Just In
- 6 hrs ago
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- 19 hrs ago
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- 21 hrs ago
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- 21 hrs ago
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
Don't Miss
- News
ஏன் மாமா இப்படி காலையிலேயே.. கேள்வி கேட்டதால் மாமனார் விபரீதம்.. மருமகளும் விஷம் குடித்து சாவு
- Movies
பாட்டு சூப்பரப்பு... புது இசை அமைப்பாளரின் ஆடியோவை வாங்கிய யுவன் சங்கர் ராஜா
- Automobiles
காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்
- Finance
அமெரிக்கா சொன்ன நல்ல செய்தி.. இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா..!
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா?
நம்மிடம் விசுவாசமாக இருக்கும் ஒருவரையாவது நமது வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டும். அதுதான் நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். அது நமது நண்பராகவோ, வாழ்க்கைத்துணையாகவோ அல்லர் குடும்ப உறுப்பினராகவோ கூட இருக்கலாம். நமக்கு தேவைப்படும் போதெல்லாம் அவர்கள் நமக்காக இருப்பார்கள். இவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள உங்களை துறக்கமாட்டார்கள், உங்களை பாதுகாக்க ஆபத்தை எதிர்த்து நிற்பார்கள்.
நம்முடைய நல்ல நேரம், கெட்ட நேரம் என அனைத்திலும் நமக்குத் துணையாக நிற்கும் இவர்கள் தங்களின் நேர்மையாய் மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. அவர்களின் நேர்மையையும், உங்கள் மீதான அன்பையும் நீங்கள் சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த குணம் சிலருக்கு அவர்களுக்கு அவர்களின் ராசி மூலம் வரலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த குணம் இருக்கும் என்று பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாதமானவர்கள், நம்பகமானவர்கள், விடாமுயற்சி உள்ளவர்கள். ஒருவரின் மீது அன்போ, நம்பிக்கையோ வைத்து விட்டால் இறுதிவரை அவர்களுக்காக நிற்பார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி இவர்கள் யோசிக்க மாட்டார்கள். உங்களின் சுகதுக்கங்கள் அனைத்திலும் இவர்களின்பங்கேற்பு இருக்கும். நீங்கள் விரக்தியடைந்து சோர்வடைந்து இருந்தால் உங்களை நன்றாக உணர வைக்க அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்வார்கள். விஷயங்கள் கடினமாக, சிக்கலானதாக அல்லது ஆபத்தானதாக இருக்கிறது என்று ஒருபோதும் இவர்கள் உங்களை விட்டு பிரியமாட்டார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் உங்களுக்காக எப்பொழுதும் சாய்வதற்கு தங்கள் தோளை தயாரித்து வைத்திருப்பார்கள். உங்களின் தேவைகளைப் பொறுத்து உங்களை பொது இடங்கள், வீடு என அனைத்து இடத்திலும் உங்களை பாதுகாப்பார்கள். அவர்களின் தேவை உங்களுக்கு இருக்கும்போதெல்லாம் நீங்கள் அழைக்காமலேயே உங்களைத் தேடி வருவார்கள். கடக ராசிக்காரர்கள் ஒரு முடிவு செய்துவிட்டால் அது தவறான பாதையாக இருந்தாலும் அதிலிருந்து விலகமாட்டார்கள். இவர்களின் விசுவாசம் விலைமதிப்பில்லாதது, மிகவும் அரிதாக உங்களிடம் இருந்து எதையாவது எதிர்பார்ப்பார்கள்.
MOST READ: நீங்கள் தூங்கும் நிலை உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் நேர்மையையும், அன்பையும் தங்களின் உதவி மூலம் வெளிப்படுத்துவார்கள். உங்களுக்கு உதவி தேவைப்படும்போது உங்களுக்காக அங்கு இருப்பார்கள், நீங்கள் தவற செயல்களை செய்யும்போது உங்களை தடுத்து பாதுகாப்பார்கள், சோகமாக இருக்கும்போது உங்களை உற்சாகமடைய வைப்பார்கள். உங்களின் அனைத்து மோசமான நேரங்களிலும் தங்களின் ஆதரவை உங்களுக்காக கொடுப்பார்கள். இவர்கள் சிக்கல்களை கண்டு ஓடமாட்டார்கள், அதனை நேருக்கு நேராக நின்று எதிர்ப்பார்கள், தங்கள் கையில் எதுவும் இல்லாதபோது கூட இவர்கள் அஞ்சமாட்டார்கள்.

கன்னி
கன்னி ராசியை விட நம்பிக்கைக்குரியவர்கள், விசுவாசமிக்கவர்களை பார்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். உங்களுக்கு எந்த வகையில் தேவையோ அந்த வகையில் உதவ இவர்கள் தயாராய் இருப்பார்கள். இவர்கள் புத்திசாலிகளும் கூட, எனவே அவர்கள் எப்போதும் சிறந்த ஆலோசனையை வழங்குகிறார்கள். தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறும் இவர்கள் சரியான வழியை உங்களுக்கு காட்டுவார்கள். இவர்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதால் ஆபத்து தொடங்குவதற்கு முன்னரே அதனை சரியாக கணித்துக் கூறுவார்கள்.

மகரம்
உங்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கும் மிகச்சிறந்த புத்திசாலியான விசுவாசிகள் மகர ராசிக்காரர்கள். உங்களுக்கு தேவைப்படும்போது அவர்கள் எப்போதும் இருப்பார்கள், உங்களுக்கு அவர்களின் தேவை உள்ளது என்று உங்களுக்கேத் தெரியாதபோதும் அவர்களும் இருப்பார்கள். இவர்கள் உங்களுடன் இருந்தால் எத்தகைய சவாலையும் நீங்கள் எதிர்கொள்ளலாம். ஒரு உறுதியை எடுத்துவிட்டால் எந்த சலுகை கிடைத்தாலும் அதனை விட்டு விலகமாட்டார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்களுக்கு பிடித்தவர்களிடம் இரக்கத்துடனும், விசுவாசத்துடனும் நடந்து கொள்வார்கள். இவர்களின் உதவி உங்களுக்குத் தேவைப்படும் போது இவர்களின் ஆறாவது அறிவு அவர்களுக்கு அதனை தெரிவிக்கும். உணர்ச்சிபூர்வமான தந்திரங்களில் இவர்கள் பொதுவாக சிக்கிக் கொள்ள விரும்ப மாட்டார்கள், ஆனால் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் அதனை சரி செய்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். உங்களின் தவறுகளுக்கு இவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.