Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சனி-புதன் பெயர்ச்சிகளுக்கு பின் ஜூன் 6 முதல் இந்த ராசிக்காரங்களோட வாழ்க்கை சிறப்பா இருக்கப் போகுது..
2022 ஜூன் மாதத்தில் புதன், சனியின் அடுத்தடுத்த மாற்றத்தால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் கிரகங்களின் இயக்கமானது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நவகிரகங்களில் புதன் மற்றும் சனி ஆகியவை நட்பு கிரகங்களாகும். இதில் 2022 ஜூன் 03 ஆம் தேதி வக்ர நிலையில் இருந்த புதன் வக்ர நிவர்த்தியாகி ரிஷப ராசியில் பயணிக்க ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து 2022 ஜூன் 5 ஆம் தேதி சனி கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்க தொடங்கினார்.

இப்படி சனி மற்றும் புதனில் ஏற்பட்ட அடுத்தடுத்த மாற்றம், அனைத்து ராசிகளிலும் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்கள் கெடுபலன்களையும் பெறலாம். இப்போது 2022 ஜூன் மாதத்தில் புதன், சனியின் அடுத்தடுத்த மாற்றத்தால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மனதில் விரக்தி உணர்வுகள் எழலாம். மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள். தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். ஆனால் யாருடனும் மிதமான அளவில் பேசுங்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களை தேடி வரலாம். புதிய ஆடைகள் அதிகம் சேரும். உடன்பிறப்புகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் மனம் சற்று குழப்பமாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் இருங்கள். வேலை மாற்றத்திற்கான வாய்ப்புகள் கூடும். அதிகம் கோபப்படுவதைத் தவிர்த்திடுங்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இடமாற்றத்திற்கும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக நம்பிக்கை இக்காலத்தில் மிகுதியாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் உற்சாகத்துடன் பணிபுரிவார்கள். தாயாரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை சற்று குழப்பமாக இருக்கும். வாகன வசதியில் குறைவு ஏற்படலாம். குழந்தைகளால் நல்ல செய்தியைப் பெறுவீர்கள். உரையாடலில் சமநிலையுடன் இருஙகள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மனதில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்படும். வியாபாரம் பெருகும். வேலை அதிகம் இருக்கும். லாபத்திற்கான வாய்ப்புகளும் அமையும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் சில தடைகளை சந்திக்கலாம். குழந்தைகளுக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களின் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உரையாடலில் சமநிலையுடன் இருங்கள். உங்களின் அறிவுசார் வேலைகள் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாக மாறும். உங்களின் அன்றாட வழக்கத்தில் இடையூறு ஏற்படலாம். உங்களின் தாயார் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பணியிடத்தில் சில சிரமங்களை சந்திப்பீர்கள். சகோதர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சற்று மனம் கலங்கி இருப்பார்கள். ஆனால் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். குடும்பத்துடன் புனித இடங்களுக்கு யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இசை மற்றும் கலையின் ஆர்வம் அதிகரிக்கும். சாந்தமாக பேசினாலும், உங்கள் சுபாவத்தில் எரிச்சல் இருக்கும். முக்கியமாக செலவுகள் அதிகமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள். வருமானம் குறையும் மற்றும் அதிக செலவு செய்யும் சூழ்நிலையும் ஏற்படும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இடமாற்றத்திற்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்படலாம். மனம் குழப்பத்துடன் இருக்கும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நண்பர்களின் உதவியால் வருமானம் அதிகரிக்கும். தந்தையின் ஆதரவால் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதிகப்படியான செலவுகளால் மனம் கலங்குவீர்கள். சில சர்ச்சைகளும் ஏற்படலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் சற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். போதுமான நம்பிக்கை நிறைந்திருப்பார்கள். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். இக்காலத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நம்பிக்கையும் விரக்தியும் கலந்த உணர்வுகள் மனதில் நிலைத்திருக்கும். பணியிடத்தில் சாதகமற்ற சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். அதோடு உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பரின் உதவின புதிய வேலை வாய்ப்பைப் பெறுவீர்கள். உங்களின் மரியாதை அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும்.

மீனம்
மீன ராசிக்காரர்களின் மன அமைதி அதிகரிக்கும். பேசும் போது சமநிலையை பேணுங்கள். குடும்ப பிரச்சனைகளில் கவனத்தை செலுத்துங்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். உங்கள் மீதான நம்பிக்கை உங்களுக்கு சற்று குறைவாக இருக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சொத்துக்களின் மூலம் உங்களுக்கு வருமானம் வரும்.



Click it and Unblock the Notifications











