Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
புதன் கடக ராசிக்கு சென்றுள்ளதால் ஜூலை 31 வரை இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகுது...
ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகங்களில் புதன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு ஜூலை 17 ஆம் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு சென்றார். புதன் கடக ராசிக்கு சென்றுள்ளதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்?

ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகங்களில் புதன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு ஜூலை 17 ஆம் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு சென்றார். இந்த கடக ராசியில் புதன் ஜூலை 31 ஆம் தேதி வரை இருந்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்வார். புத்தி, தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியான புதன் கடக ராசிக்கு செல்வது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்களும் கிடைக்கலாம். இப்போது புதன் கடக ராசிக்கு சென்றுள்ளதால் எந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சி காலம் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் அனைத்து வேலைகளும் எளிதில் முடிவடையும். திடீர் பணவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். உடன்பிறப்புக்களின் முழு ஆதரவு கிடைக்கும். வழக்கறிஞர்கள், மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், ஆசிரியர்களுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் பல நல்ல செய்திகளை பெறுவார்கள். நிதி நிலைமை மேம்படும் வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இந்த வீடு வருமானம் மற்றும் லாபத்தின் வீடாக கருதப்படுகிறது. எனவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் அறிவும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். முக்கியமாக இந்த ராசியின் அதிபதி புதன். எனவே இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் திடீர் பண பலனைப் பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இந்த வீடு தொழிலைக் குறிக்கிறது. ஆகவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மேலும் தங்களின் வேலையால் பாராட்டுக்களையும் பெறுவார்கள்.

மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி நன்மைகளை அள்ளி வழங்கும் காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்வது சாதகமாக இருக்கும். உங்களின் கௌரவம் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
