Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
இந்த 5 ராசிக்காரங்க மோசமான தீய குணம் கொண்டவர்களாம்... இவங்க உங்க வாழ்க்கையையே அழிச்சிடுவாங்களாம்!
கன்னி ராசிக்காரர்கள் வெளிப்படையாக கெட்டவர்களைப் போல தோற்றமளிக்க மாட்டார்கள். அவர்கள் உங்கள் முகத்திற்கு முன்பு அப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். மாறாக நீங்கள் தீயவர் என்று நம்பும்படி அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள்.
பூமியில் வாழும் எல்லா மக்களும் இங்கு ஒரேமாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணங்கள், பண்புகள் மற்றும் ஆளுமை திறன் இருக்கும். எல்லா மக்களும் நல்லவர்களாக இருக்க விரும்புவார்கள் மற்றும் நல்லவர்களுடன் இருக்க விரும்புவார்கள். மோசமான கெட்ட குணம் கொண்ட நபர்களிடம் பழக யாரும் விரும்ப மாட்டார்கள். சிலரை நேரடியாக கெட்டவர்கள் என்று அடையாளம் காணலாம். ஆனால், சிலர் நல்லவர்போல செயல்பட்டு உடல் முழுவதும் நஞ்சை குணங்களை கொண்டிருப்பார்கள். அப்படிபட்ட நபர்கள் சூழ்நிலையை அளவிடுவார்கள் மற்றும் அதற்கேற்ப செயல்படுவார்கள்.

அவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள் மற்றும் தெளிவான இதயங்களைக் கொண்டுள்ளனர். இருப்பினும், மிகவும் தீயவர்களாகவும் எல்லைக்குட்பட்ட தீயவர்களாகவும் இருக்கக்கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள். தங்கள் வேலையைச் செய்ய எதையும் செய்யக்கூடிய அத்தகைய ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் தீய செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் பொய் சொல்கிறார்கள் மற்றும் ஏமாற்றும் குணம் கொண்டுள்ளனர். அவர்கள் உங்கள் முகத்திற்கு முன்பு இனிமையாக நடந்துகொள்வார்கள். ஆனால் உங்களைப் பற்றி தீய எண்ணங்களைக் கொண்டிருக்கலாம். மேலும் உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் பற்றி தவறாகப் பேசலாம். மிதுன ராசிக்காரர்களுக்கு இவ்வாறு நடந்துகொள்வதில் குற்ற உணர்வே இருக்காது. ஏனென்றால் அவர்கள் அதற்காக ஒரு நியாயத்தை கூறுவார்கள். இதனால், இந்த ராசிக்காரர்கள் தவறான வாக்குறுதிகளை அளித்து உங்களை ஏமாற்றி அவர்களின் வழிக்கு உங்களை அழைத்துசெல்லலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் வேலையைச் செய்ய வேண்டியிருந்தால் மிகவும் சூழ்ச்சியாகச் செயல்படுவார்கள். மற்றவர்கள் முன்னிலையில், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை பெரிதுபடுத்துகிறார்கள். இது உங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏனெனில், அவர்களுக்கு நீங்கள் உதவ முயற்சிப்பீர்கள். இதனால் அவர்கள் உங்களை மோசமாக உணர வைப்பார்கள். மேலும் அவர்களின் மோசமான வேலையை உங்களை செய்ய வைப்பார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் வெளிப்படையாக கெட்டவர்களைப் போல தோற்றமளிக்க மாட்டார்கள். அவர்கள் உங்கள் முகத்திற்கு முன்பு அப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். மாறாக நீங்கள் தீயவர் என்று நம்பும்படி அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள். இந்த ராசிக்காரர்கள் ரொம்ப நல்லவர் போல நடந்துகொள்வார்கள். செயலற்ற-ஆக்கிரமிப்பு உத்திகளைப் பயன்படுத்தி கையாளுதல் மற்றும் ஆதிக்கம் செலுத்துவதில் இந்த ராசிக்காரர்கள் சிறந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அடுத்தவர்கள் முன்னிலையில், மிகவும் அப்பாவியாக நடந்துகொள்வார்கள். ஆனால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கொடிய எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் தூய்மையான நபர் போல நடந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு மிகவும் கொடிய மோசமான குணம் இருக்கிறது. ஏனென்றால், உங்களை அறியாமலேயே இந்த ராசிக்காரர்கள் அவர்களின் மோசமான வேலையை உங்களை செய்ய வைக்கும் திறமை அவர்களிடம் உள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்கள் ரகசியத்தை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள். அவர்கள் உங்களை அச்சுறுத்துவார்கள், அவர்களுடன் சேர்ந்து செல்லும்படி மிரட்டுவார்கள். அவர்கள் மிகவும் மோசமான மனிதர்களாக இருப்பார்கள். இதனால், தெரியாமல் கூட உங்கள் இரகசியங்களை இந்த ராசிக்காரர்களிடம் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசு, மகரம். கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தீய எண்ணங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் மனதில் எதையும் வைத்திருப்பது அரிது. உங்களை பாதிக்கும் வகையில் இவர்கள் நடந்துகொள்ள மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications