For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 6 ராசி ஆண்களை எப்பவும் நம்பிராதீங்க... முக்கியமா கல்யாணமான ஆண்களை தெரியாமகூட நம்பிராதீங்க...!

எந்தவொரு உறவாக இருந்தாலும் அதிலிருக்கும் நேர்மைதான் அதன் உறுதித்தன்மையை நிர்ணயிக்கிறது. குறிப்பாக காதல் மற்றும் திருமணத்தில் நேர்மைதான் அந்த உறவு இறுதிவரை நிலையாக இருக்க முக்கியமானது.

|

எந்தவொரு உறவாக இருந்தாலும் அதிலிருக்கும் நேர்மைதான் அதன் உறுதித்தன்மையை நிர்ணயிக்கிறது. குறிப்பாக காதல் மற்றும் திருமணத்தில் நேர்மைதான் அந்த உறவு இறுதிவரை நிலையாக இருக்க முக்கியமானது. அது குறையும்போது திருமண உறவில் எண்ணற்ற சிக்கல்கள் ஏற்படத் தொடங்கும். துரதிர்ஷ்டவசமாக பலரும் இந்த நேர்மையைக் கடைபிடிப்பதில்லை.

Most Unfaithful Male Zodiac Signs in Tamil

ஆண்களைப் பொறுத்தவரை ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் துணைக்கு நேர்மையாக இருக்க மாட்டார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ராசி ஆண்களிடம் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது எந்தெந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீனம்

மீனம்

இவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள், சிறிய விஷயங்களுக்காகக் கூட அதிக உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். உறவில் ஏற்படும் சிறிய அசௌகரியம் அல்லது ஏமாற்றத்தைக் கூட இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே சண்டைகள் வரும்போது இவர்களின் மூளை குறுக்கு வழியில் வேறு உறவுகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிடும். அதே நேரத்தில், உறவு ஒரு கொந்தளிப்பான கட்டத்திற்கு சென்றாலும் அவர்கள் தங்கள் உறவைத் தக்க வைத்துக்கொள்ள கடினமாக உழைக்கிறார்கள். இதுவும் சிக்கலாக உள்ளது, ஏனெனில் ஒரு இறுக்கமான உறவை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, அவர்கள் இந்த செயல்பாட்டில் பலரை காயப்படுத்தி வழிதவறலாம்.

மிதுனம்

மிதுனம்

உறவுகளைப் பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்கள் அதிக கவனம் மற்றும் முக்கியத்துவத்தை எதிர்பார்பார்கள். அவர்களின் துணை 24 மணி நேரமும் அவர்களுக்கு கவனம் அளிக்க வேண்டும். பிரச்சனை என்னவென்றால், அது குறையும்போது, அவர்கள் வேறோருவரைக் கண்டுபிடிக்க ஆசைப்படுகிறார்கள். மிதுன ராசிக்காரர்கள் உறுதியற்றவர்கள், எனவே அவர்கள் தங்கள் விருப்பங்களைத் திறந்து வைத்திருப்பார்கள் அல்லது B திட்டத்தை தயாராக வைத்திருப்பார்கள். எனவே அவர்களின் தேவைகள் நிறைவேறாத போது அவர்கள் வேறு உறவை தேடிச்செல்வார்கள்.

MOST READ: இந்த 4 ராசிக்காரங்க 2022-ல் கடுமையான வறுமையை அனுபவிக்கப் போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அதிகமாக கடலை போடுபவர்கள் மற்றும் மக்கள் அவர்களுடன் உறவில் இருக்க தயங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். இருப்பினும், இந்தக் குணம் அவர்களை வேடிக்கையாகச் சுற்றி இருக்கச் செய்கிறது, மேலும் அவர்கள் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும்போது நீங்கள் அதிக கவனத்தைப் பெறுவீர்கள். இருப்பினும், கவனமாக இருங்கள், ஏனென்றால் துலாம் ராசிக்காரர்கள் மற்ற பெண்களிடமும் அதே பாராட்டுகளையும் கவனத்தையும் எளிதில் பொழிவார்கள். அதில் பெரும்பாலானவை பாதிப்பில்லாதவையாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் அது விவகாரமானதாக மாறக்கூடும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் துரோகம் செய்யாமல் இருக்கலாம், ஆனால் காதல் மற்றும் பிற தொடர்புகளில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அவர்கள் முன்னாள் காதலியுடன் விஷயங்களை நெருக்கமாக வைத்திருக்கலாம் அல்லது அவர்களுடன் இன்னும் தொடர்பிலும் இருக்கலாம். அவர்கள் உடல்ரீதியாக உங்களை ஏமாற்றுவது அரிதாக இருந்தாலும் மனரீதியாக நிச்சயம் உங்களுக்கு துரோகம் இழைக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில் இவர்கள் தங்கள் துணைக்கு எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் தங்கள் துணை தனக்கு உண்மையாக இல்லை என்று உணரும்போது இவர்களின் மனநிலை முற்றிலும் மாறிவிடும். தங்கள் துணை தனக்கு ஏற்படுத்திய வலியை விட நூறு மடங்கு வலியை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென்று நினைப்பார்கள், அதற்கான செயல்களிலும் இறங்குவார்கள்.

MOST READ: Taurus Horoscope 2022:குருபகவான் நுழைவதால் 2022 ரிஷப ராசிக்காரராக்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் தங்கள் உறவின் குறிப்பிட்ட அம்சங்களைப் பார்க்கிறார்கள். இது பொதுவாக மகிழ்ச்சி, ஆதரவு மற்றும் ஸ்திரத்தன்மையை மையமாகக் கொண்டது. இருப்பினும், எந்தவொரு துணையும் இவை அனைத்தையும் எல்லா நேரத்திலும் வழங்க முடியாது. எனவே அவர்கள் வீட்டில் அதை பெறாதபோது, ​​அவர்கள் அதை வெளியே தேடும் வாய்ப்பு உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Unfaithful Male Zodiac Signs in Tamil

Here is the list of most unfaithful male zodiac signs in relationship.
Desktop Bottom Promotion