Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 5 ராசிக்காரங்க எண்ணம் எப்போதும் மோசமானதாகத்தான் இருக்குமாம்...இவங்ககூட இருக்குறதே பிரச்சினைதான்!
வாழ்க்கையில் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க உழைப்பும், முயற்சியும் எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு நேர்மறை எண்ணங்களும் அவசியமானதாகும்.
வாழ்க்கையில் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க உழைப்பும், முயற்சியும் எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு நேர்மறை எண்ணங்களும் அவசியமானதாகும். நேர்மறை எண்ணங்கள் இல்லாமல் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்களால் ஒருபோதும் நீங்கள் நினைத்த வெற்றியை அடைய முடியாது. ஏனெனில் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் ஆன்மாவை ஊடுருவி உங்கள் வாழ்க்கையில் இருளை அதிகரிக்கும்.

எதிர்மறை எண்ணங்கள் நிம்மதியின்மை, தொடர் தோல்விகள் மற்றும் வாழ்க்கையில் அதிருப்தியை ஏற்படுத்தும். துரதிர்ஷ்டவசமாக ஒருவரின் எதிர்மறை எண்ணங்கள் அவர்களை மட்டுமின்றி அவர்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும். இத்தகைய எதிர்மறையான நபரின் அருகில் இருப்பது உங்களுக்குள் எதிர்மறை எண்ணங்களை மட்டுமே எழுப்பும். இத்தகைய குணாதிசயங்களை அடையாளம் காண்பது கடினமான பணியாகும். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்பொழுதும் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களின் கலவையாக இருப்பார்கள். சிலசமயம் இவர்களுக்கு எதுவுமே இவர்கள் நினைத்தபடி நடக்காது. அதுபோன்ற தருணங்களில் இவர்கள் உலகமே முடிந்து விட்டதாக நினைப்பார்கள். சுற்றி எவ்வளவு பேர் இருந்தாலும் தாங்கள் உலகில் தனியாக இருப்பதாக நினைப்பார்கள். நேர்மறையான விஷயங்கள் நடக்கும் போது இவர்கள் கடவுளுக்கு நன்றி கூறுவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், இவர்கள் தாங்கள் செய்யும் அனைத்து விஷயத்திலும் சகுனம் பார்ப்பார்கள், படுக்கையின் தவறான பக்கத்தில் எழுந்தால் கூட அன்று ஏதாவது எதிர்மறையாக நடக்கும் என்று பயப்படுவார்கள். அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் இவர்களின் எதிர்மறையான எண்ணங்கள் தோல்வியை இவர்களை நோக்கி இழுத்து வரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அவர்கள் நினைத்தபடி எதுவும் நடக்காதபோது எதிர்மறையான மனநிலையில் விழுவார்கள், மேலும் தடைகளை சந்திக்கும் போது இவர்கள் குழந்தைப் போல அழுவார்கள். இவர்களின் எதிர்மறை மனநிலை எப்போது வேண்டுமென்றாலும் இவர்களைத் தாக்கலாம், இவர்களின் இந்த மோசமான எதிர்மறை எண்ணம் பல மணி நேரங்களுக்கு நீடிக்கும். இவர்கள் எப்போதும் நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் இருப்பவர்களுக்கு அருகில் இருப்பது நல்லது, இல்லையெனில் இவர்கள் எந்தவித விபரீதமான முடிவுகளை எடுக்க தயங்க மாட்டார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பிரச்சினைகள் மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது இவர்கள் எதிர்மறையான எண்ணங்களுக்கு ஆளாவார்கள். எதிர்மறையான எண்ணங்களில் இருக்கும்போது இவர்கள் மிகவும் சீற்றம் மிகுந்தவர்களாக இருப்பார்கள், மேலும் இவர்களின் எதிர்மறை எண்ணம் அருகில் இருப்பவர்களையும் பாதிக்கும். இவர்களின் மனசோர்விற்கு தீர்வு இவர்களிடம்தான் உள்ளது, அதனை கண்டறியும் வரை இவர்களின் கோபத்திற்கு எல்லையே இருக்காது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் பொதுவாக மிகவும் கடின உழைப்பாளிகள், ஆனால் அவர்களின் உழைப்பிற்கு பலன் கிடைக்காதபோது அவர்களின் சுறுசுறுப்பு, மகிழ்ச்சி என அனைத்தும் காணாமல் போய்விடும். இவர்களின் ஆற்றல் மூலம் அனைத்தும் எதிர்மறை எண்ணங்களால் மூழ்கடிக்கப்படும். ஒட்டு தோல்வியில் இருந்து மீண்டு வர இவர்கள் நீண்ட காலம் எடுத்துக் கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications