Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
கடகத்தில் உள்ள புதனால் ஜூலை மாதத்தின் கடைசி 2 வாரம் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
ஜூலை 17 ஆம் தேதி புதன் கடக ராசிக்கு மாறியுள்ளார். 2022 ஜூலை 17 ஆம் தேதி புதன் கடக ராசிக்கு சென்றதால் 12 ராசிகளும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.
நவகிரகங்களில் யுவராஜா என்று அழைக்கப்படும் புதன், ஜூலை 02 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்து பயணிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் 15 நாட்கள் கழித்து, அதாவது ஜூலை 17 ஆம் தேதி புதன் கடக ராசிக்கு மாறியுள்ளார். இந்த கடக ராசியில் ஜூலை 31 ஆம் தேதி வரை இருந்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்வார். ஒரே மாதத்தில் புதன் குறுகிய காலத்தில் இரண்டு ராசிகளுக்கு மாறி, பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.

புத்திகாரகனான புதனின் ராசி மாற்றம் வியாபாரம் மற்றும் இளைஞர்களின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, அனைத்து ராசிகளிலும் புதனின் ராசி மாற்றத்தின் தாக்கம் இருக்கும். இப்போது 2022 ஜூலை 17 ஆம் தேதி புதன் கடக ராசிக்கு சென்றதால் 12 ராசிகளும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் வியாபாரம் நன்றாக இருந்தாலும், சற்று மன உளைச்சல் இருக்கும். இக்காலத்தில் ரகசிய எதிரிகள் ஏராளமாக இருப்பார்கள். உங்களை அவமானப்படுத்த கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிட மாட்டார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நற்செய்திகள் கிடைக்கும். வீடு வாகனம் வாங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் உங்கள் இயல்பு மென்மையாக இருக்கும். கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். பயணத்தால் அதிக செலவு ஏற்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகளும் வெற்றி பெறும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் நிதி நிலைமை பலப்படும். நீண்ட நாட்களாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். திறமையான பேச்சுத் திறமையால் மோசமான சூழ்நிலையையும் சமாளிப்பீர்கள். ஆடை மற்றும் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். விருந்தினரின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சருமம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் அனைத்து வகையிலும் நன்மைகளைத் தருவார். இருந்தாலும், அதிப்படியான செலவுகளால் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். ஆனால் வணிகம் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், மரியாதையும் கூடும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட சாதகமான காலம். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு உண்டாகும் வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் அதிக அலைச்சலையும், செலவுகளையும் சந்திக்க நேரிடும். பணப் பரிவர்த்தனை விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா போன்றவற்றிற்கு விண்ணப்பட்ட விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இக்காலம் மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் எல்லா வகையிலும் வருமானம் பெருகும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்கும். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவுகள் பலப்படும். மாணவர்களுக்கும், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும் நேரம் சாதகமாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். நீங்கள் ஏதேனும் பெரிய வேலையைத் தொடங்க விரும்புகிறீர்களா அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புகிறீர்களா, அப்படியானால் தாமதிக்காமல் இக்காலத்தில் செய்யுங்கள். அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வும், மரியாதையும் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பெற்றோரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இது அதிர்ஷ்டத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வத்தையும் அதிகரிக்கும். ஊர் சுற்றுவதற்கும், தொண்டு செய்வதற்கும் அதிகமாகச் செலவுகளை செய்வீர்கள். உங்களின் முடிவுகளும் செலவுகளும் பாராட்டப்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. விருந்தினர்களின் வருகையால் வீட்டுச் சூழல் இனிமையாக இருக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படவிடாதீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் எதிர்பாராத பல ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள். திருமண வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்படவிடாதீர்கள். இக்காலத்தில் கூட்டுத் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருங்கள்.

மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் பெரும் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்வில் இனிமை அதிகரிக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறும். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். ரியல் எஸ்டேட் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனம் வாங்க முயற்சி செய்தால் அதற்கு இக்காலம் சாதகமாக அமையும். மாணவர்களுக்கும் இது நல்ல நேரம்.

கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இக்காலம் நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகள் ஏற்படும்.இக்காலத்தில் யாருக்காவது அதிகப் பணத்தைக் கடனாகக் கொடுத்தால், அந்தப் பணம் சரியான நேரத்தில் கிடைக்காது. இரகசிய எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள். நீதிமன்றங்கள் தொடர்பான விஷயங்களை வெளியே தீர்த்துக் கொள்வது நல்லது. பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டில் குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகளும் வெற்றி பெறும்.

மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் நீங்கள் ஏதேனும் பெரிய வேலையைத் தொடங்க விரும்பினால் அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கும் இக்காலம் நன்றாக இருக்கும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் குழந்தை தொடர்பான கவலைகள் நீங்கும். புது தம்பதியருக்கு குழந்தை பிறக்கும் யோகம் உண்டு. நீங்கள் காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அரசின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications