Just In
- 9 min ago
அதிரடி தள்ளுபடி விலையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை இப்போதே அமேசானில் ஆடர் செய்யுங்கள்!
- 58 min ago
அமேசானில் 60% தள்ளுபடி விற்பனையில் உடற்பயிற்சி மற்றும் வீட்டை நவீனமாக்கும் பொருட்களை வாங்குங்கள்...!
- 1 hr ago
வெஜ் சால்னா
- 1 hr ago
மழைக்காலத்தில் உங்க முடி கொட்டாமல் இருக்க & பொடுகு தொல்லை இல்லாமல் இருக்க நீங்க இத பண்ணா போதுமாம்!
Don't Miss
- News
திமுக பிரமுகர் ஓடஓட விரட்டிக் கொலை.... விழுப்புரத்தில் மர்ம கும்பல் வெறிச்செயல்!
- Movies
விவாகரத்து பெற்ற கையோடு பாக்கியா செய்த அதிரடி.. அதிர்ச்சியில் எழில்!
- Technology
எதிர்பார்த்ததை விட ரூ.3,000 கம்மி விலைக்கு அறிமுகமான தரமான Camera Phone!
- Sports
ஹலோ நான் தோனி.. ஒரு 500 ரூபாய் கிடைக்குமா.. ஆன்லைனில் நடைபெறும் புது மோசடி
- Finance
பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. இது தான் சரியான நேரம்.. !
- Automobiles
மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 ஆயிரம் கொடுத்தாலே போதும்!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
மிதுனம் செல்லும் புதனால் ஜூலை 17 வரை இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷார்...
வேத ஜோதிடத்தில் புதன் ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. புத்திகாரகனான புதன் 2022 ஜூலை 02 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழைந்தார். புதனின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் தனிப்பட்ட, நிதி, ஆரோக்கியம், தொழில் போன்ற அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தாக்கம் நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம். ஆனால் மிதுனம் செல்லும் புதனால் சில ராசிக்காரர்களுக்கு சவாலான காலமாக இருக்கும். இப்போது புதன் மிதுன ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் மோசமான பலனை அல்லது அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதையும், புதனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான பரிகாரங்களையும் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். ஆகவே மின்னணு சாதனங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் அவை திருடு போகலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கிய பிரச்சனையால் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. சிலர் இக்காலத்தில் ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு மனஅமைதி அடைவார்கள். வெளிநாட்டு வியாபாரிகளுக்கு ஆதாயம் உண்டு. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். புதன்கிழமையன்று பசுவிற்கு பச்சை புல் கொடுப்பது தோஷ நிவர்த்திக்கு பலன் தரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். எனவே இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் உங்கள் ஆரோக்கியம் திடீரென்று மோசமடையும். இந்த ராசியைச் சேர்ந்த ஊழியர்கள் திடீரென்று சில பாதகமான மாற்றங்களைக் காணலாம். தேலையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் குடும்பத்தில் வெளிநாட்டில் வசித்து வந்தால், அவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சிலருக்கு விரைவான நிதி ஆதாயமும் உண்டு. புதனின் தோஷம் குறைய விநாயகப் பெருமானை வழிபடவும்.

தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் தனுசு ராசிக்காரர்கள் திருமண வாழ்வில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் சிறிய பிரச்சனைகள் கூட பெரிய சர்ச்சைக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் துணையுடன் நல்ல உறவை பேண முயலுங்கள். இக்காலத்தில் உங்கள் பேச்சுக்கள் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். பணிபுரிபவர்கள் பணிச்சுமையால் மன அழுத்தத்தை சந்திக்கக்கூடும். ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கு இக்காலத்தில் ஓரளவு அனுகூலங்கள் கிடைக்கும். புதன் தோஷம் நீங்க புதன் மந்திரத்தை உச்சரிப்பது உங்களுக்கு நன்மைகளைத் தரும்.

மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். எனவே இக்காலத்தில் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்களைப் புகழ்ந்தவர்களே உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களுக்கு எதிராகச் சதி செய்யலாம். எனவே கவனமாக இருங்கள். திருமண வாழ்க்கையிலும் சில முரண்பாடுகள் காணப்படலாம். குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடல்நலக்குறைவு உங்கள் கவலையை அதிகரிக்கலாம். பரிகாரமாக உங்கள் சகோதரி அல்லது அத்தைக்கு எதையேனும் வாங்கிக் கொடுங்கள்.

புதன் பரிகாரங்கள்
* பச்சை நிறத்தில் ஆடைகளை அணியுங்கள்.
* உங்கள் சகோதரிகள் மற்றும் அத்தைகளை மரியாதையுடன் நடத்துங்கள்.
* புதனின் அதிபதியான விஷ்ணுவை வழிபடுங்கள்.
* புதன் கிழமைகளில் முழு பக்தியுடன் தர்மம் செய்யுங்கள். ஜோதிட சாஸ்திரத்தில், தர்மம் செய்வது நல்ல செயல்களைச் செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
* மரகத ரத்தினத்தை அணியுங்கள்.