Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
துலாம் ராசியில் இருக்கும் புதனால் நவம்பர் 13 வரை இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமா இருக்கும்..
துலாம் ராசிக்கு புதன் சென்றிருப்பது பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரவுள்ளது. இப்போது துலாம் ராசியில் உள்ள புதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தில் புதன் ஒருவரின் ஞானம், புத்திசாலித்தனம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. மேலும் புதன் சுபகிரகமாக கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதனின் நிலை மிகவும் முக்கியமானது. ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அவர் புத்திசாலியாகவும், அறிவாளியாகவும் இருப்பார்கள். அதுவே புதன் வலுவிழந்து இருந்தால், எந்த ஒரு முடிவை எடுப்பதிலும் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

இத்தகைய புதன் 2022 அக்டோபர் 23 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சென்றார். இந்த ராசியில் புதன் 2022 நவம்பர் 13 ஆம் தேதி வரை இருந்து, பின் விருச்சிக ராசிக்கு செல்வார். துலாம் ராசிக்கு புதன் சென்றிருப்பது பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரவுள்ளது. இப்போது துலாம் ராசியில் உள்ள புதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சி காலம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் இக்காலத்தில் வெற்றியைக் காண்பார்கள் மற்றும் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெறுவார்கள். பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புக்கள் உள்ளன. இக்காலத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் சந்திக்கும் பிரச்சனைகளை சிறப்பாக சமாளிப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் இருப்பதால், உடன்பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். பணியிடத்தில் உங்களின் சிறப்பான யோசனை மற்றும் பேச்சால் பாராட்டைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் மற்றவர்களுக்கு அதிகம் உதவ விரும்புவீர்கள். சமூகத்தில் உங்களின் புகழ் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் பழைய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவார்கள். பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இப்பெயர்ச்சியால் பல நற்செய்திகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications