Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
கும்பம் செல்லும் புதனால் இந்த 4 ராசிக்கு யோகம் அடிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
புதன் மார்ச் 6 ஆம் தேதி கும்ப ராசிக்கு சென்றுள்ளதால், 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் மற்றும் அவர்கள் எந்த மாதிரியான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை காண்போம்.
ஜோதிடத்தில், புதன் கல்வி, வேலை, வியாபாரம் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாவார். இப்படிப்பட்ட புதன் 2022 மார்ச் 6 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறியுள்ளார். கிரகங்கள் ராசியை மாற்றும் போது அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதுவும் புதன் மார்ச் 6 ஆம் தேதி கும்ப ராசிக்கு சென்றுள்ளதால், 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் மற்றும் அவர்கள் எந்த மாதிரியான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும் உடன்பிறந்தவர்களுடனான உறவு வலுவாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியால் நற்செய்திகள் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இந்த வீடு கர்மாவின் வீடு. புதன் உங்கள் ராசிக்கு 2 மற்றும் 5 ஆவது வீட்டின் அதிபதியாவார். இவர் 10 ஆவது வீட்டிற்கு சென்றுள்ளதால், இக்காலத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் முழுமையாக முடிக்கப்படும். புதிய திட்டங்களால் லாபத்தைப் பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மொத்தத்தில், இந்த பெயர்ச்சி காலம் உங்களுக்கு மிகவும் அற்புதமாகவும் சாதகமாகவும் இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் சென்றிருப்பதால், இந்த பெயர்ச்சி காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த 7 ஆவது வீடு பயணம், கூட்டு மற்றும் திருமணம் ஆகியவற்றின் வீடாகும். இதனால் இக்காலத்தில் உங்கள் கௌரவம் உயரும். வங்கி, கணக்கு மற்றும் மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களின் வருமானம் இக்காலத்தில் உயரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இந்த இரண்டாவது வீடு பேச்சு மற்றும் பண வீடு ஆகும். இக்காலகட்டத்தில் நீங்கள் கடனாக கொடுத்த பணத்தை திரும்பப் பெற வாய்ப்புள்ளது. புதன் உங்கள் ராசியின் 6 ஆவது வீடான எதிரி மற்றும் 9 ஆவது வீடான செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அதிபதி. ஆகவே இந்த புதன் பெயர்ச்சியால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications