Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
புதன் பெயர்ச்சியால் விருச்சிகத்தில் உருவாகும் 2 சுப யோகங்கள்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்...
மூன்று கிரகங்கள் விருச்சிக ராசியில் பயணிக்கும் போது, இரண்டு சுப யோகங்கள் உருவாகின்றன. இந்த இரண்டு யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
2022 நவம்பர் மாதத்தில் பல கிரகங்கள் அடுத்தடுத்து ராசியை மாற்றவுள்ளன. இந்த கிரகங்களின் ராசி மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அந்த வகையில் நவம்பர் 11 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு சென்றார். அதையடுத்து நவம்பர் 13 ஆம் தேதி புதன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்லவுள்ளார். அதன் பின் நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்லவுள்ளார். இதனால் விருச்சிக ராசியில் 3 கிரகங்கள் ஒன்றாக பயணிக்கும்.

இப்படி மூன்று கிரகங்கள் விருச்சிக ராசியில் பயணிக்கும் போது, இரண்டு சுப யோகங்கள் உருவாகின்றன. அதில் சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகமும், புதன் மற்றும் சூரியன் சேர்க்கையால் புதாதித்ய யோகமும் உருவாகின்றன. இந்த இரண்டு யோகங்களுமே சுப யோகம் மற்றும் அதிர்ஷ்டத்தைத் தரும் யோகங்களாகும். இப்போது இந்த இரண்டு யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதுவும் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் நல்ல லாபகரமானதாக இருக்கும். வணிகர்களுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.

கடகம்
புதன் பெயர்ச்சியால் உருவாகும் யோகங்களால் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவார்கள். இக்காலத்தில் கடினமாக உழைத்தால் அதற்கான பலன் உடனடியாக நிச்சயம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சியாவதால் உருவாகும் லட்சுமி நாராயண மற்றும் புதாதித்ய யோகங்களால், இந்த ராசிக்காரர்கள் பல நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் துறைகளில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். விரும்பிய படிப்புகளை படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

மகரம்
புதாதித்ய யோகம் மற்றும் லட்சுமி நாராயண யோகத்தால் மகர ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். வியாபாரிகளுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைக்கும். உங்களின் ஆசையை நிறைவேற்ற உங்கள் குடும்பத்தினர் உதவுவார்கள். வேலையை மாற்ற சிறந்த காலம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு விருச்சிகத்தில் உருவாகும் இரண்டு சுப யோகங்கள் வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். அதுவும் நவம்பர் 13 ஆம் தேதிக்கு பிறகு மீன ராசிக்காரர்களின் வாழ்வில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படும். பல விஷயங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். இதனால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். காதலிப்பவர்கள் இக்காலத்தில் திருமணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் அமையும். மேலும் இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications