Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சிம்மத்தில் இருக்கும் புதனால் ஆகஸ்ட் 21 வரை பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
கல்வி, வியாபாரம், பேச்சு, புத்தி, ஆளுமை போன்றவற்றை பாதிக்கும் கிரகமாக புதன் கருதப்படுகிறது. ஆகஸ்ட் 01 ஆம் தேதி சிம்மம் சென்ற புதனால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
நவகிரகங்களில் புதன் சந்திரன் ஆளும் கடக ராசியில் இருந்து சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 01 ஆம் தேதி சென்றார். இதுவரை புதன் சூரியனுடன் இணைந்து புதாதித்ய யோகத்தை உருவாக்கி, பல நன்மைகளை வழங்கி வந்தார். ஆனால் சிம்ம ராசிக்கு புதன் சென்றிருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நற்பலனையும், சிலருக்கு மோசமான பலனையும் அளிக்கலாம்.

கல்வி, வியாபாரம், பேச்சு, புத்தி, ஆளுமை போன்றவற்றை பாதிக்கும் கிரகமாக புதன் கருதப்படுகிறது. எனவே இந்த புதன் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வின் பல பகுதிகளில் இடையூறை சந்திக்கலாம். இப்போது ஆகஸ்ட் 01 ஆம் தேதி சிம்மம் சென்ற புதனால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் சென்றிருப்பதால், வேலை மற்றும் பண விஷயங்களில் சற்று பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மீதான உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். ஆனால் இக்காலத்தில் உங்களின் செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனையை சந்திப்பீர்கள்.

கடகம்
கடக ராசியில் இருந்து சிம்மத்திற்கு புதன் சென்றிருப்பதால், அதிக செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தினருக்காக அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வெற்றி கிடைக்காமல் ஏமாற்றமடைய வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சற்று மோசமாக இருக்கும்.

கன்னி
புதன் கன்னி ராசியின் அதிபதியாக இருந்தாலும், 12 ஆவது வீட்டில் இருப்பதால், நிறைய பெரிய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். மாணவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். திருமண வாழ்க்கையில் சண்டைகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை பாதிக்கப்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி காலம் சாதகமற்றதாக இருக்கும். வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் சிரமங்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் கடினமான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். மாணவர்கள் படிப்பைத் தொடர சிரமப்பட வேண்டியிருக்கும். ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு கடின உழைப்பு எவ்வித நல்ல பலனையும் அளிக்காது.

மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் இருப்பதால், எல்லா விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் பல சவால்களை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும். வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையே சமநிலையைப் பராமரிப்பது கடினமாக இருக்கும். வேலையில் மன அழுத்தம் ஏற்படலாம் மற்றும் உங்கள் கோபமும் அதிகரிக்கும். இக்காலத்தில் சர்ச்சைகளில் இருந்து விலகி வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.



Click it and Unblock the Notifications