Latest Updates
-
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க..
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் அடுத்த 21 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது..
2022 ஆகஸ்ட் 01 ஆம் தேதி நிகழ்ந்த புதனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதித்தாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் நற்பலன்களை மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும்.
நவகிரகங்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. அதில் புத்தி மற்றும் பேச்சு ஆகியவற்றிற்கு காரணி கிரகம் தான் புதன். இந்த புதன் ஜூலை 31 வரை கடக ராசியில் பயணித்து, ஆகஸ்ட் 01 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் பலன் 12 ராசிகளிலும் இருக்கும். அதுவும் புதன் சிம்ம ராசிக்கு செல்வதால், நிச்சயம் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் காணப்படும். குறிப்பாக புதனின் ராசி மாற்றம் வணிகம், பேச்சு, பங்குச் சந்தை ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதித்தாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் நற்பலன்களை மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும். இப்போது 2022 ஆகஸ்ட் 01 ஆம் தேதி சிம்மம் சென்ற புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் புதன் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக பெற்றோரால் பண பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய தொழில் மற்றும் வியாபார வாய்ப்புகளும் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட தொழில் செய்து வந்தால், வருமானம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் இருப்பதால், இப்பெயர்ச்சி காலம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. புதனின் ராசி மாற்றம் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். திடீரென்று பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்களின் மரியாதை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் பண பலன்களைப் பெறுவீர்கள். குடும்பச் சூழல் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தந்தையிடம் இருந்து பண பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புதிதாக தொழில் தொடங்கியிருந்தால், இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் இருப்பதால், மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பண பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
