Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
புதன் வக்ரமாவதால் அக்டோபர் 2 வரை இந்த 5 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்... கவனமா இருங்க..
பேச்சு, புத்தி மற்றும் வியாபாரத்தின் காரணியான புதன் தனது சொந்த ராசியில் செப்டம்பர் 10 ஆம் தேதி வக்ரமாகிறார். இந்த நிலையில் அக்டோபர் 02 ஆம் தேதி வரை இருந்து, பின் நேர்பாதையில் பயணிக்கத் தொடங்குவார்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றம் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் கிரகங்கள் பின்னோக்கி நகர்வதுண்டு. அப்படி நகரும் போது நற்பலன்களைப் விட கெடுபலன்களே அதிகம் கிடைக்கும். ஜோதிடத்தின் புதனின் நிலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. பேச்சு, புத்தி மற்றும் வியாபாரத்தின் காரணியான புதன் தனது சொந்த ராசியில் செப்டம்பர் 10 ஆம் தேதி வக்ரமாகிறார். இந்த நிலையில் அக்டோபர் 02 ஆம் தேதி வரை இருந்து, பின் நேர்பாதையில் பயணிக்கத் தொடங்குவார்.

மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த புதன் வக்ரமாகும் போது சில ராசிக்காரர்கள் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். இது தவிர பல பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இப்போது கன்னி ராசியில் புதன் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ர நிலையில் இருப்பதால், ஆரோக்கியம் மற்றும் நிதி நிலை பாதிக்கப்படும். இக்காலத்தில் எதிரிகள் உங்களின் வேலையில் நிறைய இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். உயர் அதிகாரிகள் உங்களிடம் நன்றாக நடந்து கொள்ளமாட்டார்கள். யாரையும் இக்காலத்தில் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். வேலையை மாற்ற நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தேவையற்ற செலவுகளும் ஏற்படலாம். இதனால் பண பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரமாவதால், அனைத்து விஷயங்களிலும் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். அதிக செலவுகளால் நிதி நெருக்கடியை சந்திப்பீர்கள். குடும்ப வாழ்க்கையிலும் இடையூறுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். யாரிடமும் கடன் வாங்காரீர்கள். பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்திடுங்கள். பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், இக்காலத்தில் நன்கு யோசித்து முடிவெடுங்கள். பணியிடத்தில் அனைவரையும் மரியாதையுடன் நடத்துங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ரமாவதால், வாழ்க்கையில் மிகவும் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிக கோபத்தால் மற்றவர்களை காயப்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப்படலாம். எந்த வேலையை செய்வதற்கு முன்பும் வீட்டு பெரியோர்களின் கருத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். சிலருக்கு இக்காலத்தில் தந்தையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். நிதியைப் பொறுத்தவரை, பணம் செலவழிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமாவதால், செலவுகள் அதிகரிக்கும் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இக்காலத்தில் எங்கும் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்த்திடுங்கள் மற்றும் எந்த புதிய பொருட்களையும் வாங்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ரமாவதால், நிதி நிலைமை, குழந்தைகளுடனான உறவு மற்றும் வேலை மோசமாக பாதிக்கப்படும். பலருக்கு தங்கள் மீதான நம்பிக்கை குறையும். நிதி நிலைமை பலவீனமாக இருக்கும். பங்குச்சந்தையுடன் தொடர்புடையவர்கள் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் கடன் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள். காதலைப் பொறுத்தவரை மோசமாக இருக்கும். ஆனால் வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications