Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
புதன் பெயர்ச்சியால் டிசம்பர் 3 முதல் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனையை சந்திக்க போறாங்க..
தனுசு ராசிக்கு செல்லும் புதனின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி பல பிரச்சனைகளைத் தரக்கூடியதாக இருக்கும்.
Mercury Transit in Sagittarius 2022: ஜோதிடத்தின் படி, கிரகங்களில் புதன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகும். ஜோதிடத்தில் புதன் புத்திசாலித்தனம், தொழில் மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. புதன் நல்ல நிலையில் இருந்தால், தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாகவும், லாபகரமானதாகவும் இருக்கும். அதுவே புதன் பலவீனமான நிலையில் இருந்தால், தொழிலில் பல பிரச்சனைகளை சந்திப்பதோடு, புத்திசாலித்தனமாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணற வேண்டியிருக்கும்.

தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 டிசம்பர் 03 ஆம் தேதி புதன் குரு ஆளும் தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் சனி ஆளும் மகர ராசிக்கு செல்வார். தனுசு ராசிக்கு செல்லும் புதனின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி பல பிரச்சனைகளைத் தரக்கூடியதாக இருக்கும். இப்போது 2022 டிசம்பர் 03 ஆம் தேதி நிகழும் புதன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் சில காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இரத்த அழுத்த பிரச்சனைகளை அதிகம் சந்திக்கலாம். எனவே கவனமாக இருங்கள். இக்காலத்தில் எதிரிகளிடம் சற்று கவனமாக இருங்கள். கடன் வாங்க நினைத்தால், இக்காலத்தில் அதில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடம். நிதி நிலைமை சற்று மோசமாக இருக்கும். இக்காலத்தில் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த காலத்தில் தைரியம் சற்று குறையலாம். முக்கியமான எந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் அனுபவசாலிகளிடம் ஆலோசிப்பது நல்லது. இக்காலத்தில் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சகோதரர்களுடனான உறவு மோசமடையலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். வேலையில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். ரகசிய எதிரிகள் இக்காலத்தில் அதிகரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் உங்களை வெல்லக்கூடும். பணியிடத்தில் சதி திட்டங்களுக்கு பலியாவீர்கள். ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது. இருப்பினும், நிதி நிலை வலுவாக இருக்கும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நிதி நிலைமை சற்று பாதிக்கப்படும். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் உங்கள் எதிரிகளின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

புதனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தடுக்கும் பரிகாரங்கள்:
* புதன் கிழமைகளில் ஏழை மாணவர்களுக்கு கல்விப் பொருட்களை தானம் செய்யுங்கள்.
* பசுவிற்கு சாப்பிட புல் கொடுங்கள்.
* தினமும் விநாயகரை வழிபடுங்கள்.
* நான்கு முக ருத்ராட்சம் அணிவது நல்லது.
* வேலையில் வெற்றி பெற புதன் யந்திரத்தை வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ வைத்திருங்கள்
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications