For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களோட பிறந்த நட்சத்திரத்தை சொல்லுங்க... இந்த வருஷம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...

ஒவ்வொரு ராசிக்குள்ளும் இரண்டு மூன்று நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. ஆகவே ராசியை விட, நட்சத்திரத்திற்கு ஏற்ற பலன்களைத் தெரிந்து கொள்வதே சிறந்தது.

|

பொதுவாக நாம் ஒவ்வொரு ராசிக்குமான பலன்களைத் தான் பார்ப்போம். ஆனால் அப்படி பார்க்கும் பலன்கள் ஒருசிலருக்கு சரியானதாகவும், சிலருக்கு பொருத்தமில்லாமலும் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் என்னவென்று தெரியுமா? அது தான் நட்சத்திரம். ஜோதிடத்தில், மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களைக் கொண்டிருக்கின்றன.

Nakshatra Horoscope 2021 Predictions As Per Nakshatra Astrology in Tamil

ஒவ்வொரு ராசிக்குள்ளும் இரண்டு மூன்று நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. இந்த நட்சத்திரமானது தனது குணங்களுடன் ராசியின் குணத்தையும் சேர்த்துக் கொண்டு, அதற்கேற்ப ஒருவருக்கு பலன்களை வெளிப்படுத்துகின்றன. ஆகவே ராசியை விட, நட்சத்திரத்திற்கு ஏற்ற பலன்களைத் தெரிந்து கொள்வதே சிறந்தது. இப்போது 2021 ஆம் ஆண்டிற்கான நட்சத்திரப் பலன்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஸ்வினி

அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது மற்றும் அதன் ராசி அடையாளம் மேஷம். இந்த நட்சத்திரகாரர்களுக்கு 2021 ஆம் ஆண்டின் தொடக்கம் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் நிதி முன்னணியிலும் அற்புதமாக இருக்கும். இருப்பினும், ஜனவரி நடுப்பகுதியில் இருந்து மார்ச் மாதம் வரை வாழ்வில் சில மாற்றங்களைக் காணலாம். இந்த காலத்தில் உங்கள் அன்புக்குரியவர்களை நம்புங்கள். செப்டம்பர் 16 முதல் நவம்பர் 9 வரை தேவையில்லாமல் பயணத்தை மேற்கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும்.

பரணி

பரணி

பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் மற்றும் ராசி அடையாளம் மேஷம். ஜோதிடத்தின் படி, இந்த நட்சத்திரகாரர்களுக்கு 2021 ஆம் ஆண்டில், ஜனவரி 17 முதல் மார்ச் வரையிலான காலம் உங்களுக்கு நிதி ரீதியாக பயனளிக்கும். இந்த காலத்தில் பணம் பெறுவதற்கான அறிகுறிகள் தெரியும். இருப்பினும் இந்த காலத்தில் உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மார்பு வலி அல்லது வேறு ஏதேனும் வலிகளை அனுபவித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். அன்பும், நம்பிக்கையும் திருமணமானவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். இந்த ஆண்டு யாருக்கும் கடன் கொடுக்கவோ அல்லது கடன் வாங்கவோ வேண்டாம்.

கிருத்திகை

கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் மற்றும் ராசி அடையாளம் மேஷம் மற்றும் ரிஷபம் ஆகும். இந்த நட்சத்திரகாரர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், குடும்பத்தில் பதட்டமான சூழ்நிலைகள் ஏற்படலாம். பிப்ரவரி மாதத்தின் கடைசியில், இழந்த பொருளை நீங்கள் திரும்பப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் சாதகமான முடிவுகளைப் பெற முடியாது. பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 11 வரை உங்கள் கோபத்தின் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வணிகக் கண்ணோட்டத்தின் படி, இந்த ஆண்டு சாதகமாக இருக்கும். அதாவது வணிகத்தில் வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இதனால் முடிவுகள் சாதகமாக இருக்கும்.

ரோஹிணி

ரோஹிணி

ரோஹிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் மற்றும் ராசி அடையாளம் ரிஷபம். இந்த நட்சத்திரகாரர்களுக்கு 2021 ஆம் ஆண்டு சாதகமாக இருக்கும். பிப்ரவரி 11 முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரை, பணியிடத்தில் வெற்றிக் காண்பீர்கள். அதோடு உயர் அதிகாரிகளின் உதவியும் கிடைக்கும். இது தவிர வணிக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள், வாழ்க்கைத் துணையிடம் இருந்து நன்மைகளைப் பெறுவார்கள். ஜூன் 16 முதல் ஆகஸ்ட் வரை நேரம் உங்களுக்கு நல்லதாக இருக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் நம்பிக்கைக்குரிய ஒருசில நபர்களை சந்திப்பீர்கள்.

மிருகசீரிடம்

மிருகசீரிடம்

மிருகசீரிடம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் மற்றும் ராசி அடையாளம் ரிஷபம் மற்றும் மிதுனம். இந்த நட்சத்திரகாரர்கள் 2021 ஆம் ஆண்டு உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆண்டின் தொடக்கத்தில் உடல்நல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பிப்ரவரி 14 முதல் மே வரையிலான காலம், உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். குழந்தை பெற நினைப்பவர்களுக்கு இந்த காலத்தில் அந்த நற்செய்தியை கேட்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் 26 முதல் உங்கள் உடல்நலம் சிறப்பாக இருக்கும். அதனால் உங்களுக்கு அமைதியும் கிடைக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை, இந்த காலம் அற்புதமாக இருக்கும். இந்த வருடத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்பையும் பெறுவீர்கள்.

திருவாதிரை

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு மற்றும் ராசி அடையாளம் மிதுனம். இந்த நட்சத்திரக்காரர்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும், வலுவான யோகங்கள் உருவாகி வருவதால், வேலை தேடுபவர்களுக்கு இந்நேரம் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்த வருடத்தில் வரவிருக்கும் எந்தவொரு சிக்கலிலிருந்தும் நீங்கள் விடுபடுவீர்கள். இருப்பினும், உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். செப்டம்பர் 11 முதல் எந்தவொரு நிதி முடிவை அல்லது பணத்தை முதலீடு செய்வதற்கு முன், உங்கள் வீட்டு பெரியவர்கள் அல்லது மூத்தவர்களுடன் கலந்துரையாட அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், நீங்கள் இழப்புகளை சந்திக்க நேரிடும். நவம்பர் முதல் ஆண்டு இறுதி வரை நீங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகளைக் கொண்டிருக்கலாம். எனவே, உங்கள் உடல்நலத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

புனர்பூசம்

புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு அல்லது வியாழன் மற்றும் ராசி அடையாளம் கடகம். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். எனவே எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இருப்பினும், பிப்ரவரி 11 முதல் ஜூன் வரையிலான காலம் வணிகம் மற்றும் பணி பயனுள்ளதாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். மேலும், திருமண வாழ்க்கைக்கு நேரம் பயனுள்ளதாக இருக்கும். ஜூலை 14 முதல் நீங்கள் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். அதோடு பழைய நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். இது தவிர, நீங்கள் புதிய வேலையைப் பெறுவீர்கள்.

பூசம்

பூசம்

பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி மற்றும் ராசி அடையாளம் கடகம். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சில மாதங்கள் காதலிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்து பிப்ரவரி 17 முதல் சீராக இயங்கும். நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். ஜூன் நடுப்பகுதியில் இருந்து, வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. தனுடன், வேலையற்றவர்களுக்கு வேலை கிடைப்பதற்கும் வலுவான யோகங்கள் உள்ளன. ஆண்டின் இறுதியில், நீங்கள் நீண்டகால நோய்களிலிருந்து விடுபடுவீர்கள்.

ஆயில்யம்

ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன் மற்றும் ராசி அடையாளம் கடகம். இந்த நட்சத்திரக்காரர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பங்குச் சந்தையில் பயனடைவார்கள். ரகசிய மூலங்களில் இருந்து பயனடையலாம். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உங்கள் குடும்பத்தினரிடமிருந்து நல்ல செய்தியைப் பெறலாம். உங்கள் பணியிடத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஜூலை மாதம் முதல் நவம்பர் வரை ஏதேனும் காரணமாக நீங்கள் சிக்கலை சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு பயனுள்ளதாக இருக்கும்.

மகம்

மகம்

மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது மற்றும் ராசி அடையாளம் சிம்மம். 2021 ஆம் ஆண்டின் தொடக்க காலம் சாதகமாக இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. அதுவும் ஆண்டின் தொடக்கத்தில் பணியிடத்தில் முன்னேறுவீர்கள். உங்கள் உயர் அதிகாரிகளுடன் வலுவான மற்றும் நல்ல உறவைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் உடல்நலம் சிறப்பாக மாறும். காதல் வாழ்க்கையும் அட்டகாசமாக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடிபெயர வாய்ப்புள்ளது. மொத்தத்தில் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம். முடிந்தவரை அமைதியாக இருங்கள்.

பூரம்

பூரம்

பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் மற்றும் ராசி அடையாளம் சிம்மம். ஜோதிடத்தின் படி 2021 ஆம் ஆண்டின் ஆரம்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலத்தில் உங்கள் தலையெழுத்து உங்களுக்கு சாதகமாக இருக்கும். பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து வேலையில் சில மாற்றங்களைக் காண்பீர்கள். இதனால் நிதி ரீதியாகவும் பயனடைவீர்கள். புதிய வேலையைத் தேடுவோருக்கு வேலை கிடைக்கக்கூடும். ஜூன் மாதத்திலிருந்து உங்கள் மனைவியிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் நவம்பர் மாதத்திலிருந்து செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

உத்திரம்

உத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் மற்றும் ராசி அடையாளம் கன்னி. 2021 ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டு முழுவதும் உங்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேண அறிவுறுத்தப்படுகிறது. ஜூன் மாதத்தில் உங்கள் உடலில் உள்ள நோயை அறிவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன. செப்டம்பர் 19 முதல், பொருளாதாரத்தில் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் சாத்தியங்கள் உள்ளன. இந் ஆண்டின் கடைசி காலம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹஸ்தம்

ஹஸ்தம்

ஹஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் மற்றும் ராசி அடையாளம் கன்னி. நிதியைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருக்கும். பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து உங்கள் பணியிடத்தில் முன்னேறுவீர்கள். இந்த நேரத்தில், உங்கள் கனவுகள் சில நிறைவேறும். செப்டம்பர் 13 முதல் உங்கள் உடல்நலம் சிறப்பாக இருப்பதாகத் தோன்றலாம். இருப்பினும், உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில், உங்கள் வாழ்க்கை துணையுடன் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆண்டு முழுவதும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவீர்கள். எனவே சிறிய விஷயங்களுக்காக மன அழுத்தத்தில் இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சித்திரை

சித்திரை

சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் மற்றும் ராசி அடையாளம் கன்னி மற்றும் துலாம். தொழிலைப் பொறுத்தவரை, ஜூன் மாதம் வரை ஆண்டு சாதகமாக இருக்கும். இந்த காலத்தில், நீங்கள் புதிதாக ஒன்றைத் திட்டமிட்டால், அது நிறைவேறும். பிப்ரவரி மாதம் முதல் மே வரை உங்களுக்கு நெருக்கமானவர்களின் அளவற்ற ஆதரவை பெறுவீர்கள். இருப்பினும், இந்த ஆண்டு வயிற்று பிரச்சினைகள் காரணமாக நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இது தவிர, உங்கள் வாழ்க்கை துணையிடமிருந்து அளவிட முடியாத அன்பைப் பெறுவீர்கள். மேலும் இந்த காலம் நிதிக் கண்ணோட்டத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்வாதி

ஸ்வாதி

ஸ்வாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு மற்றும் ராசி அடையாளம் துலாம். இந்த ஆண்டு நிலுவையில் உள்ள உங்களின் அனைத்து பணிகளும் செயல்பாட்டுக்கு வரும். இருப்பினும், உங்களுக்கு திடீர் இடமாற்றம் கிடைக்கலாம். ஜூன் 11 முதல் நீங்கள் ஒரு புதிய அன்பைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு, நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து உதவி பெறுவீர்கள். இது தவிர, உங்கள் வணிகத்தில் உங்கள் தந்தை உங்களுக்கு உதவக்கூடும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். செப்டம்பர் கடைசியில் உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படலாம்.

விசாகம்

விசாகம்

விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி குரு அல்லது வியாழன் மற்றும் ராசி அடையாளம் விருச்சிகம். இந்த நட்சத்திரக்காரர்கள் 2021 ஆம் ஆண்டு கூடுதல் கவனமாக இருக்கவும். ஆண்டின் தொடக்கத்தில் எந்த நடவடிக்கையையும் கவனமாக எடுக்கவும். ஜூன் 19-க்குப் பிறகு, உங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து உதவி பெறுவீர்கள். இது தவிர, திருமண வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஜூலை மாதத்தின் ஆரம்பம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரை, கொழுப்பு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த ஆண்டு, உங்கள் நிதி ஸ்திரத்தன்மையை பராமரிக்க விரும்பினால், உங்கள் பணத்தை கவனமாக செலவிடுங்கள்.

அனுசம்

அனுசம்

அனுசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி மற்றும் ராசி அடையாளம் விருச்சிகம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கியம் சிறப்பா இருக்கும். பிப்ரவரி மாதத்திலிருந்து உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார். மேலும் நீங்கள் அவருடன் நீண்ட தூர பயணத்திலும் செல்லலாம். ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு உங்களின் தடைப்பட்ட எந்த வேலையும் நடைபெறலாம். இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறைத் தன்மையைக் கொண்டுவரும். இருப்பினும், உங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறீர்கள். இல்லையெனில், கர்ப்பப்பை வலி போன்ற பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு நட்பில் சிறிது கவனம் செலுத்துங்கள். இல்லையெனில், நீங்கள் மற்றவர்களிடமிருந்து குறைபாடுகளை சந்திக்க நேரிடும்.

கேட்டை

கேட்டை

கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி புதன் மற்றும் ராசி அடையாளம் விருச்சிகம். இந்த ஆண்டின் ஆரம்பம் பணியைப் பொறுத்தவரை, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலத்தில் பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பிப்ரவரி மாதம் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். இருப்பினும், காதலர்களுக்குள் வேறுபாடுகள் உருவாகக்கூடும். வங்கி துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கு வலுவான வாய்ப்புக்கள் உள்ளன. செப்டம்பர் 21 முதல், வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான யோகம் உள்ளது.

மூலம்

மூலம்

மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது மற்றும் ராசி அடையாளம் தனுசு. இந்த வருடம் பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஜனவரி நடுப்பதியில் இருந்து மார்ச் வரை உங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உங்கள் அன்பில் நீங்கள் நம்பிக்கை வைக்க அறிவுறுத்தப்படுகிறது. முடிந்தால், செப்டம்பர் 16 முதல் நவம்பர் 09 வரை பயணிப்பதைத் தவிர்க்கவும். உடல்நலத்தைப் பற்றி பேசுகையில், மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

பூராடம்

பூராடம்

பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் மற்றும் ராசி அடையாளம் தனுசு. இந்த நட்சத்திரகாரர்களுக்கு ஆண்டின் ஆரம்பம் பயனுள்ளதாக இருக்கும். காதலைப் பொறுத்தவரை, ஜனவரி 17 க்குப் பிறகு நேரம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஏதாவது பரிசுகளை வழங்கலாம். பிப்ரவரி 13 முதல் ஜூன் 18 வரை நீங்கள் நிதி ரீதியாக பயனடைவீர்கள். இக்காலத்தில், நிதி சலுகைகள் மட்டுமல்லாமல் இழந்த பணத்தை திரும்பப் பெறுவதற்கான வலுவான சாத்தியங்கள் உள்ளன. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, குடல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உத்திராடம்

உத்திராடம்

உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் மற்றும் ராசி அடையாளம் தனுசு. இந்த வருடம் இந்த நட்சத்திர காரர்களுக்கு வேலையைப் பொறுத்தவரை, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மார்ச் 11 முதல் உங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து உங்களுக்கு அளவிட முடியாத உதவி கிடைக்கும். இது தவிர, ஜூன் மாதத்திலிருந்து சர்ச்சைக்குரிய சொத்திலிருந்து நன்மைகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் நிதி ரீதியாக பயனடைவீர்கள். உங்கள் செல்வம் மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

திருவோணம்

திருவோணம்

திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் மற்றும் ராசி அடையாளம் மகரம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்த பயணம் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டு உங்களின் நிதி விஷயங்கள் மேம்படும். ஜூன் 13 க்குப் பிறகு உங்கள் திருமண வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுப்பதற்கு முன்பு தாயின் கருத்தை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. செலவு செய்வதைத் தவிர்க்கவும். உடல்நலம் பற்றி பேசுவதானால், உங்கள் இடது கண்ணில் பிரச்சனையை சந்திக்கலாம். அதோடு இந்த பிரச்சனை ஆண்டு முழுவதும் இருக்கும்.

அவிட்டம்

அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் மற்றும் ராசி அடையாளம் மகரம். இந்த நட்சத்திரகாரர்கள் இந்த ஆண்டு ஒரு நல்ல செய்தியைப் பெறலாம். இது தவிர, அரசு வேலைக்குத் தயாராகி வருபவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கக்கூடும். பணியைப் பொறுத்தவரை, ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து நேரம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில், நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கை தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்ளக்கூடும்.

சதயம்

சதயம்

சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு மற்றும் ராசி அடையாளம் கும்பம். இந்த நட்சத்திர காரர்களுக்கு பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் வரை வெளிநாட்டிலிருந்து வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும், ஜூலை நடுப்பகுதி வரை திருமண வாழ்க்கையில் சில தொல்லைகள் இருக்கலாம். பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதியைப் பொறுத்தவரை, செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு அற்புதமாக இருக்கும். இந்த ஆண்டு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு கோளாறுகளை சந்திக்கலாம்.

பூரட்டாதி

பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி குரு அல்லது வியாழன் மற்றும் ராசி அடையாளம் கும்பம் மற்றும் மீனம். 2021 ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் ஏப்ரல் வரை பணியிடத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அதாவது செய்யும் வேலையில் கூடுதல் கவனமாக இருங்கள். மே மாதத்திற்குப் பிறகு உங்கள் திருமண வாழ்க்கையில் சில மோதல்கள் இருக்கலாம். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீரிழிவு நோயாளிகள் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவைப்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரிடம் செல்லுங்கள்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி மற்றும் ராசி அடையாளம் மீனம். 2021 ஆம் ஆண்டின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலத்தில் நிதி சலுகைகளைப் பெறுவீர்கள். இது தவிர மே 15-க்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கும், நன்மைகளைப் பெறுவதற்கும் வலுவான சாத்தியங்கள் உள்ளன. ஏப்ரல் 18-க்குப் பிறகு மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கையைப் பற்றி பேசுவதானால், அது உங்கள் எதிர்பார்ப்பை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் விரல்களில் அலர்ஜி பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது.

ரேவதி

ரேவதி

ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் மற்றும் ராசி அடையாளம் மீனம். இந்த ஆண்டின் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலம் வேலைத் தேடும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சண்டையிடுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. குழந்தைப் பெற நினைக்கும் தம்பதிகள் செப்டம்பர் 22 க்குப் பிறகு நல்ல செய்தியைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண், காது மற்றும் தொண்டை போன்ற பகுதிகளை கவனமாக பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதோடு அதிகம் கோபப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nakshatra Horoscope 2021 Predictions As Per Nakshatra Astrology in Tamil

Nakshatra Astrology 2021 provides you with detailed knowledge of predictions of all twenty seven Nakshatras. Read the Nakshatra Horoscope 2021 predictions in tamil.
Desktop Bottom Promotion