For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கன்னி ராசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்க போகுது தெரியுமா?

புதன் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி இரவு 8.46 மணிக்கு தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நேர்பாதையில் திரும்பி பயணிக்கிறார். அதன் பின் துலாம் ராசிக்கு நவம்பர் 2 ஆம் தேதி காலை 9.43 மணிக்கு செல்கிறார்.

|

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் தான் புதன். வேத ஜோதிடத்தில், புதன் பொதுவாக நன்மை பயக்கும் கிரகமாக கருதப்படுகிறது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் இது தீங்கு விளைவிக்கும். ஒருவரது ஜாதகத்தில் புதன் 6, 8,12 ஆவது வீட்டில் இருக்கும் போது, அது சாதகமான முடிவுகளை வழங்கத் தவறும். புதனை கடவுளின் தூதர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன் ஆவார். புதன் ஒருவரின் வாழ்க்கையில் ஞானத்தையும் புத்திசாலித்தனத்தையும் குறிக்கிறது.

Mercury Direct in Virgo On 18 October 2021 Effects on Zodiac Signs In Tamil

புதன் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி இரவு 8.46 மணிக்கு தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நேர்பாதையில் திரும்பி பயணிக்கிறார். அதன் பின் துலாம் ராசிக்கு நவம்பர் 2 ஆம் தேதி காலை 9.43 மணிக்கு செல்கிறார். புதன் பிற்போக்கு/வக்ர நிலையில் இருக்கும் போது, விரக்தி, பதற்றம் அல்லது மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம். ஆனால் நேர்பாதையில் திரும்பி மிகவும் சாதகமான நிலையில் இருப்பதால், புதன் நன்மையையே வழங்கும். இப்போது கன்னி ராசியில் நேர்பாதையில் திரும்பி பயணிக்கும் புதனால் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் நேர்பாதையில் திரும்பி இயல்பான வேகத்தில் பயணிப்பதால், புதிய தொடக்கத்திற்கான ஆசை மற்றும் புதிய அனுபவங்களைப் பெறுவதற்கான விருப்பம் இருக்கும். உங்கள் திறமைகளை மேம்படுத்தவும், கூடுதல் நேரத்தை உருவாக்கவும் நேரம் இது. இந்த காலகட்டத்தில் வருமானம் சராசரியாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த காலத்தில் குடும்ப வாழ்க்கையில் சில பதட்டங்கள் இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் ரீதியாக நன்றாக இருப்பீர்கள். ஆனால் வேலைப்பளு காரணமாக மனதளவில் சற்று மன அழுத்தத்தில் இருப்பீர்கள். எனவே தியானம் மற்றும் யோகா போன்றவற்றை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின்5 ஆவது வீட்டில் புதன் நேர்பாதையில் திரும்பி இயல்பான வேகத்தில் பயணிப்பதால், இக்காலத்தில் படைப்பாற்றல் பிரகாசிக்கும். நிதி ரீதியாக, உங்கள் நிதிகளை நிர்வகிக்கும் நேரம் மற்றும் உங்கள் செலவுகளைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஏனெனில் இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும், மேலும் உங்கள் வாழ்க்கை முறையை திருப்திப்படுத்த நீங்கள் பெரிய மற்றும் ஆடம்பரமான ஒன்றை வாங்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சில தரமான நேரத்தை செலவிடுவீர்கள். மேலும் திருமணமாகாதவர்கள் புதிய நபர்களைச் சந்திப்பதன் மூலம் ஒரு புதிய காதல் உறவில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. திருமணமானவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளவர்களுக்கும் இந்த காலம் சாதகமானது. ஊகச் சந்தையில் இலாபமும் சாத்தியமாகும். ஆனால் தீவிரமான எதையும் செய்வதையும், பெரும் தொகையை முதலீடு செய்வதையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் முழு கவனத்தையும் செலுத்தி, நடைமுறையில் அனைத்து விஷயங்களையும் கையாள்வீர்கள். தகவல்தொடர்புகளில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும், முன்னெப்போதையும் விட தெளிவாகவும் இருப்பீர்கள். உங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் பகிர்ந்து கொள்ள இது ஒரு சிறந்த நேரம். தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் சகோதரரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிதி ரீதியாக நீங்கள் ஆதாயமடைவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு உடல்நல பிரச்சனைகள் இருக்கலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுங்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் வீட்டிலேயே இருப்பதால், இக்காலத்தில் ஒரு பயணம் மேற்கொள்ள நினைப்பார்கள். வேலையில் புகழ் மற்றும் பணம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும். நிதி ரீதியாக, உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கலாம். மேலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் சிக்கனமாக இருப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும் செயல்பாடுகளிலும் பங்கேற்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஒட்டுமொத்தமாக இக்காலம் உங்களுக்கு சாதகமானது.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இக்காலத்தில் ஒருபடி முன்னேறி தகுதியானதை அடைவதைப் போல் உணர்வார்கள். உங்கள் நிதிகளை கவனித்து நிபுணர்களின் ஆலோசனையுடன் சரியான முதலீட்டைச் செய்ய இது ஒரு நல்ல நேரம். ஏனெனில் இது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு லாபம் தரும். மேலும் உங்கள் தற்போதைய செலவுகளைக் குறைத்து உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும் நீங்கள் திட்டமிடலாம். இந்த காலகட்டத்தில், நீங்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபடலாம். மேலும் நீண்ட பயணங்களும் சாத்தியமாகும் மற்றும் அதில் இருந்து நீங்கள் பயனடைவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில், விஷயங்கள் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இக்காலத்தில் நன்கு திறமையாக தொடர்பு கொள்வார்கள் மற்றும் நிறைய பேசுவார்கள். மேலும் சமூக வலைதளங்கள் மற்றும் தங்கள் போனில் அதிக நேரம் செலவிடுவார்கள். இக்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெறுவீர்கள். நிதி ரீதியாக, காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புத்திசாலித்தனமான முதலீடுகளை செய்வீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், நீங்கள் மிகவும் சமூகமாக இருப்பீர்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒன்றிணைவதற்கு திட்டமிடுவீர்கள். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருப்பீர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் தனியாக நேரம் செலவழிப்பதில் ஆர்வம் காட்டுபார்கள் மற்றும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருப்பார்கள். தொழில் ரீதியாக, நீங்கள் நன்றாகச் செயல்படுவார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் வேலை அல்லது பொறுப்பு இழப்பு ஏற்படலாம். நிதி ரீதியாக, செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்; எனவே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் நண்பர்களிடமிருந்து எதையும் மறைக்காதீர்கள், ஏனென்றால் அவர்கள் உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் உங்களுக்கு உதவப் போகிறார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, குடும்ப உறுப்பினர்களுக்கு சில மருத்துவ செலவுகளை செய்யலாம். ஆனால் பெரிதாக எதுவும் இருக்காது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இக்காலத்தில் பல ஆதாரங்கள் மூலம் சம்பாதிப்பார்கள். தொழில் ரீதியாக சிறப்பாக செயல்படுவார்கள். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். நிதி ரீதியாக, இந்த காலம் உங்களுக்கு பல்வேறு மூலங்களிலிருந்தும் உங்கள் கடந்த கால முதலீடுகளிலிருந்தும் லாபத்தை வழங்கப் போகிறது. தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் அதிக ஈடுபாடு கொள்வீர்கள் மற்றும் அவர்களுடன் பழகுவதில் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கை இந்த காலகட்டத்தில் சராசரியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்கு பிட்டாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இக்காலத்தில் சற்று அதிக உற்சாகத்துடன் இருப்பார்கள். நீங்கள் உங்கள் தொழில் மீது உங்கள் முழு கவனத்தையும் வைத்திருப்பீர்கள், மேலும் முன்பை விட அதிக நம்பிக்கையுடன் வேலை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் மூத்தவர்கள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து முழு அங்கீகாரத்தையும் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் வேலையில் உயர்வு அல்லது போனஸ் அல்லது சலுகைகள் பெற வாய்ப்புகள் இருப்பதால், இந்த காலம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், ஆனால் நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையில் ஆக்கிரமிக்கப்படுவதால் தவறான புரிதலுக்கான வாய்ப்புகள் உள்ளன; எனவே எச்சரிக்கையாக இருங்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையும் உங்கள் வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிக வேலைப்பளுவால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இது அதிர்ஷ்டமான காலம். இக்காலத்தில் நல்ல தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக் கொள்வார்கள். மேலும் இது மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். அதிகப்படியான நம்பிக்கையுடன் இருக்க வேண்டாம் என்றும், பேசும் போது எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக, உங்கள் வாழ்க்கையில் சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால், அதைத் தீர்க்க இது சிறந்த நேரம். இந்த காலத்தில் மத செயல்பாடுகளில் செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். ஆனால் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தை கவனிக்கவும். ஏனெனில் அவர் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நிறைய வேலை செய்தாலும், விரும்பிய முடிவைப் பெற முடியாது. ஆராய்ச்சி தொடர்பான துறையில் இருக்கும் மாணவர்களுக்கு சாதகமான காலம். நிதி ரீதியாக, இந்த காலம் உங்களுக்கு நல்ல இலாபத்தை தரும். தனிப்பட்ட வாழ்க்கையில், மாமியாருடனான உறவுகள் நன்றாக இருக்கும், மேலும் நீங்கள் அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் அவர்களிடமிருந்து ஆதரவையும் பெறலாம். உறவில் சிறு மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், திருமண வாழ்க்கை சராசரியாக இருக்கும். திருமணமாகாதவர்கள் இந்த காலகட்டத்தில் உறவில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் அவர்களுக்கு சாதகமாக இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு காலம் அல்லது ENT பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

மீனம்

மீனம்

வியாபாரம் செய்யும் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் வேலையில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் நல்ல லாபங்களைப் பெறுவார்கள். ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிதி ரீதியாக, காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று பணத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் இருந்த சச்சரவுகள் முடிவுக்கு வரும் மற்றும் வீட்டில் உள்ள அனைவருடனும் ஒருங்கிணைப்பில் இருப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்கு ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஆனால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும், ஆரோக்கியமான உணவை சாப்பிடவும் அறிவுறுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mercury Direct in Virgo On 18 October 2021 Effects on Zodiac Signs In Tamil

Mercury Direct in Virgo Effects on Zodiac Signs in tamil: The Mercury Direct in Virgo will take place on 18th October 2021. Learn about remedies to perform in tamil.
Desktop Bottom Promotion