For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லாக்கப் கொலை முதல் போதைமருந்து கடத்தல் வரை செய்யும் உலகின் மிகமோசமான காவல்துறை இருக்கும் நாடுகள்...

பிற துறைகளின் ஊழலை கண்டறிவதற்கும், தண்டனை பெற்றுத்தருவதற்கும்தான் காவல்துறை உள்ளது. ஆனால் நடைமுறையில் நாம் கண் முன்னே பார்ப்பது அதற்கு முற்றிலும் எதிர்மறையாகவே உள்ளது.

|

ஊழல் என்பது அனைத்து உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் அனைத்து துறைகளிலும் உள்ளது. தற்போது இந்தியா முழுவதும் மக்களின் கோபம் காவல் துறையின் மீது திரும்பியுள்ளது. காவல் துறையில் நுழையும் ஊழல்தான் மற்ற அனைத்து துறைகளின் ஊழலுக்கும் தொடக்கப்புள்ளியாக மாறுகிறது.

Most Corrupt Police Force In the World

பிற துறைகளின் ஊழலை கண்டறிவதற்கும், தண்டனை பெற்றுத்தருவதற்கும்தான் காவல்துறை உள்ளது. ஆனால் நடைமுறையில் நாம் கண் முன்னே பார்ப்பது அதற்கு முற்றிலும் எதிர்மறையாகவே உள்ளது என்பது கசப்பான உண்மை. பல நாடுகளில் காவல்துறைக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதால் அவர்கள் அதிக பணம் சம்பாதிக்க ஊழலில் ஈடுபடுகிறார்கள். இந்த பிரச்சினை இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ளது. இந்த பதிவில் இந்தியா தவிர்த்து உலகின் எந்தெந்த நாடுகளில் ஊழல் நிறைந்த காவல்துறை உள்ளது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கென்யா

கென்யா

கென்யாவின் 92 சதவீத மக்கள் தங்கள் நாட்டின் காவல்துறையினர் ஊழல்வாதிகளாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் போலிஸார் தங்களிடம் பணம் பறித்துள்ளதாகவும், சட்ட ஒழுங்கை புறக்கணிப்பதாகவும் கூறியுள்ளனர்.

பர்மா

பர்மா

பர்மாவின் காவல்துறையில் நிறைந்துள்ள ஊழல் அங்குள்ள குடிமக்களின் வாழ்க்கையை அன்றாடம் தொந்தரவு செய்கிறது. இங்கு குடிமக்கள் பணம் கொடுக்கமால் எந்தவித புகார்களும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அவர்கள் நாட்டின் குடிமக்களிடமிருந்து வெவ்வேறு வழிகளில் மற்றும் வெவ்வேறு காரணங்களுக்காக பணம் பறிக்கிறார்கள். இங்கு லாக்கப் மரணங்களும் அதிகம் நடக்கிறது.

ஈராக்

ஈராக்

ஈராக் போலீஸ் படையில் ஊழலின் வரலாறு வெகுதூரம் செல்கிறது. அவர்கள் கடத்தல், லஞ்சம் மற்றும் பிற நடவடிக்கைகளில் பங்கேற்கிறார்கள், இதன் மூலம் அவர்கள் நல்ல தொகையை சம்பாதிக்கிறார்கள். பொதுமக்களைப் பாதுகாப்பது அவர்களின் பொறுப்பு அல்லது கடமையாக இங்கு கருதப்படுவதில்லை. தங்கள் சட்டவிரோத செயலுக்காக இவர்கள் பொதுமக்களையும் கொலை செய்கின்றனர்.

MOST READ: ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா? இந்த விஷயத்தில் அவர்களை நம்பாதீங்க...!

சோமாலியா

சோமாலியா

சோமாலிய காவல்துறை பயனற்றதாக இருக்கிறது மேலும் அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் லஞ்சம், மிரட்டி பணம் பறித்தல், திருட்டு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் காவல்துறை ஒவ்வொரு நாளும் மோசமடைந்து கொண்டே வருகிறது. ஏனெனில் அவர்கள் பணம் பறித்தல் மற்றும் பொதுமக்கள் மீது வன்முறையையில் இறங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். குற்றவாளிகளை பணம் பெற்றுக்கொண்டு விடுவிப்பது, கைது செய்யாமல் இருக்க பணம் பெற்றுக்கொள்வது போன்ற அனைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

சூடான்

சூடான்

சூடானின் காவல்துறை தன்னுடைய ஊழல் திறமையை பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதன் மூலமும் மக்களிற்கு எதிராக செயல்படுவதன் மூலமும் பலமுறை நிரூபித்துள்ளது. இங்கு மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து விஷ்யங்களும் காவல்துறையின் ஆதர்வுடன்தான் நடத்தப்படுகிறது.

MOST READ: ஜூலை மாசம் கிரக மாற்றத்தால இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் அடிக்கபோகுதாம்... உங்க ராசி என்ன?

ரஷ்யா

ரஷ்யா

உலக வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யாவின் காவல்துறையும் அதன் ஊழல்களுக்காக பிரபலமானதாகும். ரஷ்ய அரசுக்கும் நமது அரசை போலவே காவல்துறையின் அனைத்து ஊழல்களும் தெரியும். காவல்துறையின் மிருகத்தனம், லஞ்சம் பறிப்பது, சமூக விரோத செயல்கள், பொதுமக்களை துன்புறுத்துவது என அனைத்தையும் அரசர்கள் அறியும். இருப்பினும், இங்கு போலவே தங்கள் சுயநலத்திற்காக காவல்துறையை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் காவல்துறைக்கு உலகின் மோசமான காவல்துறை பட்டியலில் இருக்க அனைத்து தகுதிகளும் உள்ளது. அப்பாவி குடிமக்களை கைது செய்வதும் அவர்களிடமிருந்து லஞ்சம் வாங்குவதும் பாகிஸ்தானின் காவல்துறையின் முக்கிய பணியாகும். காவல்துறை ஒரு நாட்டின் சட்டத்தை நிர்வகிப்பதற்கும் அமல்படுத்துவதற்கும் அறியப்பட்டாலும் இந்த காவல்துறையினர் நாட்டில் ஆழ்ந்த வேரூன்றிய ஊழலை ஏற்படுத்தி கூடுதல் பணம் சம்பாதிக்க சுயநல மற்றும் குற்றச் செயல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹைட்டி

ஹைட்டி

உலகின் அதிக ஊழல் நிறைந்த போலீஸ் படை ஹைட்டியைச் சேர்ந்தது. இந்த நாட்டின் போலீஸ் படை அவர்களின் நெறிமுறையற்ற நடைமுறைகள் மூலம் சமூகத்தை எதிர்மறையாக பாதித்துள்ளது. நாட்டின் சட்டவிரோதமும், காவல்துறையின் மிருகத்தனமும் இந்த காவல்துறையின் மீது எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கியுள்ளன.

MOST READ: விந்தணுக்கள் பெண்கள் உடலுக்குள் எவ்வளவு காலம் உயிர்வாழும்? விந்தணுக்களின் ஆயுளை அதிகரிப்பது எப்படி?

மெக்சிகோ

மெக்சிகோ

உலகின் மிகவும் ஊழல் நிறைந்த காவல்துறையில் மெக்சிகோ காவல்துறை இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்குள்ள காவல்துறையினர் ஊழலில் மூழ்கியுள்ளனர், அனைத்து சமூக விரோத செயல்களும் காவல்துறையின் ஆதரவுடன்தான் நடத்தப்படுகிறது. மெக்சிகோ உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் சாம்ராஜ்ஜியமாக மாற காரணம் இங்குள்ள காவல்துறைதான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Corrupt Police Force In the World

Check out the list of most corrupt police force in the world.
Story first published: Thursday, July 2, 2020, 12:47 [IST]
Desktop Bottom Promotion