For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துலாம் ராசியில் புதன் பின்னோக்கி செல்வதால் உஷாராக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

நவகிரகங்களில் புதன் துலாம் ராசியில் இருந்து செப்டம்பர் 27, 2021 அன்று காலை 10:40 மணிக்கு பின்னோக்கி செல்கிறது. அங்கிருந்து அக்டோபர் 18, 2021 அன்று கன்னி ராசியில் நேரடியாக மாறும்.

|

நவகிரகங்களில் புத்திகாரகன் தான் புதன். இந்த புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் எந்த ஒரு விஷயத்திலும் நல்ல முடிவுகளை எடுப்பார். அதுவே புதன் மோசமான நிலையில் இருந்தால், அவர் தவறான முடிவுகளால் பல பிரச்சனைகளையும், இழப்பையும் சந்திப்பார்.

Mercury Retrogrades in Libra On 27 September 2021 Effects on Zodiac Signs in tamil

இத்தகைய புதன் வருடத்திற்கு மூன்று முறை பின்னோக்கி நகரும். ஒவ்வொரு பின்னடைவும் சுமார் 3 வாரங்கள் நீடிக்கும். வேத ஜோதிடத்தில், புதன் தகவல் தொடர்பு கிரகம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த புதன் பின்னோக்கி செல்லும் போது, தகவல் தொடர்பு விஷயத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மற்றவர்களுடன் தொடர்புகொள்வது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கவோ அல்லது விரிவான பயணத் திட்டங்களைச் செயல்படுத்தவோ இது சாதகமான நேரமாக இருக்காது.

தகவல் தொடர்பு, வணிக உணர்வு, பகுப்பாய்வு மற்றும் கவனிப்பு திறன்களை வழங்கும் புதன் துலாம் ராசியில் இருந்து செப்டம்பர் 27, 2021 அன்று காலை 10:40 மணிக்கு பின்னோக்கி செல்கிறது. அங்கிருந்து அக்டோபர் 18, 2021 அன்று கன்னி ராசியில் நேரடியாக மாறும். இப்போது பின்னோக்கி செல்லும் புதனால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியைப் பொறுத்தவரை, புதன் 7 ஆவது வீட்டில் பின்வாங்குகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்களின் திருமண வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திப்பார்கள் மற்றும் தம்பதியரிடையே சில தவறான புரிதல்களுக்கும் வழிவகுக்கும். இந்த நேரத்தில், எந்த திருமண தேதியையும் அமைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. வணிக கூட்டாண்மை மற்றும் வர்த்தகத்தில் இருப்பவர்கள் தங்களின் பொறுப்பில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில் இது பணியிடத்தில் மோதல்களைத் தவிர்க்க உதவும். முக்கியமாக எந்த விதமான பயணத்தையும் தவிர்க்கவும். ஏனெனில் அது உங்களுக்கு எந்த நன்மையையும் வழங்குவதற்கு பதிலாக இழப்புகளாக மாறும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியைப் பொறுத்தவரை, புதன் 6 ஆவது வீட்டின் பின்வாங்குகிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் செய்யும் முதலீடுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் பண இழப்பிற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வியில் சற்று கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளன. எனவே சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியை தவறாமல் பின்பற்றுங்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் பின்வாங்குகிறார். இதனால் இக்காலத்தில் தவறாக பேசுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படலாம். இக்காலத்தில் பழைய நண்பர்களை சந்திக்கலாம். உங்கள் தாயுடனான பிரச்சனைகள் மற்றும் சொத்து தொடர்பான பிரச்சனைகளும் குறையும். வீட்டின் சூழல் பெரும்பாலும் இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் எதுவும் பெரிதாக தொந்தரவு செய்யப் போவதில்லை.

கடகம்

கடகம்

கடக ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் பின்வாங்குகிறார். இக்காலத்தில் நீங்கள் சொத்து தொடர்பான விஷயங்களில் ஈடுபடலாம். சொத்து விஷயங்கள் எளிதில் தீர்க்கப்படாது மற்றும் தாமதத்தை ஏற்படுத்தலாம் என்பதால் சற்று சவாலான நேரத்தை நீங்கள் சந்திக்க நேரிடும். தாயின் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நிதி ரீதியாக, தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள் மற்றும் பண ஆதாயங்களுக்கான வாய்ப்பையும் பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் பின்வாங்குகிறார். இதனால் உங்கள் உடன்பிறப்புகளுடனான அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்வீர்கள். பயணம் மேற்கொள்ள திட்டம் வகுப்பீர்கள். இது உங்கள் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு நன்றாக இருக்கும். புதன் பின்னடைவால் உங்கள் உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். நிதி ரீதியாக எந்த முதலீடுகளையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது மற்றும் முதலீடு செய்ய திட்டமிடுபவர்கள் அனைத்து கோணங்களையும் ஆராய்ந்து மிகவும் கவனமாக முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். தொழில் ரீதியாக வேலை தேடுபவர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம் மற்றும் இந்த நேரத்தில் உயர் மற்றும் மூத்த அதிகாரிகளுடனான உங்கள் உறவுகள் மேம்படலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் பின்வாங்குகிறார். இக்காலத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சில பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம், இது வீட்டுச் சூழலைத் தொந்தரவு செய்யும். இருப்பினும், சரியான தகவல்தொடர்பு மூலம், நீங்கள் அனைத்து வேறுபாடுகளையும் சரிசெய்ய முடியும். புதிய முதலீட்டுத் திட்டத்தை எடுக்க இது ஒரு நல்ல நேரம். இந்த காலகட்டத்தில் நீங்கள் திடீர் மற்றும் எதிர்பாராத லாபங்களையும் எதிர்பார்க்கலாம். கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் வணிகர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் பின்வாங்குகிறார். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அதிக மத நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வார்கள். மேலும் இந்த காலகட்டத்தில் யாத்திரைக்கு செல்லலாம். நிதி ரீதியாக, இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே மிகவும் கவனமாக இருங்கள் மற்றும் நன்கு ஆராய்ந்த பிறகு முதலீடு செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று அழுத்தமாக உணர்வீர்கள். எனவே அதை தவிர்க்க உடற்பயிற்சி, தியானம் அல்லது யோகாவை தினமும் செய்யுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 12 ஆது வீட்டில் புதன் பின்வாங்குகிறார். நிதி ரீதியாக, இக்காலத்தில் பணத்தை முதலீடு செய்வதற்கான அதிக ஆபத்து உள்ளது. முதலீடு செய்வதற்கு முன் ஒரு நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உறவுகளைப் பொறுத்தவரை, உணர்ச்சிகள் இக்காலத்தில் உங்களை ஆளுகின்றன. எனவே விழிப்புடன் இருங்கள் மற்றும் இதயத்தில் இருந்து சிந்திக்காதீர்கள். இக்காலத்தில் நீங்கள் மிகவும் ரகசியமாக இருப்பீர்கள். வேலையில் இருப்பவர்கள், மேலதிகாரிகளிடமிருந்து சரியான ஆதரவு கிடைக்காமல் போகலாம், எனவே அவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது முன்னெச்சரிக்கையாக இருங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உடல்நலத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். சிறு பிரச்சனைகளும் பெரியதாக மாறலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் பின்வாங்குகிறார். இந்த புதன் பின்னடைவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் உங்களின் சமூக அந்தஸ்தில் உயர்வைக் காண்பீர்கள். நீங்கள் வேலைகளில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு வணிக கூட்டணியில் இருந்தால், இந்த காலம் உங்களுக்கு லாபத்தை தரும். இந்த நேரத்தில், நீங்கள் நண்பர்களுடன் நன்றாக பழகுவீர்கள். இந்த காலத்தில், உங்கள் அன்புக்குரியவர் அல்லது வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவது நல்லது. முக்கியமாக இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு சொத்தை விற்க அல்லது வாங்க திட்டமிட்டால், அதில் வெற்றி பெறலாம்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் பின்வாங்குகிறார். எனவே நீங்கள் வேலை அல்லது தொழில் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். துலாம் ராசியில் உள்ள இந்த புதன் பின்னடைவு உங்கள் தந்தையுடனான உங்கள் உறவை மேம்படுத்தும். மேலும் அவர் கொடுக்கும் எந்த ஆலோசனையும் நீண்ட காலத்திற்கு உங்களுக்கு நன்மை பயக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் சிறப்பான தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது. நீங்கள் மத நிகழ்ச்சிகள், நன்கொடைகள் அல்லது பிற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். வேலைகளுக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உள்ளன.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் பின்வாங்குகிறார். இதனால் உங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் பணியிடத்தில் அல்லது வேலைவாய்ப்பில் சிறந்த வாய்ப்பைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடையலாம். எனவே, சிறந்த ஆரோக்கியத்திற்காக யோகா/தியானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. கும்பத்தில் புதனின் பிற்போக்கு நிலையால், ஒருவரின் உறவு, நட்பு என அனைத்தும் சிறிய தவறான புரிதல், சண்டைகள் மற்றும் தவறான தொடர்பு போன்றவை எழும் என்பதால் கவனமாக இருங்கள்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் பின்வாங்குகிறார். இதனால் இந்த நேரத்தில் நீங்கள் சில மோசமான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் தாய்க்கு சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். இது உங்களுக்கு கவலையாகவும் மன அழுத்தமாகவும் இருக்கும். திருமண உறவின் அடிப்படையில், நீங்கள் சில ஏற்ற தாழ்வுகள் மற்றும் மனநிலை வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். தொழில்ரீதியாக வியாபாரத்திலும் கூட்டாண்மைகளிலும் சில குழப்பங்கள் இருக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் செலவிட வேண்டியிருக்கும். உங்கள் மாமியாருடன் சிறந்த உறவைக் கொண்டிருக்கலாம். எழுத்து, நடனம், புகைப்படம் எடுத்தல் அல்லது ஓவியம் போன்ற ஆக்கபூர்வமான செயல்களைப் பயிற்சி செய்ய இது உங்களுக்கு நல்ல நேரம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mercury Retrogrades in Libra On 27 September 2021 Effects on Zodiac Signs in tamil

Mercury Retrogrades 2021: Mercury Retrogrades in Libra Effects on Zodiac Signs in tamil : The Mercury Retrogrades in Libra will take place on 27th September 2021. Learn about remedies to perform in tamil.
Desktop Bottom Promotion