For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த வினோதமான விவாகரத்து வழக்குகள்... 'அது'க்காக கூடவா டைவர்ஸ் கேட்பாங்க...!

திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காரணங்கள் ஒவ்வொரு தம்பதிக்கும் மாறுபடும். சிலசமயம் இந்த காரணங்கள் வினோதமானவையாக கூட இருக்கலாம்.

|

திருமண முறிவை ஏற்படுத்தும் விவாகரத்து என்பது வாழ்க்கையில் சந்திக்கக் கூடாத ஒரு நிலையாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.எப்போதும் விவாகரத்து பெறுவதற்கு இதயம் உடைவது மட்டுமே காரணமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சிலசமயம் சில சிறிய காரணங்கள் கூட விவாகரத்து பெற காரணமாக இருக்கலாம்.

Most Bizarre Reasons Cited by Indians for Divorce

திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காரணங்கள் ஒவ்வொரு தம்பதிக்கும் மாறுபடும். சிலசமயம் இந்த காரணங்கள் வினோதமானவையாக கூட இருக்கலாம். உண்மையிலேயே விசித்திரமான காரணங்களின் அடிப்படையில் மக்கள் விவாகரத்து கோரிய இந்தியாவின் வினோதமான விவாகரத்து வழக்குகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக பார்ட்டிக்கு சென்றதால் விவாகரத்து

அதிக பார்ட்டிக்கு சென்றதால் விவாகரத்து

கடல் மாலுமி ஒருவர் தனது மனைவி அதிகமாக பார்ட்டிக்கு செல்வதாகவும், சீரற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் இதனால் தனது மன அமைதி குலைவதாகவும் கூறி விவாகரத்து பெற வழக்குத் தொடர்ந்து விவாகரத்தும் பெற்றார். ஆனால் 2011ல் மும்பை உயர்நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. மேலும் "கொடுமையின் அடிப்படையில் விவாகரத்துக்கான ஆணைக்கு அவருக்கு உரிமை இல்லை" என்று கீழ்நீதிமன்றத்தை கண்டித்தது.

அதீத உடலுறவால் விவாகரத்து

அதீத உடலுறவால் விவாகரத்து

படுக்கையறை பிரச்சினைகளால் விவாகரத்து கோருவது என்பது இந்தியாவில் சாதாரணமானது. ஆனால் இந்த வழக்கு சற்று வித்தியாசமானது. மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை 'செக்ஸ் மெஷின்' என்று கூறி விவாகரத்து கோரினார். அவர் "பாலியல் மீது அதிகப்படியான மற்றும் தீராத பசி" இருப்பதாக அவர் விவரித்தார். அவர் உடல்நிலை சரியில்லாத போது கூட உடலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதற்காக அவர் தன் மனைவி மீது குற்றம் சாட்டினார், மேலும் அவர் தனது கோரிக்கைகளுக்கு அடிபணியவில்லை என்றால் மற்ற ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வதாக மிரட்டியதாகவும் கூறினார். அவரின் பரிதாப நிலையைக் கண்ட நீதிமன்றம் அவரின் மனைவி நீதிமன்றத்திற்கு வராததால் அவருக்கு விவாகரத்து வழங்கியது.

கணவரின் காலில் விழாமல் இருக்க விவாகரத்து

கணவரின் காலில் விழாமல் இருக்க விவாகரத்து

வடஇந்தியாவில் கர்வா சவுத் என்பது மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் விழாவாகும். அந்த பெண்கள் தங்கள் கணவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். ஆனால் இந்த மனைவி கணவரின் காலில் விழுவதை விட விவாகரத்து மேல் என்று எண்ணினார். இதையே காரணம் காட்டி வழக்கும் தொடர்ந்தார். அவர்கள் தனித்தனி வழிகளில் செல்வது நல்லது என்று முடிவு செய்ததால் நீதிமன்றமும் விவாகரத்து வழங்கியது.

MOST READ: இந்த காலை உணவுகள் உங்கள் எடையை இருமடங்கு வேகத்தில் அதிகரிக்க செய்யுமாம்... உஷாரா சாப்பிடுங்க...!

மனைவியின் முகத்தில் பருக்கள் இருந்ததால் விவாகரத்து

மனைவியின் முகத்தில் பருக்கள் இருந்ததால் விவாகரத்து

மனைவியின் முகத்தில் அதிக பருக்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்த கணவர் அதனை காரணமாகக் கூறி விவாகரத்து வாங்கினார். மேலும் அவர் தன் மனைவி அவருக்கு இருந்த தோல் நோயை மறைத்து அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.

தனது அம்மாவை போல சமைக்காததால் விவாகரத்து

தனது அம்மாவை போல சமைக்காததால் விவாகரத்து

அம்மா சமைக்கும் உணவுதான் உலகிலேயே சுவையான உணவு என்பது அனைவருக்குமே இருக்கும் எண்ணம்தான். ஆனால் அதற்காக இந்த கணவர் செய்து கொஞ்சம் ஓவர்தான். தனது அம்மா சமைத்த இறைச்சியை ருசித்து சாப்பிட்டு பழகிய இவர் தனது மனைவி அதனை குக்கரில் சமைத்தபோது வெறுத்தார். இறுதியில் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகினார்.

கணவரின் வீடு சிறியதாக இருந்ததால் விவாகரத்து

கணவரின் வீடு சிறியதாக இருந்ததால் விவாகரத்து

வசதியான வாழ்க்கையை பெண்கள் விரும்புவதில் தவறில்லை. ஆனால் அதற்காக விவாகரத்து கோரிய வழக்குகளும் இந்தியாவில் உள்ளது. இந்த பெண் திருமணத்திற்க்கு முன் தான் வாழ்ந்த வீட்டை விட கணவரின் வீடு சிறியதாக இருந்ததால் விவகாரத்திற்காக நீதிமன்றத்தை நாடினார்.

MOST READ: இந்த பழங்களை ஒன்றாக சாப்பிட்டால் அவை விஷமாக கூட மாறுமாம்... ஜாக்கிரதை...!

மனைவியின் உடை பிடிக்காததால் விவாகரத்து

மனைவியின் உடை பிடிக்காததால் விவாகரத்து

மற்றொரு வினோதமான வழக்கில், ஒரு கணவர் விவாகரத்து பெற முடிவெடுத்தார், ஏனெனில் அவர் தனது மனைவி சட்டை மற்றும் கால்சட்டை அணிந்து அலுவலகத்திற்குச் செசெல்வதை விரும்பவில்லை. அவரது மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

கணவர் சொந்த மொழியில் பேசியதால் விவாகரத்து

கணவர் சொந்த மொழியில் பேசியதால் விவாகரத்து

வட மற்றும் தென்னிந்திய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவர் தனது சொந்த மொழியில் மருத்துவர் மற்றும் ஆடிட்டருடன் பேசிக் கொண்டிருந்தபோது மனைவி எரிச்சலடைந்தார். அவரால் அவர்கள் பேசிய எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர் டாக்டரையும், ஆடிட்டரையும் மாற்ற நினைத்தார். இதற்கு கணவர் ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் இந்த வழக்கு விவகாரத்தில் முடிந்தது.

MOST READ: உங்க நட்பில் இந்த அறிகுறி இருந்தால் நீங்கள் பலவீனமான மோசமான நட்பில் இருக்கீங்கன்னு அர்த்தம்...!

மனைவி நண்பர்களுக்கு டீ போடாததால் விவாகரத்து

மனைவி நண்பர்களுக்கு டீ போடாததால் விவாகரத்து

1985 ஆம் ஆண்டில் ஒரு கணவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. ஏனெனில் அவரது மனைவி தனது நண்பர்களுக்கு தேநீர் தயாரிக்க மறுத்துவிட்டார் என்றும், அது அவர்களுக்கு முன்னால் தனக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் முறையிட்டார். மேலும் தன்னிடம் கூறாமல் கருவை கலைத்ததாகவும் அவர் முறையிட்டு விவாகரத்து பெற்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Bizarre Reasons Cited by Indians for Divorce

Here is the list of cases in India where people sought divorce on the grounds of really strange reasons.
Desktop Bottom Promotion