Budh Gochar 2022: புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையே மாறப் போகுது..

2022 அக்டோபர் 26 ஆம் தேதி, அதாவது இன்று புதன் தனது சொந்த ராசியில் இருந்து விலகி, நட்பு கிரகமான சுக்கிரன் ஆளும் துலாம் ராசிக்கு செல்கிறார்.

வேத ஜோதிடத்தில் புதன் புத்தி, பேச்சு, தந்திரம், நட்பு, தர்க்கம் ஆகியவற்றின் கிரகமாக கருதப்படுகிறது. இத்தகைய புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் புத்திசாலித்தனமாக செயல்படுவார். மற்றவரை கவரும் வகையில் திறம்பட பேசுவார். அதுவே மோசமான நிலையில் இருந்தால், மோசமான பேச்சால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே புதனின் ராசி மாற்றம் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Budh Rashi Parivartan Mercury Transit in Libra on 26 October 2022 Effects And Remedies On 12 Zodiac Signs In Tamil

இந்த புதன் இதுவரை கன்னி ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் 2022 அக்டோபர் 26 ஆம் தேதி, அதாவது இன்று புதன் தனது சொந்த ராசியில் இருந்து விலகி, நட்பு கிரகமான சுக்கிரன் ஆளும் துலாம் ராசிக்கு செல்கிறார். இந்த துலாம் ராசியில் புதன் நவம்பர் 13 ஆம் தேதி வரை இருப்பார். இப்போது துலாம் செல்லும் புதனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த புதன் பெயர்ச்சி வழக்கத்தை விட மிகவும் நன்மைகளை வழங்குவதாக இருக்கும். சிலர் திடீரென்று வணிகம் விஷயமாக பயணம் மேற்கொள்ளலாம். உங்களின் யோசனைகள் மற்றும் நல்ல தகவல் தொடர்பு மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் வகையில் இருக்கும். புதிய தொழில் தொடங்க சிறந்த நேரம் இது. குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். மறுபும், ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக தோல் பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறத.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வழக்கத்தை விட நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக பல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். இருப்பினும் 10 ஆவது வீட்டில் புதனின் பார்வை விழுவதால், செலவுகளும் அதிகரிக்கும். எனவே ஆரம்பத்தில் இருந்தே செய்யும் செலவுகளில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களின் எதிரிகளை தோற்கடிப்பீர்கள். காதலைப் பொறுத்தவரை சிறப்பான காலமாக இருக்கும். திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணை எப்போதும் உங்களுடன் இருப்பார். இது உங்களின் உறவை வலுப்படுத்தும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் உங்களின் ஆளுமையில் நல்ல மாற்றம் தெரிவதோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தாயுடனான உறவு மேம்படும். சிலர் குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ளலாம். இப்பெயர்ச்சியால் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வத்தை காட்டுவார்கள். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறும். வேலையில் வருமானத்தை உயர்த்த பல சாதகமான வாய்ப்புக்கள் கிடைக்கும். மொத்தத்தில், இந்த புதன் பெயர்ச்சி, வழக்கத்தை விட அதிக நன்மைகளைத் தருவதாக இருக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். புதன் உங்களின் நிதி நிலைமையை மேம்படுத்துவார். இதனால் இக்காலத்தில் உங்களால் பணத்தை அதிகம் சேமிக்க முடியும். குடும்ப சூழல் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இக்காலத்தில் வீட்டில் உள்ளோரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். படிப்பவர்கள் அல்லது வேலை செய்பவர்கள், இக்காலத்தில் வீட்டை விட்டு விலகி இருக்க வேண்டிய சூழல் உருவாகும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும். வணிகர்களும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் எந்த காரணத்திற்காகவும் யாரிடமும் கடன் வாங்கிவிடாதீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் புதன் இந்த ராசிக்காரர்களின் பேச்சை தீவிரப்படுத்துவார். உங்கள் உடன்பிறப்புகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோர் உங்களின் வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள். வேலையில் நல்ல பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். உங்களின் லட்சியங்களை பூர்த்தி செய்வீர்கள். முக்கியமாக புதன் உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார். உங்கள் தந்தையிடம் இருந்து போதுமான உதவியைப் பெறுவீர்கள். சமூகத்தில் உங்களின் நிலை மேம்படும். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடன் நட்பு கிடைக்கும். இருப்பினும், பண விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது எந்த முதலீடுகளையும் செய்யாதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தரை, மன அழுத்தமின்றி இருக்க தினமும் யோகா, உடற்பயிற்சியை செய்ய முயலுங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் வழக்கத்தை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். உங்களின் அழகான குரல் மற்றும் இனிமையான பேச்சால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். புதனின் நிலையால் வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் வருமானம் அதிகரிக்கும். முந்தைய முதலீடுகளால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆனால் அதற்கு மாணவர்கள் ஆரம்பத்தில் இருந்தே படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வாகனம் ஓட்டும் போது அல்லது சாலையில் நடக்கும் போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கலவையான பலன்களையே பெறுவார்கள். இக்காலத்தில் பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைத்தாலும், செலவுகள் அதிகம் இருப்பதால், பணத்தை சேமிக்க முடியாது. முதலீடுகள் செய்வதையோ அல்லது வணிகர்கள் புதிய முயற்சிகளை தொடங்குவதையோ தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கிய பிரச்சனையால் அதிக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். மறுபுறம், வேலை செய்பவர்கள் அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவைப் பெறுவார்கள். இருப்பினும் உடன் பணிபுரிபவர்களுடன் பேசும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இருந்தாலும், வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த புதன் பெயர்ச்சி சற்று பாதகமாக இருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிக செலவு செய்தால், பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே திட்டமிட்டு எந்த செலவையும் செய்யுங்கள். இக்காலத்தில் எந்த வகையான பணப் பரிவர்த்தனைகளை செய்யாதீர்கள். இக்காலத்தில் பயணம் மேற்கொள்பவர்கள், இனிமையான செய்திகளைப் பெறுவார்கள். வணிகர்கள் தேவையற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் பண இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோருடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறு தவறுகளும் உங்களின் எதிரிகளுக்கு சதி செய்ய ஏதுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, முன்பு இருந்ததை விட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வழக்கத்தை விட நற்பலன்களையே பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறனால் உயர் அதிகாரிகள் ஈர்க்கப்படுவார்கள். இக்காலத்தில் நல்ல பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புக்களை பெறுவீர்கள். இதனால் உங்களின் பண பிரச்சனைகள் அனைத்தும் இக்காலத்தில் தீர்க்கப்படும். சிலர் சிக்கிய பணத்தை திரும்ப பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். திருமணமான புது தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் சிறிது முயற்சி எடுத்தாலும், நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும். புதன் உங்களை இக்காலத்தில் சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார். இதனால் பணிபுரிபவர்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். உங்கள் தாயார் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனையை கொண்டிருந்தால், புதன் அதை நீக்கி அதை சமாளிக்கும் தைரியத்தை வழங்குவார். சிலர் வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது அல்லது விற்பது போன்றவற்றை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படக்கூடும். திருமணமான தம்பதிகள் பலர் தங்கள் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பார்கள். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வேலையை முடிப்பதற்கு வழக்கத்தை விட அதிக முயற்சி மற்றும் நேரம் தேவைப்படுவதாக இருக்கும். நிதி விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அதிக செலவுகளால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உங்கள் உடன்பிறப்புகளுடனான உறவு பாதிக்கப்படலாம்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் உங்கள் தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே அவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் வேலையில் முன்னேற புதன் உதவி புரிவார். மேலும் வெற்றிக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். உங்களின் நிதி நிலை மேம்படும். இதுவரை நிதி பிரச்சனையால் எடுக்க முடியாமல் போன அனைத்து முடிவுகளையும் இக்காலத்தில் எடுப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலனில் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக கண்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே கண் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, October 26, 2022, 11:15 [IST]
Desktop Bottom Promotion