Just In
- 1 hr ago
கணைய புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
- 1 hr ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 2 hrs ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 2 hrs ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
Don't Miss
- News
பீகார்: ஜேடியூவை அழிக்க முயற்சித்ததா பாஜக? நிதிஷ்குமாருக்கு ரவிசங்கர் பிரசாத் சரமாரி பதிலடி!
- Movies
சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் என்ன நடந்தது...வடிவேலுவின் ஜாலி வீடியோவுடன் அப்டேட் தந்த ராதிகா
- Sports
செஸ் ஒலிம்பியாட் 2022: பதக்கம் வென்றவர்கள் யார் யார்? இந்தியாவின் நிலை என்ன? - முழு பதக்கப்பட்டியல்!
- Finance
ப்ளேபாய் அட்டை படத்தில் டொனால்டு டிரம்ப்.. இந்த வேலை கூடவா டிரம்ப் செய்திருக்கிறார்..?
- Automobiles
விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
புதன் மிதுன ராசிக்கு செல்வதால் அடுத்த 15 நாட்கள் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது...
ஜோதிடத்தில் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்களில் புதன் புத்தி, செல்வம் மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. பொதுவாக புதன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 23 நாட்கள் ஆகும். ஆனால் இந்த முறை 68 நாட்களுக்கு பிறகு ராசியை மாற்றுகிறார். அதுவும் 2022 ஜூலை 02 ஆம் தேதி புத்திகாரகனான புதன் சொந்த ராசியான மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் ஜூலை 17 ஆம் தேதி வரை இருந்து, பின் கடக ராசிக்கு செல்வார்.
புதன் மிதுன ராசிக்கு செல்வது அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாவோ, எதிர்மறையாகவோ இருக்கலாம். இருப்பினும் மிதுனம் செல்லும் புதனால் சில ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு படிப்பில் வெற்றியும், உத்தியோகத்தில் நல்ல பலன்களும் கிடைக்கும். குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இக்காலத்தில் குடும்பத்தாரிடம் அதிக அன்பைப் பெறுவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு புதன் பெயர்ச்சி சாதகமாகவும், லாபகரமாகவும் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பயணத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், இக்காலத்தில் நல்ல பணம் சம்பாதிப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். இக்காலத்தில் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள்.

துலாம்
அரசு வேலைக்கு காத்துக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்கார மாணவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.

தனுசு
வேலை மற்றும் தொழிலில் அதிக பணம் பெற நினைப்போருக்கு இந்த புதன் பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்களின் கூடுதல் அர்ப்பணிப்பு உங்கள் மரியாதையை அதிகரிக்கும். இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.