Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
துலாம் ராசியில் புதன் இருப்பதால் நவம்பர் 13 வரை இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனையை சந்திப்பாங்களாம்..
புதன் துலாம் ராசிக்கு செல்லும் போது, அந்த ராசியில் சூரியன், சுக்கிரன், கேது ஆகிய கிரகங்களும் இருந்தன. இந்த சூழ்நிலையில் புதனின் ராசி மாற்றத்தால், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கம் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். அந்த வகையில் புத்திகாரகனான புதன் 2022 அக்டோபர் 26 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சென்றார். இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

ஆனால் புதன் துலாம் ராசிக்கு செல்லும் போது, அந்த ராசியில் சூரியன், சுக்கிரன், கேது ஆகிய கிரகங்களும் இருந்தன. இந்த சூழ்நிலையில் புதனின் ராசி மாற்றத்தால், நவம்பர் 13 வரை சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
புதன் துலாம் ராசியின் லக்ன வீட்டிற்கு சென்றுள்ளதால், மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலைமை சற்று மோசமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். இக்காலகட்டத்தில் சரும பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துங்கள். உங்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். இந்த காலத்தில் உங்கள் எதிரிகள் பலமாக இருப்பார்கள். எனவே நவம்பர் 13 வரை சற்று கவனமாகவே இருங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்கள் நிதி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். ஆனால் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால், பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். முக்கியமாக இக்கால கட்டத்தில் எந்த பண பரிவர்த்தனைகளையும் செய்யாதீர்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலைகளை முடிக்க வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் கடினமாக உழைத்தாலும், கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காமல் போகலாம். மேலும் இக்காலத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். அதிக செலவுகளால் சில பிரச்சனைகள் வரலாம்.

மீனம்
மீன ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிலர் கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். மேலும் உங்கள் தாயின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் அதனாலும் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

புதனால் சந்திக்கும் பிரச்சனைகளை குறைக்கும் பரிகாரங்கள்
* புதன்கிழமைகளில் ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், புத்தகம், நோட் ஆகிய பொருட்களை தானம் செய்யலாம்.
* பசுவிற்கு சாப்பிட புல் கொடுக்கலாம்.
* விநாயகரை வழிபடலாம்.
* உங்கள் பாக்கெட் அல்லது பர்ஸில் பச்சை நிற துணியை வைத்துக் கொள்ளவும்.
* நான்கு முக ருத்ராட்சம் அணிவது அதிர்ஷ்டத்தைத் தரும்.
* மரகத ரத்தினக்கல் அணிவது நல்லது.
* வேலையில் வெற்றி பெற பணியிடத்தில் புதன் யந்திரத்தை வைத்திருங்கள்.



Click it and Unblock the Notifications