For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாராலும் கண்டுபிடிக்க முடியாத உலகின் மர்ம மனிதர்கள்...நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் உலக ரகசியங்கள்..

நாம் வாழும் இந்த உலகம் பல அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்தது. இதுவரை நம் உலகில் நடந்துள்ள பல மர்மங்களுக்கு இன்னும் விடை கண்டுபிடிக்கப்படவில்லை.

|

நாம் வாழும் இந்த உலகம் பல அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்தது. இதுவரை நம் உலகில் நடந்துள்ள பல மர்மங்களுக்கு இன்னும் விடை கண்டுபிடிக்கப்படவில்லை. நிகழ்வுகளுக்கு மட்டுமின்றி சில மனிதர்களைப் பற்றிய மர்மங்களுக்கும் இன்னும் விடை கண்டறியப்படவில்லை.

Mysterious People On Earth

வரலாற்றில் பலரும் தங்களின் சாதனைகளால் இடம்பிடிப்பார்கள், ஆனால் சிலரோ அவர்களை சுற்றி இருந்த மர்மத்தால் உலக வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். இவர்களின் அடையாளம் இன்றுவரை கண்டறியப்படவில்லை. அதனால்தான் இவர்கள் உலகின் மர்மமான மனிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த பதிவில் உலகின் மர்ம மனிதர்களின் பட்டியலில் இருப்பவர்கள் யாரென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டி.பி. கூப்பர்

டி.பி. கூப்பர்

நவம்பர் 24, 1971 அன்று, தன்னை டான் கூப்பர் என்று அழைத்துக் கொண்ட ஒரு நபர், போயிங் 727 விமானத்தை கடத்திச் சென்று தனது பிரீஃப்கேஸில் வெடிகுண்டு வைத்திருப்பதாக எச்சரித்தார். அவர் பணயத்தொகையாக $2,00,000 டாலரும், நான்கு பாராசூட்களும் கேட்டார். அவரது கோரிக்கைகளை நிறைவேற்றிய பின்னர், அவர் நள்ளிரவில் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்தார். அதற்குபின் அவருக்கு என்ன நடந்தது அவர் எங்கே தரையிறங்கினார் என்று இன்று வரை தெரியவில்லை. அவரது தோற்றம் மற்றும் மறைவு, இரண்டும் இன்னும் ஒரு மர்மமாகவே இருக்கின்றன. இந்த பெயர் கூட அவரின் உண்மையான பெயரா என்று தெரியவில்லை, இந்த பெயர் ஊடகங்களால் அவருக்கு வழங்கப்பட்டது.

பாபுஷ்கா லேடி

பாபுஷ்கா லேடி

1963 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், அடையாளம் தெரியாத ஒரு பெண் அந்த இடத்தில் இருந்தார். அந்த நேரத்தில் கைப்பற்றப்பட்ட சாட்சிகள் மற்றும் படங்களின்படி, அவர் ஒரு தலைக்கவசம் அணிந்து படுகொலையை அவரது கேமராவில் கைப்பற்றினார். படமெடுத்து முடிந்ததும், அவர் கூட்டத்தில் சேர்ந்து காணாமல் போனார். FBI கோரிக்கை வைத்தபோதிலும் அந்த பெண் தன்னுடைய அடையாளத்தை வெளிக்கொணரவில்லை. அவரின் அனைத்து புகைப்படங்களிலும் அவர் தன் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தார். அந்த பெண் யார், அங்கு அவர் என்ன செய்து கொண்டிருந்தார், அவர் ஏன் தன் அடையாளத்தை மறைத்தார் என்பது இன்றுவரை விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

தி மேன் ஃப்ரம் டார்டு

தி மேன் ஃப்ரம் டார்டு

1954 இல், ஒரு நபர் டோக்கியோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். வரைபடத்தில் தனது நாட்டை சுட்டிக்காட்டுமாறு பாதுகாப்பு அவரிடம் கேட்டபோது, அவர் அன்டோராவை சுட்டிக்காட்டினார். தனது நாட்டின் பெயர் டாரஸ் என்று அவர் கூறினார். இதற்கு முன்பு அவர் அன்டோராவைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. மறுபுறம், டாரஸ் பற்றி பாதுகாப்பு கேள்விப்பட்டதே இல்லை. அவரது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் காசோலை புத்தகம் அவர் சொன்னதை உறுதிப்படுத்தியது. குழப்பமடைந்த அதிகாரிகள் அவரை அருகிலுள்ள ஹோட்டலுக்கு அனுப்பி, இரண்டு அதிகாரிகளை அவரை கண்காணிக்க வெளியே விட்டனர். அடுத்த நாள் காலையில், அவர் எந்த தடயமும் இல்லாமல் மர்மமாக மறைந்துவிட்டார், அதன்பின் அவர் ஒருபோதும் கண்டறியப்படவில்லை.

MOST READ: தலைசுற்ற வைக்கும் பண்டைய இந்தியாவின் மோசமான செக்ஸ் விளையாட்டு... ஷாக் ஆகாம படிங்க...!

ஜாக் தி ரிப்பர்

ஜாக் தி ரிப்பர்

தொடர் கொலையின் ஒரு பகுதியாக 1888 ஆம் ஆண்டில், ஐந்து விபச்சாரிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். கில்லர் அவர்களின் தொண்டையை, வயிற்றை வெட்டி, அவர்களின் உள் உறுப்புகளை வெளியே எடுத்தார். பாதிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்ட விதம் கொலையாளிக்கு உடற்கூறியல் அல்லது அறுவை சிகிச்சை அறிவு இருக்கலாம் என்று கூறுகிறது. விசாரணையின் போது, காவல்துறையினருக்கும் ஊடகங்களுக்கும் கொலையாளியிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் பல கடிதங்கள் ஜாக் தி ரிப்பர் என்ற பெயருடன் கிடைத்தன. ஆனால் அவர் யார், ஏன் விபச்சாரிகளை மட்டுமே குறிவைத்தார்? இவை ஒருபோதும் பதிலளிக்கப்படாத கேள்விகளாக இன்றுவரை உள்ளது.

வூல்பிட்டின் பச்சை குழந்தைகள்

வூல்பிட்டின் பச்சை குழந்தைகள்

12 ஆம் நூற்றாண்டில், அசாதாரண பச்சை நிற தோலைக் கொண்ட இரண்டு குழந்தைகள், சகோதரர் மற்றும் சகோதரி என்று கூறிக்கொண்டு திடீரென்று சஃபோல்கில் உள்ள வூல்பிட் கிராமத்தில் தோன்றினர். அவர்கள் அறியப்படாத மொழியைப் பேசினர், பீன்ஸ் தவிர வேறு எதுவும் சாப்பிடவில்லை. விரைவில், அவர்கள் ஆங்கில மொழியைக் கற்றுக் கொண்டு மற்ற உணவுகளை உண்ணத் தொடங்கினர். அவர்களின் தோலின் பச்சை நிறமும் காலப்போக்கில் போய்விட்டது. சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டான், ஆனால் அவர்கள் நிலத்தடி உலகில் அமைந்துள்ள செயின்ட் மார்ட்டின் லேண்ட் என்ற இடத்திலிருந்து வந்ததாக சிறுமி கூறினார். அங்கு சூரியனே இல்லை என்றும், அங்குள்ள அனைத்தும் பச்சை நிறத்தில் இருப்பதாகக் கூறினர், ஆனால் இதுவரை அது கண்டறியப்படவில்லை. அவர்கள் வேற்று உலகத்தில் இருந்து வந்தவர்களா என்பது இன்றும் தீர்க்கப்படாத மர்மமாகும்.

காஸ்பர் ஹவுசர்

காஸ்பர் ஹவுசர்

மே 26, 1828 அன்று, நியூரம்பெர்க் தெருவில் ஒரு சிறுவன் தோன்றினான். அவர் 6 வது குதிரைப்படை படைப்பிரிவின் 4 வது படைப்பிரிவின் கேப்டனுக்கு எழுதப்பட்ட கடிதத்தை எடுத்துச் சென்றான். அந்த சிறுவன் தனது பெயர் காஸ்பர் என்று கூறியதுடன், சுமார் 2 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும், ஒன்றரை மீட்டர் உயரமும் கொண்ட இருண்ட தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வளர்ந்ததாக கூறினான். அவனது தந்தை ஒரு குதிரைப்படை சிப்பாய் என்பதைத் தவிர சிறுவனுக்கு தனது கடந்த காலத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவன் கருப்பு ரொட்டி மற்றும் தண்ணீரை மட்டுமே சாப்பிட்டான், அவன் வாழ்க்கையில் எந்த ஒளியையும் பார்த்திராதது போன்ற பளபளப்பான அனைத்து பொருட்களையும் பிடுங்கினான்.

MOST READ: ஆண்களை வசியம் செய்ய அவர்கள் குடிக்கும் பானத்தில் மாதவிடாய் இரத்தத்தை கலக்கும் விசித்திர பழக்கம்...!

ஏஜென்ட் 355

ஏஜென்ட் 355

இது அமெரிக்க புரட்சியின் போது ஜார்ஜ் வாஷிங்டனில் ஒரு பெண் உளவாளிக்கு வழங்கப்பட்ட புனைப்பெயர். அவர் ஒரு புத்திசாலித்தனமான ஏஜென்ட்டாக இருந்தார், இருப்பினும், ஒரு கப்பலில் பிரிட்டிஷாரால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், அங்கேயே இறக்கவும் நேரிட்டது. அவரது உண்மையான அடையாளம் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

முகமூடி கைதி

முகமூடி கைதி

1669 ஆம் ஆண்டில் ஒரு கைதி கைது செய்யப்பட்டார், அவர் அதே ஜெயிலரின் காவலில் சிறையில் வைக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். கருப்பு வெல்வெட் துணியால் மூடப்பட்டிருந்ததால் அவரது முகத்தை யாரும் பார்த்ததில்லை. 1703 நவம்பர் 19 அன்று அவர் மார்ச்சியோலி என்ற பெயரில் இறந்தார். அவரைப் பற்றி பல கதைகள் உள்ளன, ஆனால் அந்த முகமூடியின் பின்னால் முகத்தின் உண்மையான அடையாளத்தை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

பீரங்கி மனிதன்

பீரங்கி மனிதன்

ஜூன் 5, 1989 காலையில், சீன இராணுவம் தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டத்தை அடக்கியபோது, ஒரு நபர் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து, இராணுவத்தின் பீரங்கி முன்னால் தனி ஆளாக நின்றார். அவரது பெயர் வாங் வெயிலின் என்றும் அவர் ஒரு மாணவர் என்றும் ஒரு செய்தித்தாள் கூறினாலும், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி இந்த செய்தியை நிராகரித்தது. அந்த நபர் கைது செய்யப்படவில்லை என்றும் அவரைப் பற்றி எதுவும் தெரியாது என்றும் அவர்கள் அறிவித்தனர். இன்னும், அந்த மனிதனைப் பற்றியும் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றியும் நம்பகமான எந்த தகவலும் இல்லை.

MOST READ: இந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...!

இஸ்தால் பெண்

இஸ்தால் பெண்

1970 ஆம் ஆண்டில், பெர்கனில் உள்ள "டெத் பள்ளத்தாக்கில்" ஒரு பெண்ணின் அடையாளம் தெரியாத உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடல் நிர்வாணமாக இருந்தது, உடலுக்கு அருகில் அவரின் எரிந்த பாஸ்போர்ட் மற்றும் தூக்க மாத்திரைகளை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணைக்கு பின்னர் அந்த பெண் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்ய ஒன்பது போலி அடையாளங்களை வைத்திருந்தது தெரிய வந்தது. பிரேத பரிசோதனையில் அந்த பெண் இறப்பதற்கு முன்னர் பல தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டுள்ளார், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அது கொலையாகத்தான் இருகுக்குமென்று பலரும் நம்பினர். இருப்பினும், அந்த பெண் பற்றிய உண்மையான அடையாளம் இன்றுவரை கண்டறியப்படவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mysterious People On Earth

Here is the list of people whose identity never been found which turned them the most mysterious people on earth.
Story first published: Thursday, May 7, 2020, 11:53 [IST]
Desktop Bottom Promotion