For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவையே உலுக்கிய மர்மங்கள் நிறைந்த கொலை வழக்குகள்...நம்ம நாட்டுல கூட இப்படிலாம் நடக்குமா?

|

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்க்ளுக்கு கொலை வழக்குகள் சுவாரஸ்யமனதாக இருக்கும்.

கதைகளிலேயே கொலை மர்மங்கள் கதைகளை பார்ப்பதும், படிப்பதும்தான் சுவாரஸ்யமானதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் நடந்த சில கொலை வழக்குகள் திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு சுவாரஸ்யமானதாகவும், திகில் நிறைந்ததாகவும் இருந்துள்ளது. இதில் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவெனில் இதில் பல வழக்குகளுக்கு இன்றும் தீர்வு கிடைக்கவில்லை, மேலும் சில வழக்குகள் அவசரகதியில் முடித்து வைக்கப்பட்டன. இந்த பதிவில் இந்தியாவே உற்றுநோக்கிய தீர்க்கப்படாத வழக்குகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆருஷி கொலை வழக்கு

ஆருஷி கொலை வழக்கு

ஆருஷி தல்வார் மற்றும் ஹேம்ராஜ் பஞ்சாடே ஆகியோர் 2008 மே 16 ஆம் தேதி இந்தியாவை உலுக்கிய இரண்டு பெயர்கள். அன்றுதான் 14 வயதான ஆருஷி 45 வயதான ஹேம்ராஜுடன் கொலை செய்யப்பட்டார் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பட்டியலில் ஏராளமான பெயர்கள் இடம் பெற்றன. இப்போது சுஷாந்த் சிங் மரணத்திற்கு கிடைத்த அளவிற்கு இந்த வழக்கிற்கு மீடியா வெளிச்சம் கிடைத்தது. யார் அந்த கொலைகாரன் என்று இந்தியாவே தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. கொலை செய்தது ஆருஷியின் தந்தையா அல்லது தாயா அல்லது வீட்டு ஊழியர்கள் இருவரா என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஆருஷியின் பெற்றோர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இன்றுவரை கொலைகாரன் யார் என்று தெரியவில்லை.

பிரத்யும் தாகூர் கொலை வழக்கு

பிரத்யும் தாகூர் கொலை வழக்கு

2017 செப்டம்பர் மாதத்தில் குர்கானின் ரியான் சர்வதேச பள்ளியின் கழிவறையில் இரண்டாம் வகுப்பு மாணவர் பிரத்யும் தாகூர் இறந்து கிடந்தான். யாருக்கும் தீங்கு செய்ய இயலாத குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் இறந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது, இதற்காக பள்ளி பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டார். ஆனால் தீவிர விசாரணைக்குப் பிறகு பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வை ஒத்தி வைப்பதற்காக இந்த பாதகத்தை செய்ததாக அறிக்கை வந்தது. இதில் நடத்துனர் ஏன் கைது செய்யப்பட்டார் என்று இன்றுவரை தெரியவில்லை.

ஜெசிகா லால் கொலை

ஜெசிகா லால் கொலை

90 களில் டெல்லியில் வளர்ந்த அல்லது வாழ்ந்த அனைவருக்கும் ஜெசிகா லாலின் பெயர் நினைவில் இருக்கும். 1999 ஆம் ஆண்டில், பெரும்பாலான செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் ‘யாரும் ஜெசிகாவைக் கொல்லவில்லை' என்று கூறின. சம்பவத்தை நேரில் பார்த்த அனைவருக்கும் நியாபக மறதி நோய் வந்துது போல சாட்சி கூறினார்கள். மிகச்சிலரே அந்த மாடல் எப்படி இறந்தார் என்று சாட்சி கூற முன்வந்தனர். இறுதியில் தொழிலதிபர் மனு சர்மா ஜெசிகா தனக்கு மதுபானம் வழங்க மறுத்ததால் அவரை சுட்டுக் கொன்றார் என்பது வெளிப்பட்டது.

வரலாற்றின் நடுங்க வைக்கும் கொடூரமான மரண தண்டனை முறைகள்... இதயம் வலிமையானவர்கள் மட்டும் படிங்க...!

ஷீனா போரா கொலை

ஷீனா போரா கொலை

ஷீனா போராவின் கொடூரமான மரணம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைவிட அதிர்ச்சியானது, அவரது தாயார் இந்திராணி முகர்ஜியாவை கொலை செய்ய வேண்டுமென்றே சதி செய்ததற்காக கைது செய்யப்பட்டார். முகர்ஜியா ஒருபோதும் இரண்டு குழந்தைகளைப் பெற்றதாக ஒப்புக் கொள்ளவில்லை மேலும் ஷீனாவை தனது சகோதரி என்று கூறிவந்தார். இந்த கொலை வழக்கால் முர்கி நிறுவனத்தை சேர்ந்த இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜியின் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள் வெளிவந்தது.

 அமர் சிங் சாம்கிலா

அமர் சிங் சாம்கிலா

பிரபல பஞ்சாபி பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் சாம்கிலா 1988 மார்ச் 8 ஆம் தேதி அவரது மனைவி மற்றும் இசைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுடன் கொல்லப்பட்டார். பட்டப்பகலில் பலருக்கு முன்னால் இந்த கொலை நடந்த போதிலும் யாரும் கைது செய்யப்படவில்லை. அவரது வேலை காரணமாக சாம்கிலாவுக்கு இந்த நிலை ஏற்பட்டதாக அவரது கூட்டாளிகள் பலர் புகார் செய்தனர், ஆனால் அந்த அச்சுறுத்தல்கள் எங்கிருந்து வந்தன என்பது இன்னும் தெரியாத ஒரு புதிராகவே உள்ளது. அவரது இசையமைப்புகளில் பெரும்பாலானவை திருமணத்திற்கு புறம்பான விவகாரங்கள், குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றை சார்ந்ததாக இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சாக்கோ சம்பவம்

சாக்கோ சம்பவம்

சாக்கோவின் தவறு என்னவென்றால், அவர் சுகுமாரா குருப் என்ற மனிதரை சார்ந்திருந்ததுதான். 8,00,000 காப்பீட்டுத் தொகையை கோருவதற்காக பிந்தையவர் அவரைக் கொன்றார். தகவல்களின்படி சாக்கோ கழுத்தை நெரித்துக் கொன்றது மற்றும் அவரது உடல் சுகுமாரா குருப்பின் காருக்குள் எரிக்கப்பட்டது.

இப்போது கேரளாவில் மிகவும் விரும்பப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான சுகுமாரா வெளிநாடு தப்பிச் சென்றதாகவும், அவர் இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த கொலை மர்மம் அதிகாரப்பூர்வமாக கேரளாவின் தீர்க்கப்படாத வழக்குகளில் ஒன்றாகும்.

அட்னன் பதர்வாலா

அட்னன் பதர்வாலா

மும்பையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகன், அட்னன் 2007 ஆகஸ்ட் 18 அன்று கொல்லப்பட்டார். இந்த வழக்கை பொறுத்தவரையில் அவர் ஆரம்பத்தில் ரூ .2 கோடி பணம் கேட்கும் பொருட்டு கடத்தப்பட்டார், ஆனால் மறுநாள் தகவல் வெளிவந்தவுடன் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ததாக ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் 2012 ஜனவரி 30 அன்று ஐந்து பேரில் நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள்தான் கொலை செய்தார்களா என்று இறுதிவரை தெரியவில்லை.

நீரஜ் குரோவர்

நீரஜ் குரோவர்

இந்த வழக்கு அதன் கொடூரத்தன்மையால் நிறைய கவனத்தைப் பெற்றது. நீரஜ் குரோவரின் உடல் துண்டுகளாக நறுக்கப்பட்டு மூன்று குப்பைப் பைகளில் அடைக்கப்பட்டு காட்டில் கொழுத்தப்பட்டது. அவர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்த அவரது நண்பர்களில் ஒருவரான மரியா சுசைராஜ் பின்னர் இந்த கொலையில் தொடர்புடையவர் என்று கண்டறியப்பட்டது. மரியாவின் காதலன் நீராஜை ஆத்திரத்தில் கொன்றது, அவரது மனைவிக்கு ஒரு விவகாரம் இருப்பதாக சந்தேகித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தழுவி திரைப்படமும் எடுக்கப்பட்டது.

16 வயது சிறுமி ஒருநாள் பிரதமராக மாறினார்...சினிமாவை மிஞ்சிய சுவாரஸ்யம்...எங்கு மற்றும் ஏன் தெரியுமா?

ஷரத் கொலை

ஷரத் கொலை

கடத்தல் வழக்கு தவறாக நடந்ததைப் போல, பெங்களூரில் வருமான வரி அதிகாரியின் 19 வயது மகன் கொலை செய்யப்பட்டார். நகரின் புறநகரில் உள்ள ராமோஹள்ளி ஏரிக்கு அருகே அவரது உடல் ஒன்றாக கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது வெளியே தெரிந்தவுடன் கடத்தல்காரர்கள் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவர் கடத்தப்பட்ட அதே நாளில் அவரது உடலை அப்புறப்படுத்தினர். ஆனால் சம்பவத்தின் உண்மையான திருப்பம் கடத்தல்காரர்கள் அவரது நண்பர்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்தபோது வந்தது. பாதிக்கப்பட்டவரின் மிகவும் நெருங்கிய நண்பரான விஷால் கொலை மற்றும் கடத்தலின் சூத்திரதாரி ஆவார். 19 வயதான ஷரத் ஒரு பொறியியல் மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் கடனை அடைக்க விரும்பியதால் கொன்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Mysterious Murder Cases of India

Check out the list of most mysterious and sensational cases of murder in India.