Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
மீனம் செல்லும் புதனால் இந்த 6 ராசிக்காரங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணுமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். புதன் ஏற்கனவே கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் 2022 மார்ச் 24 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார்.
ஜோதிடத்தில் புதன் ஒரு நல்ல கிரகமாக கருதப்படுகிறது. இத்தகைய புதன் தகவல் தொடர்பு, லாஜிக், புத்திசாலித்தனம் மற்றும் வணிகத்தின் காரணியாக கருதப்படுகிறது. இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். புதன் ஏற்கனவே கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் 2022 மார்ச் 24 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார்.

நவகிரகங்களின் இளவரசன் என்ற அந்தஸ்தை புதன் பெற்றுள்ளார். இந்த புதன் பெயர்ச்சியாகும் போது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு கெடு பலன்களையும் வழங்கலாம். ஒருவர் நற்பலன்களை விட கெடுபலன்களை தெரிந்து கொண்டால் சற்று உஷாராகிக் கொள்ளலாம் அல்லவா? இப்போது மீனம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
புதன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலம் சற்று வேதனை நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் தொழில் வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இக்கால கட்டத்தில் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகளுடன் உறவுகள் மோசமடையக்கூடும். உங்கள் பேச்சு மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரம் தொடர்பான பயணங்களால் தோல்வி ஏற்படலாம். இக்காலத்தில் எந்த ஒரு புதிய முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உடன்பிறப்புகளுடனான உறவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இக்காலத்தில் எந்த ஒரு புதிய முதலீட்டையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் மாமியார்-மாமனார்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். யாருக்கும் கடன் கொடுத்தவிடாதீர்கள். இல்லையென்றால் சிரமப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

கன்னி
புதன் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் பணியிடத்தில் தங்களை நிரூபிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பங்குச் சந்தையுடன் தொடர்பு கொண்டிருந்தால், இந்த புதன் பெயர்ச்சியால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள். இக்காலத்தில் பேசும் போது கவனமாக இருங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த புதன் பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பானதாகவே இருக்கும். ஆனால் இக்காலத்தில் நீங்கள் உங்களின் நடத்தையால் மற்றவர்களை அதிகம் காயப்படுவீர்கள். திருமணமானவர்கள் மன உளைச்சலை எதிர்கொள்ள நேரிடும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையைத் துணையை சற்று பிரிந்திருக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications
