Latest Updates
-
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
Budh Gochar 2022: விருச்சிகம் செல்லும் புதனால் அடுத்த 20 நாட்கள் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் உஷாரா இருக்கணும்..
புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால் நவம்பர் 13 முதல் டிசம்பர் 03 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.
நவகிரகங்களில் புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் புதன், தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இத்தகைய புதன் 2022 நவம்பர் 13 ஆம் தேதி இரவு 09.06 மணிக்கு விருச்சிக ராசிக்கு செல்கிறார். புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் நல்ல பேச்சாற்றல், தகவல் தொடர்பு திறன், புத்திசாலித்தனமாக முடிவெடுப்பது போன்றவற்றில் சிறந்து விளங்குவார். அதுவே மோசமான நிலையில் இருந்தால், தங்கள் பேச்சாலேயே கஷ்டப்பட வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால் நவம்பர் 13 முதல் டிசம்பர் 03 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது நீண்ட ஆயுள், திடீர் நிகழ்வுகள் மற்றும் ரகசியம் ஆகியவற்றின் வீடாகும். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் சற்று சவாலான காலமாக இருக்கும். இக்காலத்தில் வாழ்வில் பல திடீர் நிகழ்வுகள் நடக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாமியார்-மாமனாருடன் தொடர்பு கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுடனான உறவில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எவ்வித வாக்குவாதத்திலும் ஈடுபடாதீர்கள். மேலும் இந்த காலத்தில் எதிர்பாராத செலவுகளுக்கு உங்களின் சேமிப்பை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது வாழ்க்கைத் துணை மற்றும் கூட்டு வணிகத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. கூட்டு வணிகத்திற்கு சிறந்த காலம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது எதிரிகள், ஆரோக்கியம், போட்டி ஆகியவற்றின் வீடாகும். எனவே இந்த புதன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மோசமாக இருக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் திடீரென்று பெரிய உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். இக்கால கட்டத்தில் உங்களின் எதிரிகள் உங்களை வீழ்த்த எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். எனவே சற்று கவனமாக இருங்கள். இல்லற வாழ்வில் சில ஏற்றத்தாழ்வுகளை காண நேரிடும். செல்லப் பிராணியை வாங்கி வளர்க்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது கல்வி, காதல் உறவு, குழந்தைகள் மற்றும் பூர்வ புண்ணிய வீடாகும். எனவே இக்காலம் மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். காதலிப்பவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் இக்காலத்தில் சண்டைகள் ஏற்பட்டாலும், உங்கள் இருவருக்குள்ளான அன்பு மற்றும் வலுவான பிணைப்பால் அனைத்தும் சரியாகும். இக்காலத்தில் உங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிட்டு, உங்கள் பந்தத்தை வலுவாக்குவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று விழிப்போடு இருக்க வேண்டும். முக்கியமாக மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது தாய், குடும்ப வாழ்க்கை, வீடு, வாகனம் மற்றும் சொத்து ஆகியவற்றின் வீடாகும். எனவே இக்காலத்தில் உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எந்த சொத்து அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தாலும், அதற்கு இக்காலம் மிகவும் நல்ல காலம். வீட்டைப் புதுப்பிக்க பணத்தை செலவழிப்பீர்கள். இக்காலத்தில் தாயின் ஆதரவைப் பெறுவீர்கள் மற்றும் அவர்களுடான பிணைப்பு வலுவாகும்.

கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது உடன்பிறப்புகள், பொழுதுபோக்குகள், குறுகிய பயணம், தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றின் வீடாகும். எனவே இக்காலத்தில் உடன்பிறந்தவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் அல்லது மோதல்கள் ஏற்படலாம். ஆனால் அது உங்களின் பிணைப்பை பாதிக்காது. குறுகிய பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆராய்ச்சி, எழுத்தாளர், இயக்குனர், ரிப்போர்ட்டர் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். உங்கள் தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது சேமிப்பு மற்றும் பேச்சின் வீடாகும். எனவே இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றும் நகைச்சுவை உணர்வு ஒருவரை காயப்படுத்த வாய்ப்புள்ளதால், உங்கள் பேச்சில் சற்று கவனம் செலுத்துங்கள். வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மத செயல்பாடுகளில் ஈடுபட திட்டமிடுவீர்கள் மற்றும் இது குடும்பத்திற்குள் வலுவான பிணைப்பை உருவாக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுகாதாரமாக இருங்கள். இல்லாவிட்டால், பற்கள் மற்றும் வாய் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். லக்ன வீட்டில் புதன் இருப்பதால், இக்காலம் இனிமையாக இருக்கும் மற்றும் இக்காலத்தில் உங்கள் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபார ரீதியாக நன்றாக இருக்கும். இக்காலத்தில் வியாபாரத்தை விரிவாக்க புதிய யோசனைகள் மனதில் தோன்றும். எனவே வியாபாரிகளுக்கு இந்த புதன் பெயர்ச்சி காலம் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். அதேப் போல் வணிக கூட்டாளர்களின் ஆதரவும் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது வெளிநாட்டு நிலம், மருத்துவமனைகள் மற்றும் வெளிநாட்டு கம்பெனிகள், வீடுகள் ஆகியவற்றின் வீடாகும். எனவே இக்காலத்தில் எம்என்சி நிறுகூனங்களில் பணிபுரிபவர்கள் சில நன்மைகளைப் பெறுவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். புதன் பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அவர்களுக்காக மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது நிதி ஆதாயம், விருப்பம், மூத்த உடன்பிறப்புகள் ஆகியவற்றின் வீடாகும். எனவே இக்காலத்தில் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். இக்காலத்தில் பொறுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது தான் உங்களுக்கு இக்காலத்தில் நல்ல முடிவுகளைப் பெற உதவி புரியும்.

கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அரசியல், தொழில்நுட்பத் துறை மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்வில் திடீரென்று ஒரு புதிய மாற்றம் ஏற்படலாம். இக்காலத்தில் உங்கள் தாயின் ஆதரவைப் பெறுவீர்கள் மற்றும் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும்.

மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது வீடு, தர்மம், தந்தை, நீண்ட தூர பயணம், புனித யாத்திரை மற்றும் அதிர்ஷ்டத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவார். ஆலோசகர்கள், வழிகாட்டிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு மிகவும் நல்ல காலமாகும். உயர் கல்வி தொடர நினைக்கும் மாணவர்களுக்கு இது நல்ல காலம். மேலும் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தந்தையின் ஆதரவைப் பெறுவார்கள். புனித யாத்திரைகளை மேற்கொள்ள வாய்ப்புக்கள் அமையும். உங்கள் இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











