Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
கன்னி செல்லும் புதனால் ஆகஸ்ட் 21 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பிக்குது...
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் 5 ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிகழும் புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட காலம் ஆரம்பிக்கிறது.
வேத ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், வியாபாரம், தர்க்கம், பணம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வந்தாலும், 2022 ஆகஸ்ட் 21 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு செல்கிறார். சொந்த ராசிக்கு புதன் செல்வதால், 12 ராசிகளிலும் அதன் தாக்கம் இருக்கும். குறிப்பாக நிதி நிலை, தொழில், கல்வி ஆகியவற்றில் புதனின் தாக்கம் இருக்கும்.

புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சில ராசிக்காரர்கள் அசுப பலன்களைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறவுள்ளார்கள். அதுவும் 5 ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிகழும் புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட காலம் ஆரம்பிக்கிறது. இப்போது புதன் கன்னி ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் எவையென்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும். இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் இக்காலத்தில் முடிவுக்கு வரும். புதிய வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் இனிமையான மாற்றங்கள் ஏற்படும். நல்ல புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். விவாதத்தில் வெற்றி பெறுவீர்கள். ஆனால் உண்ணும் உணவுகளில் கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் பிரச்சனையை சந்திப்பீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சியால் கணிசமான லாபத்தைப் பெறுவார்கள். அனைத்து வேலைகளும் அதிர்ஷ்டத்தினால் வெற்றிகரமாக நடக்கும். குடும்பத்தினருடன் அற்புதமாக நேரத்தை செலவிடுவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய தொழிவ் தொடங்க இது நல்ல காலம். பணிபுரிபவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் இரண்டாவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நேர்மையுடன் எதையும் சாதிப்பீர்கள். உங்களின் மரியாதை அதிகரிக்கும். இக்காலத்தில் விரும்பிய பலன்கள் கிடைக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் ஆதாயம் அடைவார்கள். பரம்பரையாக செய்யும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். பெரியோர் வழங்கும் சரியான அறிவுரைகளை பின்பற்றுவது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பல வழிகளில் கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும் இதன் காரணமாக தொழிலில் புதிய உயரங்களை தொடுவீர்கள். சொந்த ராசிக்கு புதன் செல்வதால், கன்னி ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள். தேர்வு, இன்டர்வியூ ஆகியவற்றில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் நன்மைகள் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் இக்காலத்தில் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவார்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவும் இக்காலத்தில் கிடைக்கும். தொழிலிலும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய யோசனைகளால் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications