Budh Gochar 2022: சிம்மம் செல்லும் புதனால் அடுத்த 21 நாட்கள் இந்த ராசிகளுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும்..

நவகிரகங்களில் புத்திகாரகன் தான் புதன். இந்த புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நுழைகிறார். இந்த சிம்ம ராசியில் புதன் 21 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை இருந்து பின் கன்னி ராசிக்கு செல்வார்.

Budh Rashi Parivartan Mercury Transit in Leo on 01 August 2022 Effects And Remedies On 12 Zodiac Signs In tamil

நவகிரகங்களில் புத்திகாரகன் தான் புதன். இந்த புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நுழைகிறார். இந்த சிம்ம ராசியில் புதன் 21 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை இருந்து பின் கன்னி ராசிக்கு செல்வார். பொதுவாக புதனின் ராசி மாற்றம் வங்கியில் பணிபுரிபவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் அதிக தாக்கம் இருக்கும் என்பதால், சிம்மம் செல்லும் புதனால் இவர்களிடம் சற்று அதிக தாக்கத்தைக் காணலாம். இப்போது 2022 ஆகஸ்ட் 1 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் மாணவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். எந்த வகையான அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினாலும், இக்காலத்தில் நல்ல முடிவு கிடைக்கும். காதலிப்பவர்கள் திருமணம் செய்ய முடிவு எடுத்தால், அதிலும் வெற்றி பெறுவார்கள். பிள்ளைகளின் பொறுப்பு நிறைவேறும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் புதனின் தாக்கம் நன்றாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனம் வாங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தியை இக்காலத்தில் பெறுவீர்கள். வெளிநாட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இம்மாதத்தில் உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால், வெற்றியைப் பெறுவீர்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் கலவையான முடிவுகளை பெறுவீர்கள். உங்களின் விரைவான முடிவெடுக்கும் வலிமை, தைரியம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் மூலம் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். தொண்டு செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் குடும்பத்தில் உள்ள இளையவர்களுடனான உறவு வலிமையாக இருக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நல்ல திறமையான பேச்சாளராக விளங்குவீர்கள். உங்களின் வருமானம் பெருகுவதோடு, பொருளாதார பக்கமும் வலுவடையும். நீண்ட நாட்களாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். ஆடம்பர மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வாங்க அதிகம் செலவு செய்வீர்கள். வியாபாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு, சரும நோய்கள் குறித்து அதிக கவனமாக இருங்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் இக்காலத்தில் முடிவுக்கு வரும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் அனைத்து விஷயங்களிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் யோகம் உண்டாகும்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அலைச்சல் மற்றும் செலவுகள் அதிகமாக இருக்கும். பயணங்களால் நல்ல பலன் கிடைப்பதோடு மட்டுமின்றி, வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய விரும்பினால், அதில் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சண்டைகளை தவிர்த்திடுங்கள். நீதிமன்ற வழக்குகளை வெளியே பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். ஏனெனில் இக்காலத்தில் நிதி இழப்பு ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நல்ல வருமானம் கிடைக்கும். நீங்கள் எடுத்த முடிவும், செய்த பணியும் பாராட்டப்படும். அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். அரசியல் தொடர்பான எந்த முடிவை எடுக்க நினைத்தாலும், அதில் வெற்றி பெறுவீர்கள். உங்களை அவமானப்படுத்த நினைப்பவர்கள், இக்காலத்தில் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். உங்களின் திறமையால் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வேலை, வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். அதுவும் பணியிடத்தில் பதவி உயர்வு, மரியாதை அதிகரிப்பு போன்றவை கிடைக்கும். உயர் அதிகாரிகளுடனான உறவு வலுபெறும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பெற்றோரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் அரசு அதிகாரத்தின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிக தொண்டுகளை செய்வீர்கள். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். திருமண பேச்சு வார்த்தை வெற்றி பெறும். குழந்தைகளைப் பற்றிய கவலைகள் நீங்கும். பயணங்களால் நல்ல பலன் கிடைப்பதோடு, வெளிநாடு செல்ல விண்ணப்பித்த விசாவிலும் வெற்றி கிடைக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் புதனின் தாக்கம் நன்றாக இருக்கும் என்று கூற முடியாது. ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் சதிக்கு பலியாவதைத் தவிர்க்கவும். வேலையை முடித்துவிட்டு நேராக வீட்டிற்கு வர முயற்சி செய்யுங்கள். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சொந்தக்காரர்கள் அவமானப்படுத்த முயற்சிக்கலாம். எனவே சற்று கவனமாக இருங்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதன் சிறப்பான வெற்றியைத் தருவார். இருப்பினும், சில ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம். சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுத்து சிக்கலை சந்திக்கலாம். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறும். மாமியார்-மாமனாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் செய்ய விரும்பினால், இக்காலம் நன்றாக இருக்கும். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும்.

 மீனம்

மீனம்

மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் ஏற்ற இறக்கமாக இருக்கும். இக்காலத்தில் எந்த ஒரு பெரிய தீர்மானமும் நிறைவேற்றப்படும். இருப்பினும், யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து விரும்பத்தகாத செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அரசு அதிகாரத்தின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். அதிக பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். அதிக செலவுகள் காரணமாக நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, August 1, 2022, 11:01 [IST]
Desktop Bottom Promotion