரும் கொண்டிருப்பார். அதுமட்டுமன்றி, நந்தி மீது அமர்ந்து, மலைகளில் சவாரி செய்பவராக சைலபுத்ரி தேவி காட்சியளிக்கிறார்.

சைலபுத்ரி தேவியின் வரலாறு

சைலபுத்ரி தேவியின் வரலாறு

துர்கா தேவியின் அவதாரமாக கருதப்படக்கூடிய சைலபுத்ரி தேவி, மலைகளின் மன்னரான பர்வத மகாராஜாவின் மகளாவார். மேலும், மலைகளின் அரசனாக கூறப்படும் இமயமலையின் மன்னர் ஹிமவானின் மகள் என்பதால், இவருக்கு ஹேமாவதி என்ற பெரும் உண்டு. முந்தைய பிறவியில், தக்ஷனின் மகளாக பிறந்த சதி, கணவன் சிவன், தனது தந்தையால் அவமானப்படுத்தப்பட்டதன் விளைவாக, யாகத்தில் இறங்கி தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார். அடுத்த பிறவியில், மலைகளின் மகளாக பிறந்த பார்வதி தேவி, தனது பிறப்பின் அர்த்தத்தை உணர்ந்து சிவனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டு, மீண்டும் சிவனை மணந்தார். சைலபுத்ரியின் கடும் தவம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. தவத்தின் பலனாக பிரம்ம தேவர் அவர் முன் தோன்றி, திருமணத்தின் வாயிலாக சிவபெருமான் அவரை ஏற்றுக்கொள்வார் என்ற வரமளித்தார். கடும் தவம் மேற்கொண்டதன் விளைவாக, தேவி உடல் மெலிந்து காணப்பட்டார் என்றும், சிவபெருமான் தனது தலையில் பாயும் கங்கையை தேவி மீது விழச்செய்தவுடன், மீண்டும் பழைய உடல் அழகை பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

சைலபுத்ரியின் முக்கியத்துவம்

சைலபுத்ரியின் முக்கியத்துவம்

இவள் ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரம் மூலாதாரமாக இருக்கிறாள். யோகிகள் தங்களுடைய யோக சாதனைகளை இவளை வணங்கியே துவங்குவர். அதனால் இவளே முதல் சக்தியாகப் போற்றப்படுகிறாள். உலகையே ஆளக்கூடியவர் என்பதால், தனது பக்தர்களின் அனைத்து விதமான பிரார்த்தனைகளையும் நிறைவேற்றக்கூடியவர். சைலபுத்ரியின் பிற பெயர்கள், ஹேமாவதி மற்றும் பார்வதி தேவி ஆகும். அதனால் தான் நவராத்திரியின் முதல் நாளில் சைலபுத்ரி தேவிக்கு முக்கியத்துவம் வழங்கி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

நவராத்திரியின் முதல் நாள் வழிபாடு

நவராத்திரியின் முதல் நாள் வழிபாடு

சைலபுத்ரி தேவிக்கு மிகவும் பிடித்தமான பூ, மல்லிகை. அதனால், நவராத்திரியின் முதல் நாள், சைலபுத்ரி தேவிக்கு மல்லிகை பூ கொண்டு அலங்கரித்து, பூஜை செய்வது சிறந்தது. விநாயகர் பூஜை தொடங்கி, நவராத்திரியின் முதல் நாளில் ஷோடஷோபாச்சார பூஜை செய்யுங்கள். இறுதியாக தீப ஆராதனையுடன் முடியுங்கள்.

சைலபுத்ரி தேவிக்கு உகந்த மந்திரங்கள்

சைலபுத்ரி தேவிக்கு உகந்த மந்திரங்கள்

நவராத்திரியன் முதல் நாளில் மேற்கொள்ளப்படும் பூஜையின் போது, சைலபுத்ரி தேவிக்கு இந்த மந்திரத்தை உச்சரித்தப்படி பூஜை மேற்கொள்ளுங்கள்.

"ஓம் தேவி ஷைலபுத்ராய் நம

ஓம் தேவி ஷெயில்புத்ராய் ஸ்வாஹா வந்தே வஞ்சித் லாபாய, சந்திரார்தாக்கிருதசேகரம்

விருஷருதம் சூலதாராம் சைலபுத்ரிம் யஷஸ்வினிம்"

சைலபுத்ரி பிரார்த்தனை

சைலபுத்ரி பிரார்த்தனை

"வந்தே வாஞ்சித லாபாய சந்திரார்தாக்கிருதசேகரம்

விருஷருதம் சூலதாராம் சைலபுத்ரிம் யஷஸ்வினிம்"

சைலபுத்ரி துதி

சைலபுத்ரி துதி

"யா தேவி சர்வபுதேசு மா சைலபுத்ரி ரூபேனா சம்ஸ்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ"

சைலபுத்ரி ஸ்தோத்திரம்

சைலபுத்ரி ஸ்தோத்திரம்

"பிரதாமா துர்கா த்வாமி பவாசாகரா தரணிம்

தன ஐஸ்வர்யா தாயினி சைலபுத்ரி பிரணாமம்யாம்

திரிலோஜனானி த்வாமி பரமானந்த பிரதியாமன்

சௌபாக்யரோக்ய தயினி சைலபுத்ரி பிராணாமம்யாம்

சாரசாரேஷ்வரி த்வாமி மகாமோக வினாஷினிம்

முக்தி புக்தி தாயினிம் சைலபுத்ரி பிராணாமம்யாம்"

சைலபுத்ரி கவசம்

சைலபுத்ரி கவசம்

"ஓம்காரா மே ஷிரா பாத்து மூலாதாரா நிவாஷினி

ஹிம்கரா பட்டு லாலதே பிஜரூபா மகேஸ்வரி

ஸ்ரீம்கரா பட்டு வதானே லாவண்யா மகேஸ்வரி

ஹும்கரா பட்டு ஹ்ருதயம் தாரிணி சக்தி ஸ்வகிருதா

பட்கரா பட்டு சர்வங்கே சர்வ சர்வி பாலப்பிரதா"

நவராத்திரி முதல் நாள் வழிபாட்டின் முக்கியத்துவம்

நவராத்திரி முதல் நாள் வழிபாட்டின் முக்கியத்துவம்

சைலபுத்ரி தேவியின் சக்தி மற்றும் மகிமை அளவில்லாதது. அதனால் தான், நவராத்திரியின் முதல் நாளில், சைலபுத்ரி தேவியை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சைலபுத்ரி தேவியை நினைத்து பூஜைகள் செய்வதால், வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி, வெற்றி பாதைக்கான வழி கிடைத்து, வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ்வீர்.

நவராத்திரியின் போது கட்டஸ்தபனா செய்வது ஒரு பொதுவான ஒன்று தான். அதற்கு, 9, 7 5, 3 அல்லது 1 என்ற கணக்கில் விதை மணிகளை எடுத்துக் கொள்ளவும். அதனை, பரப்பப்பட்ட மண் திட்டின் மீது நட்டு வைத்து, தினந்தோறும் தண்ணீர் ஊற்றி வரவும். இப்படி 9 நாட்களுக்கும் தண்ணீர் ஊற்றி நட்டு வைக்கப்பட்ட விதைகளை செடிகளாக வளர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2023 Day 1, Maa Shailputri Colour, Puja Vidhi, Timings, Aaarti, Mantra, Muhurat, Vrat Katha And Significance In Tamil

Navratri 2023 Day 1, Maa Shailputri Colour, Puja Vidhi, Timings, Aaarti, Mantra, Muhurat, Vrat Katha and significance in tamil. Read on...
Desktop Bottom Promotion