For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் 03 வரை இந்த ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?

|

நவகிரகங்களில் புத்திகாரகனான புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் எந்த ஒரு விஷயத்திலும் நல்ல முடிவுகளை எடுப்பார். அதுவே புதன் மோசமான நிலையில் இருந்தால், அவர் தவறான முடிவுகளை எடுத்து பல பிரச்சனைகளையும், பெரிய இழப்பையும் சந்திப்பார்.

இந்நிலையில் புதன் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். அதைத் தொடர்ந்து புதன் மே 10 ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்க ஆரம்பித்து, ஜூன் 3 ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகி முற்போக்கு நிலையில் மாறி பயணிப்பார். மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியான புதனின் வக்ர பெயர்ச்சியால் 12 ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

புதன் வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் பேச்சுத் திறன் மேம்படும். இக்காலத்தில் உங்களின் மென்மையான பேச்சால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். உங்கள் சிந்தனை சிறந்ததாக இருக்கும். உங்களின் இளைய உடன்பிறப்புகளுடன் சில கருத்து வேறுபாடுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. நிதி நிலையில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். திடீர் நஷ்டம் ஏற்படலாம். எனவே பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வங்கியில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

புதன் வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் பகுப்பாய்வு திறன் மிகவும் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் நன்கு திட்டமிடுவீர்கள். இக்கால கட்டத்தில் நிதி உங்கள் கையில் அதிகம் சேரும். கடந்த கால முதலீடுகளில் இருந்து நன்கு சம்பாதிப்பீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில மனநல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கடுமையான தலைவலி மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! புதன் வக்ர பெயர்ச்சியால் இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. நரம்பு கோளாறு மற்றும் தலைச்சுற்றல் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தூக்கமின்மை பிரச்சனைகளையும் சந்திக்கலாம். உங்கள் செல்போன்கள், தொலைக்காட்சி பெட்டி, ஸ்பீக்கர்கள் போன்றவற்றை கையாளும் போது கவனமாக இருங்கள். செலவுகள் அதிகமாக இருக்கும், இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி நிதி வளத்தையும் செல்வத்தையும் கொண்டு வரும். இந்த காலத்தில் நீங்கள் பொருட்களை பழுதுபார்ப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் நிறைய செலவிடுவீர்கள். உங்கள் பழைய நண்பர்கள் மற்றும் வணிக உறவுகளின் உதவியுடன் நீங்கள் சம்பாதிப்பீர்கள். வியாபாரத்தில் சில முன்னேற்றத்தைக் காணலாம். இக்கால கட்டத்தில் உங்கள் பழைய நண்பர்களுடனான உறவை புதுப்பிப்பீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி காலமானது முதலீட்டு நோக்கங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் பணம் பெருகும். வியாபாரத்தில் வரும் பிரச்சனைகள் மற்றும் சூழ்நிலைகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். உங்கள் வணிக கூட்டாளிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வீட்டின் சூழல் அமைதியற்று இருக்கும். வீட்டு உறுப்பினர்களிடையே தவறான புரிதல்கள் இருக்கும். சில வீட்டுப் பொருட்களை விற்கவோ அல்லது வாங்கவோ இக்காலத்தில் நீங்கள் ஒப்பந்தம் செய்யலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த புதன் வக்ர பெயர்ச்சியால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் மறதியின் காரணமாக மீண்டும் படிக்க வேண்டியிருக்கும். உங்கள் முதலாளியுடனான உங்கள் உறவு நன்றாக இருக்காது. உங்கள் இமேஜ் பாதிக்கப்படலாம். தந்தையுடன் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடலாம். தொழிலதிபர்கள் பணிக்காக சில பயணத் திட்டங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சியானது நிதி விஷயங்களில் சாதகமாக இருக்காது. இக்காலத்தில் திருட்டு அல்லது மதிப்புமிக்க ஒன்றை இழக்கும் வாய்ப்புகள் உள்ளன. பங்கு சந்தையில் வேலை செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரிக்காது என்பது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி எதையும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஒவ்வாமை, மன அழுத்தம், பதட்டம் மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பதோடு, அதற்கு அதிக செலவு செய்ய நேரிடும். மாணவர்களுக்கு இந்தக் காலம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த புதன் வக்ர பெயர்ச்சியானது உங்கள் உறவுகளில் குறிப்பாக உங்கள் மனைவியுடன் சில ஏற்ற தாழ்வுகளை கொண்டு வரும். நிறைய தவறான புரிதல்களையும் குழப்பங்களையும் சந்திக்க நேரிடும். இந்த காலம் உங்கள் துணையின் ஆரோக்கியத்திற்கு சாதகமாக இல்லை. கூட்டு முயற்சியில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களுக்கு எதிராக சில சதி இருக்கலாம். இந்த காலகட்டத்தில் பணத்தை முதலீடு செய்வது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். டனைத் திரும்பப் பெற முடியாது என்பதால், கடன் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! புதன் வக்ர பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் நன்றாக இருக்காது. திருமண வாழ்வில் சண்டை சச்சரவுகள் இருந்தவர்கள் இந்த நேரத்தில் அதிக பிரச்சனைகளையும் சண்டைகளையும் சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அல்லது கூட்டு வணிகம் செய்பவர்கள், தங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். பணியிடத்தில் நல்ல பணிக்கான பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் சிறந்த சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் திறன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை உருவாக்குவீர்கள்.

மகரம்

மகரம்

புதன் வக்ர பெயர்ச்சியால் மகர ராசிக்கார மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். உங்கள் பிள்ளைகளின் உடல்நலக்குறைவால் நீங்கள் கவலைப்படலாம். சிலர் பாதியில் விட்ட படிப்புக்களை படிக்க தொடங்கலாம். வெளிநாட்டு கல்லூரிகளில் சேர்க்கைக்கு திட்டமிட்டால், இந்த காலகட்டத்தில் நீங்கள் முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்களைப் புத்துணர்ச்சியடையச் செய்ய இந்த காலம் சிறப்பானது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சியால் வீட்டின் சூழல் சிறப்பாக இருக்காது. நிலம் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு இந்தக் காலகட்டம் சிறப்பானது. குடும்பத்தை விட்டு விலகி வாழ்பவர்கள் வீடு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், வசிக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படும். உங்கள் தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த புதன் வக்ர பெயர்ச்சியால் உங்கள் பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மீண்டும் இணைவதற்கு இந்த காலம் நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உடன் பிறப்புகளுடன் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் நல்ல பலன்களைத் தரும். உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் எண்ணங்களையும் மனதில் உள்ளதையும் விளக்குவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். இது உங்கள் காதல் உறவுகளில் சில இடையூறுகளை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mercury Retrograde in Taurus on 10th May 2022, Effects and Remedies on 12 Zodiac Signs in Tamil

Mercury Retrograde in Taurus May 2022 Effects on Zodiac Signs in tamil: The Mercury Retrograde in Taurus will take place on 10th may 2022. Learn about remedies to perform in tamil.
Desktop Bottom Promotion