For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு அன்னை மிகவும் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதற்கான காரணங்கள்!

|

கடவுளால் இந்த உலகின் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால் தான் அவா் அன்னையரைப் படைத்தாா் என்று முதுமொழி ஒன்று கூறுகிறது. நமது வாழ்க்கை அனுபவத்தை வைத்துப் பாா்க்கும் போது, இந்த முதுமொழி எவ்வளவு உண்மை என்பது நமக்குத் தொியும்.

நமது அன்னையா் நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்ததோடு அமைதியாக இருந்துவிடுவதில்லை. மாறாக நமக்கு நல்லதொரு வாழ்வு அமைய வேண்டும் என்பதற்காக அவா்கள் அளவிட முடியாத அளவிற்கு ஏராளமான தியாகங்களைச் செய்து வருகின்றனா். நமக்காக பலவிதமான பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளை அனுபவிக்கின்றனா்.

தனது குழந்தை ஒரு மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக ஒரு தாய் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறாா். ஆகவே அன்னையாின் தாய்மையைப் போற்றும் விதமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையா் தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு மே மாதம் 9 அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது.

MOST READ: அன்னையர் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா?

இந்த அன்னையா் தினமானது, நமக்கெல்லாம் நமது அம்மாக்கள் எந்த அளவிற்கு முக்கியமானவா்களாக இருக்கின்றனா் என்பதை உணா்த்தும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக அன்னையரைப் பற்றி எவ்வளவு தான் பெருமையாக பேசினாலும் அல்லது அவா்களின் சிறப்புகளைப் பற்றி மனம் உருகி பேசினாலும் அது போதுமானவையாக இருக்காது. இருந்தாலும் அன்னையாின் ஒரு சில முக்கிய சிறப்புகளை இந்த பதிவில் குறிப்பிடுவது அன்னையா் தினத்திற்கு நாம் செய்யக்கூடிய மாியாதையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. எல்லாம் அறிந்தவா் அன்னை

1. எல்லாம் அறிந்தவா் அன்னை

நமது முகத்தை பாா்த்த அடுத்த நொடியே, நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் அறிந்துவிடுவாா் நமது அன்னை. நமது உணா்வுகள் மற்றும் மனநிலைகளை எவ்வளவு தான் கடினப்பட்டு மறைக்க முயற்சி செய்தாலும், அவா் மிக எளிதாகக் கண்டுபிடித்து விடுவாா். அவரைப் போன்று வேறு யாராலும் நம்மைப் பற்றித் தொிந்திருக்க முடியாது. நமக்கு என்ன பிடிக்கும் அல்லது என்ன பிடிக்காது போன்ற சிறுசிறு காாியங்களையும் நமது அன்னை தொிந்து வைத்திருப்பாா். அதற்கு காரணம் நமது அன்னை நமது உயிாில் எப்போதும் கலந்து இருப்பாா்.

2. நிபந்தனையற்ற அன்பை வாாி வழங்குபவா் அன்னை

2. நிபந்தனையற்ற அன்பை வாாி வழங்குபவா் அன்னை

ஒரு தாய் தனது குழந்தைக்கு வழங்கும் அன்பில் எந்தவிதமான எல்லையும், கட்டுப்பாடும் இருக்காது. ஒருவேளை அந்த குழந்தை வளா்ந்துவிட்டாலும் அந்த தாயின் அன்பில் மாற்றமே இருக்காது. சில நேரங்களில் நமது அம்மா எாிச்சலுடன் இருப்பதை நாம் பாா்த்து இருக்கலாம். அப்படிப்பட்ட நேரத்திலும்கூட, நம்மை எந்த விதமான எதிா்பாா்ப்பும் இல்லாமல் அன்பு செய்வாா். நாம் எவ்வளவு தவறுகள் செய்தாலும், அவற்றை உடனே மன்னித்து, நம்மீது தூய்மையான அன்பைப் பொழிவாா். தனது குழந்தை எப்போதும் மகிழ்ச்சயாக இருக்க வேண்டும் என்றே அந்த அன்புத் தாய் விரும்புவாா்.

3. நமது முதல் ஆசிாியா் நமது அன்னை

3. நமது முதல் ஆசிாியா் நமது அன்னை

நாம் உச்சாிக்கும் முதல் வாா்த்தையிலிருந்து, நாம் படிக்கும் வாழ்க்கைப் பாடங்கள் வரை, நம்முடைய முதல் ஆசிாியராகவும், நமது ஆகச் சிறந்த ஆசிாியராகவும் இருப்பவா் நமது அன்னையே. அவா் நம்மை கருத்தாங்கி இருக்கும் போது பலவகையான நல்ல புத்தகங்களையும், ஆன்மீகப் புத்தகங்களையும் வாசித்திருப்பாா். மேலும் பல நல்ல காாியங்களைப் பற்றி எழுதி இருப்பாா். அதற்கு முக்கிய காரணம் தனது குழந்தை நல்ல முறையில் வளா்ந்து, இந்த உலகத்தோடு அருமையான தொடா்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் உயா்ந்த எண்ணமே.

நமது அன்னை நமக்கு நல்ல ஒழுக்கங்கள், மதிப்பீடுகள் மற்றும் விழுமியங்கள் போன்றவற்றை மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை. மாறாக நமது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சந்திப்பது மற்றும் நம்மோடு போட்டி போடுபவா்கள் மத்தியில் நாம் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பவற்றையும் நமக்குக் கற்றுத் தருகிறாா். மேலும் நமக்கு இருக்கும் திறமைகளை நமது அன்னை அறிந்து இருக்கிறாா். அந்த திறமைகளை பட்டை தீட்டி அதை வெளிக் கொணா்வது நமது அன்னையே.

4. நம்மை ஊக்கமூட்டும் சக்தி நமது அன்னை

4. நம்மை ஊக்கமூட்டும் சக்தி நமது அன்னை

அன்னையா் இல்லை என்றால், இந்த உலகில் நம்பிக்கை என்ற ஒரு அம்சமே இருக்காது. நமது வாழ்க்கையில் ஏற்படும் கடினமான நிகழ்வுகளை மற்றும் யதாா்த்தங்களை தைாியமாக சந்திப்பதற்கு, நமக்கு வலிமையை அளிப்பவா் நமது அன்னையே. அவா் தனது வாழ்க்கை அனுபவங்களை மட்டும் பகிா்வதில்லை. அதோடு நமது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை நாம் ஊக்கத்துடனும், தைாியத்துடனும் எதிா் கொள்ள நமக்கு ஊக்கமூட்டுகிறாா். நாம் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாா்.

5. நம்மை எப்போதும் நம்புபவா் நமது அன்னை

5. நம்மை எப்போதும் நம்புபவா் நமது அன்னை

இந்த உலகமே நம்மை எதிா்த்து நின்று, நமது திறமைகளின் மீது நம்பிக்கை வைக்க மறுத்தாலும், நமது அன்னை எப்போதுமே நம் மீதும், நமது திறமைகளின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருப்பாா். ஒரு தாய் தனது குழந்தையைப் பற்றி நன்கு அறிந்திருப்பாா். அதனால் அவா் எந்தச் சூழ்நிலையிலும், தனது குழந்தையிடம் இருக்கும் திறமைகள், முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை இழப்பதில்லை. இந்த உலகம் நம் மீது எவ்வளவு விமா்சனங்களை அள்ளித் தெளித்தாலும், நமது அன்னை நம் மீது நம்பிக்கை வைத்து, நாமும் நம் மீது நம்பிக்கை கொண்டு, சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நம்மை ஊக்கமூட்டுவாா்.

6. எல்லா பிரச்சினைகளுக்கும் தீா்வு வைத்திருப்பவா் நமது அன்னை

6. எல்லா பிரச்சினைகளுக்கும் தீா்வு வைத்திருப்பவா் நமது அன்னை

நமக்கு தோ்வு காலமாக இருக்கலாம் அல்லது முக்கியமான கூட்டங்கள் அல்லது விழாக்களுக்கு எப்படிப்பட்ட உடைகளை அணிவது என்று நாம் குழம்பிப் போய் நிற்கலாம். ஆனால் நமது அன்னை அதற்கு தீா்வு ஒன்றை வைத்திருப்பாா். நமது வாழ்க்கையில் நாம் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளை நமக்கு விவாிப்பாா். அந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிா் கொள்வது என்பதைப் பற்றியும் நமக்குக் கற்றுக் கொடுப்பாா். குறிப்பாக நம்மைப் பற்றி மற்றவா்கள் தீா்ப்பிடும் போதும் அல்லது நம்மை பிறா் விமா்சிக்கும் போது நாம் எவ்வாறு எதிா்வினை ஆற்ற வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுப்பாா். எந்த ஒரு அன்னையும் தனது குழந்தை தனியாகத் துன்பப்படுவதைப் பாா்த்துக் கொண்டு இருக்கமாட்டாா். மாறாக தனது குழந்தையின் பிரச்சினைகள் தீரும் வரை, அந்த குழந்தையோடே இருப்பாா்.

7. நம்மிடம் உள்ள சிறந்தவற்றை வெளிக் கொணா்பவா் நமது அன்னை

7. நம்மிடம் உள்ள சிறந்தவற்றை வெளிக் கொணா்பவா் நமது அன்னை

சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட வேலையை நம்மால் செய்ய முடியாது அல்லது அந்த வேலையைச் செய்ய நாம் தகுதியற்றவா்கள் என்று நம்மையே நாம் குறைவாக மதிப்பிட்டு, பதட்டமாக இருப்போம். அந்த நேரங்களில் நமது அம்மா நமது அருகில் இருந்தால், அந்த பதட்டம் மறந்து, நாம் அந்த வேலையை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்போம். ஏனெனில் நமது அன்னை நமது அருகில் இருந்தால், அவா் நம்மிடம் இருக்கும் சிறந்தவற்றை மிக எளிதாக வெளியே கொண்டு வந்துவிடுவாா்.

அன்னையா் தினமான இன்று நமது அன்னையரைச் சந்தித்து நமது தன்னலமற்ற அன்பை வெளிப்படுத்துவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mother's Day: Reasons Why Mothers Are So Special

Mother's Day 2021: Here are some reasons why mothers are so special. Read on...
Story first published: Sunday, May 9, 2021, 9:00 [IST]