Latest Updates
-
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்...
புதன் சுக்கிர சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு சூப்பரா இருக்கும்...
மிதுன ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த மங்களகரமான யோகமானது மிதுன ராசியில் 4 நாட்கள் இருக்கும். இந்த யோகத்தின் பலன் ஜூலை 13 முதல் ஜூலை 16 வரை கிடைக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தில் லட்சுமி நாராயண யோகம் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும். பொதுவாக இந்த யோகம் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகிறது. புதன் அறிவு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரன் பொருள் மகிழ்ச்சி, திருமண மகிழ்ச்சி, புகழ், ஆடம்பரம், கலை, அழகு மற்றும் காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது.

மேலும் புதன் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதி. மறுபுறம் சுக்கிரன் மேஷம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி. ஜோதிடத்தில் சுக்கிரனும், புதனும் நட்பு கிரகங்களாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் ஒரு ராசியில் ஒன்றாக இணையும் போது தான் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. லட்சுமி நாராயண யோகம் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தேவியுடன் தொடர்புடையது. எனவே இந்த யோகம் ஒரு ராசியில் உருவாகும் போது சில ராசிகளுக்கு லட்சுமி தேவியின் சிறப்பான அருளும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்திருக்கும்.

லட்சுமி நாராயண யோகம்
ஜோதிட சாஸ்திரத்தில் லட்சுமி நாராயண யோகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே புதன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் மிதுன ராசிக்கு வந்துள்ளதால், மிதுன ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த மங்களகரமான யோகமானது மிதுன ராசியில் 4 நாட்கள் இருக்கும். இந்த யோகத்தின் பலன் ஜூலை 13 முதல் ஜூலை 16 வரை கிடைக்கும். ஏனெனில் ஜூலை 17 ஆம் தேதி புதன் கடக ராசிக்கு செல்கிறார். இப்போது புதன் சுக்கிர சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் எந்த 5 ராசிகளுக்கு சூப்பராக இருக்கும் என்பது குறித்து காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். இக்காலத்தில் லட்சுமி தேவி இந்த ராசிக்காரர்கள் மீது அன்பாக இருப்பார்.தொழிலில் பல பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் வியாபாரம் செய்வதற்கும் இந்த காலம் நல்லது. இக்காலத்தில் சில பயனுள்ள பயணங்களை மேற்கொள்ள நேரிடும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நிறைய நிதி நன்மைகளைப் பெறுவார்கள். தொழில் காரணமாக வெளியூர் செல்வதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் கடின உழைப்பின் பலன் இந்த யோக காலத்தில் நிச்சயம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். இந்த காலத்தில் பணியிடத்தில் உங்கள் சிறந்த செயல்பாட்டின் மூலம் உங்கள் மேலதிகாரிகளை ஈர்ப்பீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பர். அதிர்ஷ்டத்தின் உதவியால் வளர்ச்சி அடைந்து, விரும்பும் அனைத்தையும் பெறுவார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், அது உங்களுக்கு வெற்றியைத் தரும். இந்த நேரத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலம் மிகவும் நல்லது. இக்காலத்தில் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஆனால் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இக்காலத்தில் அதிக பிரச்சனைகளை சந்திக்கலாம். இருப்பினும், இக்காலத்தில் உங்கள் நிலைமையை மேம்படுத்த ஏராளமான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்
லட்சுமி நாராயண யோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். தொழில் ரீதியாக திருப்தி அடைவீர்கள். குழந்தைகளால் பெருமிதம் கொள்வீர்கள். இக்காலத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல காலம் மற்றும் அதிக லாபம் கிடைக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை பெற வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications