Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
நொடியில் மனிதர்களின் உயிரைப் பறிக்கும் கொடிய விஷத்தைக் கொண்ட உயிரினங்கள்!
உலகில் மிகவும் விசித்திரமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆபத்தான சில உயிரினங்களைப் பற்றி பார்க்கப் போகிறோம். கீழே பட்டியலிடப்பட்டுள்ள உயிரினங்களின் விஷம் மிகவும் ஆபத்தானது.
பூமியில் பல உயிரினங்கள் மிகவும் அழகாக காணப்படுகின்றன. இந்த உயிரினங்கள் அனைத்தும் அழகினால் மக்களை ஈர்க்கின்றன. மேலும் பூமியில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் தனக்கென தனிச்சிறப்பு கொண்டவை. அழகு ஆபத்தானது என்று கூறுவார்கள். அதற்கேற்ப அழகாக காட்சியளிக்கும் உயிரினங்களுள் பல சாதாரணமானவையாக இருந்தாலும், சில மிகவும் ஆபத்தானவை. சில உயிரினங்களை நாம் பார்க்கும் போது அதன் விசித்திரமான உருவமைப்பினால், இவை வேற்று கிரகத்தில் இருந்து வந்தது போன்று தெரியும்.

இன்று நாம் பார்க்கப் போவது, உலகில் மிகவும் விசித்திரமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆபத்தான சில உயிரினங்களைப் பற்றி பார்க்கப் போகிறோம். கீழே பட்டியலிடப்பட்டுள்ள உயிரினங்களின் விஷம் மிகவும் ஆபத்தானது. இந்த விஷமானது ஒருவரை ஒரே நொடியில் கொல்லும் சக்தி கொண்டவை. ஆனால் இந்த உயிரினங்களைப் பார்த்தால், கொடிய உயிரினம் போன்றே தெரியாது. இப்போது உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த உயிரினங்களைக் காண்போம்.

பாக்ஸ் ஜெல்லிமீன் (Box Jellyfish)
ஜெல்லிமீன் ஆபத்தானது. அதுவும் பாக்ஸ் ஜெல்லிமீன் உயிரினங்களிலேயே மிகவும் கொடியது. உலகின் பல பகுதிகளில் நீச்சல் வீரர்களின் மர்ம மரணங்களுக்கு பாக்ஸ் ஜெல்லிமீன் காரணம். ஏனெனில் இவற்றின் சில இனங்கள் இதயம், நரம்பு மண்டலம் மற்றும் தோல் செல்களைத் தாக்கும் நம்பமுடியாத அளவிற்கு வலிமையான மற்றும் அதிக சக்தி வாய்ந்த நச்சுகளை உருவாக்குகின்றன. இந்த நச்சுக்கள் மிக விரைவாக ஒரே நிமிடத்தில் மரணத்தை ஏற்படுத்தும்.

புனல்-வலை சிலந்தி (Funnel Web Spider)
இந்த வகை சிலந்தி ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டது. இதன் காரணமாக இது ஆஸ்திரேலிய புனல் வலை சிலந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த விஷயம் சயனடை விட ஆபத்தானது. இந்த சிலந்தி யாரையாவது கடித்தால், அது 15 நிமிடங்களில் மரணத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்திய சிவப்பு தேள்
உலகில் உள்ள தேள்களிலேயே அதிக விஷமுள்ள தேள் தான் 'இந்தியன் ரெட் ஸ்கார்பியன்'. முதலில் இந்தியாவில் மட்டுமே காணப்பட்ட இந்த தேள், தெற்கு ஆசியாவில் உள்ள பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது. இந்த தேள் ஒருவரைக் கடித்தால், அவர் 72 மணிநேரத்தில் இறந்துவிடுவார்.

நீல வளைய ஆக்டோபஸ் (Blue Ring Octopus)
ஆக்டோபஸ் பற்றி நாம் அனைவருமே அறிவோம். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. அவற்றில் நீல வளையம் கொண்ட ஆக்டோபஸ் மிகவும் ஆபத்தானது. இதன் விஷம் ஒருவரை 30 நொடிகளில் கொல்லும் என்று கூறப்படுகிறது. இந்த ஆக்டோபஸ் இந்திய பெருங்கடல் மற்றும் ஆஸ்திரேலியாவின் கடல்களில் காணப்படுகிறது.

கூம்பு நத்தை (Cone snail)
கூம்பு நத்தை மிகவும் ஆபத்தானது. இது ஒருவரை நொடியில் முடக்கிவிடும் அளவுக்கு ஆபத்தானது. உலகில் சுமார் 600-க்கும் அதிகமான நத்தைகள் உள்ளன. ஆனால் அவற்றில் கூம்பு நத்தை மிகவும் கொடிய விஷத்தைக் கொண்டது.

ஸ்டோன்ஃபிஷ் (Stonefish)
கூம்பு நத்தை போன்றே ஸ்டோன்ஃபிஷ் மற்றொரு கொடிய விலங்கு. இது கடலில் சேற்று அல்லது பாறைகளின் அடிப்பகுதியில் தங்கியிருக்கும். இந்த ஸ்டோன்ஃபிஷ்ஷின் விஷம் நம்பமுடியாத அளவிற்கு வேதனையை தரக்கூடியது மற்றும் உயிருக்கு ஆபத்தானது. ஆனால் இந்த ஸ்டோன்ஃபிஷ் ஆசியாவின் சில பகுதிகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யப்பட்டு, சமைத்து தரப்படுகிறது.

பஃபர் மீன்
பஃபர் மீன், அதன் சக்திவாய்ந்த விஷத்திற்கு பெயர் பெற்றது. ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் பஃபர் மீன் ஒரு சுவையான உணவாக விளங்குகிறது. இந்த உணவுகள் ஃபுகு மற்றும் போக்-உஹ் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மீனின் தோல் மற்றும் சில உறுப்புக்களில் மிகவும் கொடிய விஷம் உள்ளது. இந்த விஷம் உணர்வின்மையுடன், நாக்கு மற்றும் தசைகளின் செயல்பாட்டை இழக்கச் செய்து, மீளமுடியாத பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications