Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு ரொமான்டிக்காக காதலிக்கவே தெரியாதாம்...கத்துக்கோங்கப்பா...!
ரொமான்டிக்காக நடந்து கொள்ள தெரியாமல் இருப்பது மோசமான குணமோ அல்லது குறைபாடோ அல்ல. இவர்கள் எதார்த்தமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள், கற்பனையில் மிதப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.
காதல் என்பதோ, ரொமான்ஸ் என்பதோ வெறும் வார்த்தையில் மட்டும் இருக்கக்கூடாது. தினமும் மலர் கொடுப்பது, பிடித்த இடத்திற்கு அழைத்து செல்வது, முத்தம் கொடுப்பது போன்ற செயல்களெல்லாம் காதலுடன் செய்ய வேண்டும். கடமைக்காக செய்யும்போது அது காதலோ, அன்போ சுத்தமாக இருக்காது. சில ஆண்கள் மனதில் அன்பு இருந்தாலும் அவர்களுக்கு ரொமான்டிக்காக நடந்து கொள்ள தெரியாது.

ரொமான்டிக்காக நடந்து கொள்ள தெரியாமல் இருப்பது மோசமான குணமோ அல்லது குறைபாடோ அல்ல. இவர்கள் எதார்த்தமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள், கற்பனையில் மிதப்பவர்களாக இருக்க மாட்டார்கள். சில ராசிக்காரர்கள் காதலை வெளிப்படுத்த தெரியாதவர்களாகவும், விரும்பாதவர்களாகவும் ரொமான்ஸ் பண்ண தெரியாதவர்களாகவும் இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ரொமான்ஸ் பண்ண தெரியாதவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமானவர்கள், ஆக்கபூர்வமானவர்கள், உணர்ச்சிவசப்படாதவர்கள் மற்றும் இவர்கள் ரொமான்ஸ் எளிதில் வரும் நபர்கள் அல்ல. இவர்கள் மற்றவர்களை போல வேடிக்கையாகவோ, ஆக்கப்பூர்வமாகவோ காதலிக்க மாட்டார்கள் அது இவர்களுக்கு என்ன செய்தாலும் வராது. இவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் விதம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும், ஆனால் அது ரொமான்டிக்காக இருக்குமா என்பது சந்தேகமே.

மிதுனம்
காதலை பற்றி வாய்க் கிழிய சொற்பொழிவு ஆற்றுவதில் மிதுன ராசிக்காரர்கள் சிறந்தவர்கள். ஆனால் காதலை வெளிப்படுத்துதல் என்று வரும்போதுதான் இவர்கள் தோல்வியை சந்திக்கின்றனர். இவர்கள் மனதில் காதலை வெளிப்படுத்த பல திட்டங்கள் இருக்கலாம் ஆனால் அதனை செயல்படுத்தும் விதத்தில் இவர்கள் அதிகம் சொதப்புவார்கள். காதல் என்பது சொல்லில் மட்டும் இருக்கக்கூடாது செயலிலும் இருக்க வேண்டும் என்று இவர்களுக்கு புரியாது. இவர்களாக கஷ்டப்பட்டு காதலை வெளிப்படுத்த ஒரு திட்டத்தைத் தயாரித்தாலும் மிகவும் எளிதாக இவர்கள் அதிலிருந்து திசைமாறி விடுவார்கள். இதனால் இறுதியில் இவர்கள் எண்ணம் தோல்வியில்தான் முடியும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பொறுமைசாலிகள் மேலும் ஆர்வமிக்கவர்கள், ஆனால் காதல் விஷயங்களைச் செய்யும்போது அவர்கள் ஆர்வத்தை இழக்க நேரிடும். இந்த விஷயத்தில் இவர்கள் கும்ப ராசிக்காரர்களை போன்றவர்கள் இவர்களுக்கு நாடகத்தனமான, பழமையான காதலை வெளிப்படுத்தும் முறைகள் மீது எப்பொழுதும் நம்பிக்கையோ, ஆர்வமோ இருக்காது. இவர்கள் எல்லோரும் பாராட்டும்படி தன்னுடைய காதலை நிரூபிக்க விரும்புவார்கள். ஆனால் அதற்கு இவர்கள் செய்வது நேர்மையற்றதாகவும், புரியாததாகவும் இருக்கும்.

கன்னி
உங்களுக்கான பிரச்சினைகளை சரி செய்வது, உங்களின் மீது அக்கறையாக இருப்பது போன்ற எதார்த்த செயல்களின் மூலம் கன்னி ராசிக்காரர்கள் தங்களின் அன்பை நிரூபிக்க முயலுவார்கள். இவர்களின் காதல் மொழி வேறுவிதமானது, இவர்களின் ஆக்கிரமிப்பு குணம் சிலசமயம் காதலிப்பவர்களுக்கு எரிச்சலைக் கூட ஏற்படுத்தும். இவர்களின் கண்ணோட்டத்தில் காதல் என்பதே அறிவு சார்ந்ததாக இருக்குமே தவிர உணர்ச்சிகள் சார்ந்தகாக இருக்காது . இவர்கள் ரொமான்ஸ் பண்ணுவதை நேரத்தை வீணடிப்பது இரு என்ன மாட்டார்கள், ஆனால் நேரத்தை வீணடிக்காமல் உபயோகமாக காதலிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

மகரம்
காதல் மற்றும் ரொமான்ஸ் என்று வரும்போது மகர ராசிக்காரர்கள் மிகவும் வினோதமான அனுபவத்தை பெறுவார்கள். தங்கள் துணையின் மீது அதீத அக்கறை செலுத்தும் இவர்கள் அவர்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்ய துணிவார்கள். ஆனால் இவர்கள் எதார்த்தமாக காதலிக்க நினைப்பவர்கள். பரிசுகள், பூக்கள், வாரமானால் வெளியே செல்வது போன்ற சம்பிரதாய காதல் முறைகள் இவர்க்ளுக்கு பிடிக்காது. தங்கள் மீது அழுத்தம் திணிக்கப்படுவதை இவர்கள் வெறுக்கிறார்கள். எனவே சலிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் காதலில் இருந்தால் அவற்றை செய்வதை இவர்கள் தவிர்க்கிறார்கள்.



Click it and Unblock the Notifications