For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூன் மாதத்தில் 4 கிரகங்கள் வக்ரம் - எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் தெரியுமா?

கொளுத்தும் கோடை காலம் முடிந்து விட்டது ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி விட்டது. கொரோனா வைரஸ் கொடுமையில் சிக்கியிருந்தாலும் சின்னச் சின்ன தளர்வுகளுடன் உலகம் இயங்கத் தொடங்கியுள்ளது.

|

கொளுத்தும் கோடை காலம் முடிந்து விட்டது ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி விட்டது. கொரோனா வைரஸ் கொடுமையில் சிக்கியிருந்தாலும் சின்னச் சின்ன தளர்வுகளுடன் உலகம் இயங்கத் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் நவ கிரகங்களின் தலைவனான சூரியன் ரிஷபத்திலும் மிதுனத்திலும் சஞ்சரிக்கிறார். குரு, சனி, புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் வக்ர நிலையில் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் வருமா? முன்னேற்றம் கிடைக்குமா என்று பார்க்கிறீர்களா? ஜூன் 1 முதல் 30 வரைக்கும் மாத ராசிபலன்களை தொகுத்து கொடுத்திருக்கிறோம் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

ஜூன் மாதம் உங்க ராசிக்கு அற்புதமாக இருக்கும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். திருமணத்திற்கான சுப காரியங்களை பேசி முடிவு செய்யலாம். நீங்க எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக அமையும். பண விசயங்களில் நீங்கள் பதற்றமடையலாம் ஆனாலும் குருவினால் உங்களுக்கு நல்லது நடக்கும். நிதி நிலமை சீரடையும். வேலை விசயமாக உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இந்த மாதத்தில் குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியை தரும். சில ஊடல்களால் உங்கள் அன்பானவர்கள் கோபமாக இருந்தாலும் அதை சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேச்சில் கவனமாக இருங்க எதையும் யோசித்து பேசுங்க. கடன் பிரச்சினைகள் தீரும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். தொற்றுநோய் பாதிப்பு உலகம் முழுவதும் குறையவில்லை. அது உங்களை தாக்கும் முன்பு உங்களுடைய உடம்பை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். இந்த மாதத்தில் உங்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பிற்பகல் முதல் ஜூன் 6ஆம் தேதி பிற்பகல் வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும்.

இந்த மாதம் நெருப்பு உங்களுக்கு நன்மை செய்யும்.

நன்மை செய்யும் கிரகம் உங்க ராசிநாதன் செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 14, 23,35, 42, 56

அதிர்ஷ்ட நாட்கள்: புதன், வியாழன், ஞாயிறு, செவ்வாய்

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், வெள்ளை, பச்சை

ரிஷபம்

ரிஷபம்

இந்த மாதம் உங்களுக்கு மிகவும் பயனுள்ள மாதம். அதே நேரத்தில் உங்கள் சொல்லும் செயலும் கவனமாக இருக்க வேண்டும். ரொம்ப பொறுமையாக இருங்க. வருமானம் நன்றாக இருக்கும் கூடவே செலவுகளும் வரும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். காதல் விவகாரங்களில் கவனமாக இருக்கும். ஏமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். மனதை அலைபாய விடாதீங்க. திருமணம் பற்றிய பேச்சுக்களை இந்த மாதம் பிற்பகுதியில் ஆரம்பிங்க சுபமாக முடியும். பணம் அதிகமாக கிடைக்கும். அதிர்ஷ்டகரமான மாதம். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். இந்த மாதம் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களுக்கு இந்த மாதம் நல்ல வேலை கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு புது வேலை கிடைக்கும் அவை உங்க வாழ்க்கையை மாற்றும். பிசினஸ்ல உங்களுக்கு லாபம் அதிகமாக இருக்கும். சிறு பயணங்கள் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். மாதத்தின் பிற்பகுதியில் கிரகங்களின் இடமாற்றத்தினால் உங்களுக்கு சில தொந்தரவுகள் ஏற்படும். ஜூன் 6ஆம் தேதி மாலை 3.12 மணி முதல் ஜூன் 8ஆம் தேதி இரவு 7.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருக்கவும்.

பஞ்சபூதங்களில் பூமி நன்மை செய்யும்.

நன்மை செய்யும் கிரகம் உங்க ராசிநாதன் சுக்கிரன்.

அதிர்ஷ்ட எண்: 12, 27, 33, 49, 51, 66

அதிர்ஷ்ட நாட்கள்: புதன், ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

அதிர்ஷ்ட நிறங்கள்: பழுப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, நீலம்

மிதுனம்

மிதுனம்

இந்த மாதம் உங்களுக்கு மாத பிற்பகுதியில் சில பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. குடும்ப விசயத்தில் மூன்றாவது நபர் தலையிட விட வேண்டாம் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினை மன அழுத்தத்தை தரலாம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அப்புறம் பாதிப்பை ஏற்படுத்தும். உங்களுக்கு பிசினசில் வெற்றியை எதிர்பார்க்க முடியாது. சட்ட சிக்கல்களில் வெற்றி பெற முடியாமல் போகலாம். மாத இறுதியில் கிரகங்களின் இட மாற்றத்தினால் நீங்க செய்யும் முதலீடு லாபத்தை கொடுக்கும். பண வருமானத்தில் லாபம் நஷ்டம் என இரண்டும் இருக்கும் கவலை வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் உங்களின் திறமைக்கு மதிப்பு கூடும். திடீர் புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை எடுத்துக்கங்க. வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். இந்த மாதம் ஜூன் 8ஆம் தேதி இரவு 7.45 மணி முதல் ஜூன் 11ஆம் தேதி விடிகாலை 3.41 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். வண்டி வாகனம் ஓட்டும் போது நிதானம் தேவை.

பஞ்சபூதங்களில் காற்று நன்மை செய்யும்.

உங்க ராசிநாதன் புதன் சாதகமாக கிரகம்.

அதிர்ஷ்ட எண்: 4, 16, 23, 35, 43, 50

அதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், வெள்ளி, செவ்வாய், வியாழன்

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம், பச்சை

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல மாதம். சிலருக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு கொடுத்த பொறுப்பை நீங்களே கவனிங்க. இல்லாவிட்டால் அது பாதிப்பை ஏற்படுத்தி விடும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கவனமாக இருங்க. நண்பர்கள் உறவினர்கள் மூலம் எந்த சாதகமான பலன்களும் கிடைக்காது. புதிய வேலை தேடுபவர்களுக்கு இது சரியில்லாத கால கட்டமாக இருக்கிறது. இருக்கிற வேலையை விட்டு விட வேண்டாம். சொந்த வாழ்க்கையில் சில சோகங்கள் ஏற்படலாம். இதனால் மன அழுத்தம் ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். தம்பதியர் இடையே சிக்கல்கள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்து போங்க. சில நாட்களில் நீங்கள் முடிவுகளை சரியாக எடுங்கள் பதற்றம் அதிகரிக்கலாம். மன உளைச்சல் ஏற்படலாம் கவனம். ஜூன் 11ஆம் தேதி விடிகாலை 3.41 மணி முதல் ஜூன் 13ஆம் தேதி பகல் 2.46 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். வீட்டை விட்டு வெளியே போகும் போது எச்சரிக்கை தேவை.

பஞ்சபூதங்களில் நன்மை தரக்கூடியது நீர். நன்மை தரும் கிரகம் உங்க ராசிநாதன் சந்திரன்

அதிர்ஷ்ட எண்: 9, 13, 20, 38, 45, 58, 63

அதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், திங்கள், சனி, புதன்

அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் பச்சை, வானம், கிரீம், வெள்ளை

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுப காரிய தடைகள் ஏற்படும் என்பதால் நல்ல விசயங்களை பேச இது உகந்த நேரமில்லை. பிள்ளைகளால் சில தொல்லைகள் வரலாம். நிறைய செலவுகள் வரலாம் கவனமாக இருங்க. ஆறாம் வீட்டில் சனி வக்ரமடைந்திருப்பதால் எதிரிகள் தொல்லை நீங்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். காதல் விஷயங்களில் நீங்கள் மிகவும் திருப்தி அடைவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவர் உங்களுக்காக எவ்வளவு சரியானவர் என்பதை நீங்கள் உணர்ந்து, சந்தோஷமாக அனுபவிப்பீர்கள். திருமணமான தம்பதியினருக்கும் இந்த மாதம் நன்றாக இருக்கும். எந்த ஒரு முடிவையும் உங்கள் மனைவியுடன் சேர்ந்து எடுப்பீர்கள். பொருளாதார சூழ்நிலையில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். உங்களின் மன அழுத்தம் போகும். உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பாடுகள் ஏற்படும். உங்களுக்கு ஏற்படும் கோபம் மன அழுத்ததை ஏற்படுத்தலாம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். மாத பிற்பகுதியில் பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கூர்மையான பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர் விபத்துக்கள் வரலாம் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க நிதானமாக இருங்க. வேலையிலும் வீட்டிலும் நிதானமாகவும் கூடுதல் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டிய கால கட்டம் இது. ஜூன் 13ஆம் தேதி பகல் 2.46 மணி முதல் ஜூன் 16ஆம் தேதி அதிகாலை 3.17 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டிய நாட்கள்.

பஞ்சபூதங்களில் நெருப்பு நன்மை செய்யும்

உங்க ராசிநாதன் சூரியன் நன்மை செய்யும்

அதிர்ஷ்ட எண்: 5, 21, 30, 44, 59, 64

அதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், வெள்ளி, சனி, திங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்: பழுப்பு, மஞ்சள், அடர் சிவப்பு, நீலம்

கன்னி

கன்னி

இந்த மாதம் அதிர்ஷ்டம் தேடி வரும் உங்க குடும்பத்திற்கான தேவைகள் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப செலவுகள் வரலாம். மாத பிற்பகுதியில் வேறு வேலை மாறாலாமா என்ற யோசனை வரும்.

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் மிகவும் கடினமாக உழைப்பீர்கள். மாணவர்களுக்கு குழப்பமான மனநிலை இருக்கலாம் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்துங்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க. உங்க குடும்பத்திற்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும். உங்க வாழ்க்கை துணைவரின் அன்பில் கரைந்து போவீர்கள். மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். எந்தவொரு விசயத்தில் இருந்தும் நீங்கள் பின்வாங்க மாட்டீர்கள். உங்கள் பிடிவாதம் விரைவில் உங்களுக்கு சில பெரிய வெற்றிகளைக் கொடுக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு இந்த மாதத்தில் சிறிய சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவொரு அவசர முடிவையும் தவிர்க்கவும், குறிப்பாக நீங்கள் ஒரு புதிய வேலையில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால். யோசித்து முடிவு செய்யுங்கள். மாத இறுதியில் பண விசயம் உங்களை மன அழுத்திற்கு உள்ளாக்கும். வேலைகளில் பிசினஸ் விசயங்களில் நஷ்டம் ஏற்படலாம். உங்க ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். ஜூன் 16ஆம் தேதி அதிகாலை 3.17 மணி முதல் ஜூன் 18 பகல் 3.13 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும்.

நன்மை செய்யும் பஞ்சபூதம் பூமி. உங்களுக்கு உங்க ராசிநாதன் புதன் நன்மை செய்யும்.

அதிர்ஷ்ட எண்: 4, 9, 18, 25

அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, வியாழன், புதன்

அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், கிரீம், வானம், பச்சை, மெரூன்

துலாம்

துலாம்

இந்த மாதம் உங்களுக்கு சவால்கள் அதிகம் வரும் சங்கடங்கள் அதிகம் வரும் என்றாலும் அதை சமாளித்து சாதனைகளாக மாற்றுவீர்கள். வீண் விரைய செலவுகள் வந்தாலும் அதை சமாளிக்க வருமானமும் வரும். நீங்கள் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். கவனமாகவும் பொறுமையாகவும் எதையும் கையாளுங்கள். திடீர் செலவுகள், வீண் விரையங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பணம், நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்காதீங்க. பணம் கடன் கொடுக்காதீங்க. எந்த பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளுங்கள். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. மன உளைச்சலாகவும் இருக்கும். திடீரென்று, சில நல்ல வாய்ப்புகள் உங்கள் கதவைத் தட்டக்கூடும். வியாபாரத்தில் பெரிய முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். உங்களின் நிதி நிலைமையை வலுப்படுத்த நீங்க கவனமாக மெதுவாக அடி எடுத்து வைக்கவும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். கணவன் மனைவி உறவு இணக்கமானதாக இருக்கும் காதலர்களுக்கு இடையே சின்னச் சின்ன சண்டை ஏற்படலாம். விட்டுக்கொடுத்து போங்க. பிரச்சினைகள் நீங்கும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஜூன் 18 பகல் 3.13 மணி ஜூன் 21ஆம் தேதி அதிகாலை 12.35 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.

பஞ்ச பூதங்களில் காற்று உங்களுக்கு நன்மை செய்யும்.

சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 6, 14, 25, 39, 47, 56, 61

அதிர்ஷ்ட நாட்கள்: வெள்ளி, புதன், திங்கள், ஞாயிறு

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, நீலம், வெள்ளை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இந்த மாதம் உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்திருக்கும். பிசினஸ், குடும்ப வாழ்க்கை இரண்டுமே அற்புதமாக இருக்கும். தொடர் தோல்விகள் மனதில் சோர்வை ஏற்படுத்தும். பணம் முதலீடு செய்யும் முன்பு கவனமாக இருக்கவும். திடீர் நிதி நெருக்கடிகள் வரலாம். கடன் விவகாரங்கள் கையை கடிக்கும். பணம் வருவது போல இருந்தாலும் வர மாட்டேங்குதே என்று நினைப்பீர்கள். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும் குருவின் சஞ்சாரம் தோல்வியை வெற்றிகரமாக மாற்றும். பிசினஸ் விசயங்களில் சில மோதல் ஏற்படும். அவசர முடிவுகளை தவிருங்கள். குடும்ப உறவுகளிடம் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். பண விசயத்தில் யாரை நம்பி கொடுக்க வேண்டாம். உங்க உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். உடல் நலம் தொடர்பான அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம். அது உங்களை மேலும் கஷ்டப்படுத்தும். இந்த மாதம் எச்சரிக்கையாக கடத்த வேண்டும். 21.06.2020 அதிகாலை 12.35 மணி முதல் 23.06.2020 காலை 7.34 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். மாத பிற்பகுதியில் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் சூடான பேச்சுவார்த்தைகள் பிரச்சினையை தரலாம். மாத இறுதியில் பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் அதிகமாகும்.

தண்ணீர் உங்களுக்கு நன்மை செய்யும்.

நன்மை தரும் கிரகம் செவ்வாய் மற்றும் புளூட்டோ.

அதிர்ஷ்ட எண்: 2, 15, 26, 37, 49, 56

அதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், புதன், செவ்வாய், ஞாயிறு

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா, பழுப்பு, அடர் சிவப்பு

தனுசு

தனுசு

இந்த மாதம் உங்களுக்கு அவ்வப்போது ஆறுதலான விசயங்கள் நடைபெறும். நீங்க விரும்பியது நடக்கும். மனம் அமைதியாகவும் திருப்தியாகவும் இருக்கும். இதுபோன்ற அமைதியான தன்மையைப் பேணுவதற்கு நீங்கள் எந்தவிதமான விவாதங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும், பேச்சில் கவனமாக இருங்க சிக்கல்கள் வரலாம். அரசு வேலை, அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் வரும். தேவையற்ற மன அழுத்தம் காரணமாக முக்கியமான பணிகளில் இருந்து உங்கள் கவனத்தை திசை திருப்பக்கூடும். இந்த மாதம் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடும். பிசினஸ்ல நல்ல முடிவுகள் கிடைக்கும். மாத இறுதியில் பணவரவு கிடைக்கும். பிறர் செய்யும் உதவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும் லாபம் ஏற்படும். மனைவி மக்கள் மூலம் உதவி கிடைக்கும். புதிதாக வங்கியில் கடன் பெற முயற்சி செய்வீர்கள். கடன் கிடைக்கும். செலவுகளை சிக்கனமாக செலவு செய்யுங்கள். பெற்றோர்கள் வீட்டில் மூத்தவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். எதிரிகள் தொல்லை நீங்கும். உங்க ஆரோக்கியம் இந்த மாதம் அற்புதமாக இருக்கும். 23.06.2020 காலை 7.34 மணி முதல் 25.06.2020 பிற்பகல் 12.26 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.

பஞ்சபூதத்தில் நெருப்பு உங்களுக்கு சாதகமானது.

குருபகவான் உங்களுக்கு சாதகமான கிரகம்.

அதிர்ஷ்ட எண்: 1, 7, 15, 23, 34, 45, 54

அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, சனி, வியாழன், செவ்வாய்

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், மெரூன், அடர் பச்சை, நீலம்

மகரம்

மகரம்

இந்த மாதம் உங்களுக்கு உடல் ரீதியாக சில பிரச்சினைகள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சிலருக்கு மன உளைச்சல் வரலாம் இந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடிய நேரம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கடின உழைப்பும் குருவின் ஆசியும் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். பயணங்கள் போகும் போது கவனமாக இருங்க. படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்க வாழ்க்கை துணையோடு சேர்ந்து நீங்க நேரத்தை செலவிடுவீர்கள். இது உங்களின் உறவை வலிமையாக்கும். அன்பை ஆழப்படுத்தும் ஒருவருக்கொருவர் மனதை விட்டு பேசுங்கள் நல்லது நடக்கும். திருமண உறவில் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போவதால் மன அழுத்தம் நீங்கும். நிதி நிலைமையும் பண விவகாரங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாத இறுதியில் சில பிரச்சினைகள் வரலாம். கவனமாக கையாளுங்கள். உங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுங்கள். பண விசயங்கள் அற்புதமாக இருக்கும். மாத இறுதியில் உடல் நல பிரச்சினைகளை கவனிங்க செலவுகளை சிக்கனமாக கையாளுங்கள். 25.06.2020 பிற்பகல் 12.26 மணி முதல் 27.06.2020 பிற்பகல் 3.50 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.

பஞ்சபூதங்களில் பூமி சாதகமானது. சாதகமான கிரகம் உங்க ராசிநாதன் சனி.

அதிர்ஷ்ட எண்: 8, 16, 24, 38, 45, 50, 66

அதிர்ஷ்ட நாட்கள்: புதன், திங்கள், சனி, ஞாயிறு

லக்கி நிறங்கள்: வெள்ளை, இளஞ்சிவப்பு, வானம், பழுப்பு

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே. இந்த மாதம் உங்களுக்கு நல்ல செய்திகளை தேடி வரும். அரசு வேலை செய்பவர்களுக்கு உயர்பதவியும் சம்பள உயர்வும் கிடைக்கும். வர்த்தகர்களுக்கு சாதகமான மாதம். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். பண விசயத்தில் நீங்க சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். வியாபாரத்தில் அதிர்ஷ்டமும் லாபமும் அதிகரிக்கும். வேலையில் சில பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிப்பீர்கள். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடக்கவும். வேலை செய்யும் இடத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம். சிலருக்கு தன லாபம் கிடைக்கும். பயணங்களில் கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மாத பிற்பகுதியில் அதிக செலவுகளை சந்திப்பீர்கள் சமாளியுங்கள். முக்கியமான வேலைகளை கவனிங்க. குடும்ப உறுப்பினர்களுடன் சில சந்தோஷ தருணங்களை அனுபவிப்பீர்கள். திருமண வாழ்க்கை சந்தோஷமாகவும் மன மகிழ்ச்சியுடனும் இருக்கும். தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும் மாத பிற்பகுதியில் பிசினசில் நல்ல லாபம் கிடைக்கும்.

பஞ்சபூதங்களில் காற்று உங்களுக்கு நன்மை செய்யும்.

சாதகமான கிரகம் சனி. உங்க ராசிநாதன் சனி நன்மை செய்யும். யுரேனஸ் ஒத்துழைப்பு கொடுக்கும்.

அதிர்ஷ்ட எண்: 9, 13, 23, 36, 48, 59, 62

அதிர்ஷ்ட நாட்கள்: வெள்ளி, புதன், சனி, திங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், மெரூன், கிரீம், ஊதா, ஆரஞ்சு

மீனம்

மீனம்

நீங்க பண பரிவர்த்தனைகளை சந்தோஷமாக மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்க ரொம்ப விழிப்புணர்வோட இருக்கணும் இந்த மாதம் உங்க உடல் ஆரோக்கியம் சாதாரணமாக இருந்தாலும் உணவு விசயத்தில கவனமாகவும் கட்டுப்பாடுடனும் இருக்கணும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள். எந்த அளவிற்கு பண வருமானம் வருகிறதோ அந்த அளவிற்கு செலவும் கூடும். வேலை செய்யும் இடத்தில் சில சவால்களை சந்திப்பீர்கள் என்றாலும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் தடைகளை தாண்டி சமாளிப்பீர்கள். கணவன் மனைவி கசப்புகளை தவிர்த்து சந்தோஷமாக நேரத்தை செலவு செய்யுங்கள். காதல் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாட்கள் சொல்ல முடியாமல் தவித்த காதலை சொல்லிவிடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய வேலை நல்ல இடத்தில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.

பஞ்சபூதங்களில் நீர் நன்மை செய்யும்.

நன்மை செய்யும் கிரகம் குரு, நெப்டியூன்.

அதிர்ஷ்ட எண்: 4, 12, 20, 31, 44, 58, 60

அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, வெள்ளி, புதன், சனி

அதிர்ஷ்ட நிறங்கள்: வானம், இளஞ்சிவப்பு, நீலம், மஞ்சள், அடர் சிவப்பு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Monthly Horoscope June 2020 In Tamil

Check out the Mesham to Meenam 12 Zodiac signs Rasi Palan and complete horoscope Predictions for the month of June 1, 2020 to june 30, 2020.
Desktop Bottom Promotion