மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...

சொந்த ராசியான மிதுன ராசிக்கு புதன் செல்வதால், சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் சற்று மோசமான பலனையும் பெறலாம். இப்போது 2022 ஜூலை 02 ஆம் தேதி புதன் மிதுன ராசிக்கு செல்வதால் 12 ராசிகளும் பெறும் பலன்களைக் காணலாம்.

வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தனது ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜூலை மாதத்தில் 5 முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதில் முதலில் பேச்சு, புத்திசாலித்தனம், வியாபாரம் போன்றவற்றின் காரணியான புதன் ராசியை மாற்றப் போகிறார். அதுவும் புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு 2022 ஜூலை 02 ஆம் தேதி செல்கிறார். அதன் பின் 2022 ஜூலை 17 ஆம் தேதி கடக ராசிக்கு செல்வார். அதைத் தொடர்ந்து மாத இறுதியில், அதாவது ஜூலை 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்வார்.

Mercury Transit In Gemini On 02 July 2022: Effects On Zodiac Signs And Remedies In Tamil

சொந்த ராசியான மிதுன ராசிக்கு புதன் செல்வதால், சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் சற்று மோசமான பலனையும் பெறலாம். இப்போது 2022 ஜூலை 02 ஆம் தேதி புதன் மிதுன ராசிக்கு செல்வதால் 12 ராசிகளும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் தகவல் தொடர்பு திறன்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இது பலரையும் ஈர்க்கும். இக்காலத்தில் சிறு பயணத்திற்கு வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் இக்காலத்தில் புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இது நல்ல பலனளிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. பல சவால்களை சந்திக்க நேரிடும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில், உங்கள் இமேஜைக் கெடுக்க முயற்சிப்பார்கள். எனவே கவனமாக இருங்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். உங்கள் பெற்றோரிடம் இருந்து நிறைய செல்வத்தைப் பெறுவீர்கள் மற்றும் கடந்த கால முதலீடுகள் கைக்கு வரும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் சற்று வசீகரமாக இருப்பீர்கள். அதனால் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அனைவருக்கும் உங்களைப் பிடிக்கிறது. இயற்கை மற்றும் தோட்டக்கலை மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிதாக முதலீடு செய்ய சரியான நேரம் இது. ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். அடிக்கடி உடலை பரிசோதனை செய்யுங்கள்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் இப்பயணத்தால் எந்த பலனும் கிடைக்காமல் போகலாம். மன அழுத்தம் காரணமாக தூக்க பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் உடன்பிறந்தவர்களுடனான உறவு சுமூகமாக இருக்காது. இக்காலத்தில் புத்திசாலித்தனமாக பணத்தை செலவு செய்யுங்கள். இல்லாவிட்டால் நிதி நிலைமை மோசமடையும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் மற்றவர்களிடம் நன்றாக பழகுவீர்கள். நண்பர்களுடன் அதிகம் பேசுவீர்கள். நிதியைப் பொறுத்தவரை, குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சில பண ஆதாயங்கள் இருக்கும் மற்றும் அவர்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, காதல் மற்றும் ரொமான்ஸ் நிறைந்திருக்கும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். உங்கள் நகைச்சுவை பேச்சுக்களால் அவர்களை புண்படுத்தாதீர்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களைச் சுற்றி அமைதியும், ஆறுதலும் இருக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். தொழில் வாழ்க்கையில், நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் பெயரும், புகழும் மேம்படும்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் தந்தையுடனான உறவு மேம்படும். இருப்பினும், உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் உங்கள் நற்பெயர் மேம்படும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கையில் மன அமைதியும் நேர்மறையும் இருக்கும். மூத்த உடன்பிறப்புகளுடனான உறவு நன்றாக இருக்கும். இக்காலத்தில் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். எனவே உங்கள் உணவு மற்றம் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துங்கள். இக்காலத்தில் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் திருமணம் செய்ய நினைப்பவர்கள் அதற்கு முயற்சிப்பது நல்லது. ஏனெனில் இக்காலம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. தொழிலதிபர்கள் இக்காலத்தில் புதிய ஒன்றை தொடங்க வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவார்கள். பணிபுரிபவர்களுக்கு, இக்காலத்தில் புதிய வாய்ப்புக்களும், அங்கீகாரமும் கிடைக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்காது மற்றும் பல ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்படுவீர்கள். குறிப்பாக நரம்பு வலி மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம். தொழிலைப் பொறுத்தவரை, பணியிடத்தில் உங்கள் குழு உறுப்பினர்களுடன் நன்றாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் சிறந்த முடிவுகள் கிடைக்கும். மேலும் சில புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறுவீர்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் மாணவர்கள் அனுகூலமான முடிவுகளை அடைவார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை காதல் நிறைந்து இருக்கும். இக்காலத்தில் எந்த முதலீடும் செய்ய வேண்டாம்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கையைத் துணையை இக்காலத்தில் சந்திக்கலாம். புதிய வாகனம் அல்லது எலக்ட்ரானிக் கேஜெட் வாங்குவீர்கள். உங்கள் பணியிடத்தில் நீங்கள் நல்ல ஊக்கத்தொகையைப் பெறவீர்கள் மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, July 1, 2022, 13:25 [IST]
Desktop Bottom Promotion